நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த பர்க் நிறுவனம் கைகளில் கடியாரங் களாக அணிந்து இயக்கக் கூடிய மொபைல் போன்களைத் தயாரித்து வருகிறது. உலக அளவில், மொபைல் போன் விற்பனையில் இரண்டாவது இடத்தைக் கொண்டிருக்கும் இந்தியாவில் தன் வர்த்தகத்தினை விரிவாக் கம் செய்வதற்காக, டில்லியில் இரு விற்பனை மையங்களையும் அலுவலகத்தினையும் அமைக்கிறது. ஏற்கனவே குவஹாத்தி மற்றும் கொல்கத்தாவில் இந்நிறுவனத்தின் விற்பனை மையங்கள் இயங்கி வருகின்றன. முதலில் வட இந்திய மாநிலங்களில் கால் ஊன்றி, பின் ஒன்பது மாதங்கள் கழித்து தென் இந்திய மாநிலங்களில் விற்பனையை மேற்கொள்ள இந்த நிறுவனம் திட்டமிடுகிறது.
இந்நிறுவனம் தயாரிக்கும் கை கடியாரங்கள், ஒரு மொபைல் போன் இயக்கத்தினையும் மேற்கொண்டுள்ளன. இவற்றின் விலை ரூ.9,000 முதல் ரூ.23,000 வரை உள்ளது. தொடக்க நிலை கைக்கடியார மொபைல்களில் அழைப்புகளைப் பெறவும் ஏற்படுத்த வும் மட்டுமே செய்திடும் வசதிகள் உள்ளன. உயர் நிலைக் கடியார மொபைல்களில், மல்ட்டிமீடியா வசதிகளும் உள்ளன. மத்திய நிலையில் ரூ.12,000 என்ற விலையில் உள்ள கடியாரங்களிலும் அனைத்து வசதிகளும் கிடைக்கின்றன. இந்த போன் கள் அனைத்திலும் புளுடூத் வசதி தரப்பட்டுள்ளதால், ஹெட்செட் மூலம் இவற்றை இயக்கலாம். கைகளைக் காதருகே கொண்டு சென்று பேச வேண்டிய தில்லை. இவற்றில் உள்ள ஏ-ஜி.பி.எஸ். வசதி மூலம் இணையம் வழியாக இவற்றின் இருப்பிடத்தினைத் தெரிந்து கொள்ளலாம்.
அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பர்க் நிறுவனம் தயாரிக்கும் கைகடியார மொபைல்கள், அணிந்திருப்பவரின் உடல் நிலை மற்றும் ஆரோக்கியம் குறித்தும் அறிவிக்கும் மொபைல்களாக வடிவமைக் கப்படும். அத்துடன், இப்போது வேகமாகப் பரவி வரும், அண்மைத் தள டேட்டா பரிமாற்ற தொழில் நுட்பத்தினையும் இந்த கடியார மொபைல்களில் கொண்டு வர இருப்பதாக, இந்நிறுவனத்தின் பன்னாட்டளவிலான விற்பனை இயக்குநர் கோயன் பைட்டர்ஸ் தெரிவித்தார். தற்போது ஐந்து விற்பனை மையங்கள் இயங்குவதாகவும் இதன் எண்ணிக்கையை விரைவில் 20 ஆக உயர்த்த இருப்பதாகவும் அவர் கூறினார்.
No comments:
Post a Comment