Sunday, November 11, 2012

இனிய தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள்..!

இனிய தீபாவளி வாழ்த்து

உழைப்பே மத்தாப்பு....! உண்மையே பட்டாசு...!
அறவழி வாழ்வும்......அரவணைப்பும்....
அழகாய் சுழலும்.....தரச் சக்கரம்...!

கோபம் குறைப்பது புஸ் வானம்..!
குழந்தை போல் சிரிப்பது சீனி சரம்..!
அன்பாய் பேசினால் அது அல்வா...!
பாசமாய் நேசித்தால் பால்கோவா...!
ரசித்து வாழ்ந்தால் அது ரசகுல்லா...!
இனிக்க நடந்தால் இனிய பாதுசா..!
பூந்தி கேசரி நெய் முறுக்கு - அது
பக்தி சாந்தி மெய் உணர்வு...!- நாம்
கடமையை ஒழுங்காய் செய்வோம் - நம்
கவலைகள் புஸ்ஸாய்ப் போகும்- நாம்
கடவுளை வணங்கி வாழ்வோம் - வரும்
காலங்கள் சக்சஸ் ஆகும்... ! நம்
இதயம் என்பது திரு விளக்கு - நல்ல
நினைவுகள் அதிலே ஒளி தீபம்...! எனவே
நீங்கள் நினைத்தால் தினமும் தீபாவளி...!
நினைவில் ஏற்றுங்கள் நம்பிக்கை தீப ஒளி..!
அனைவருக்கும் எனது
இதயம் நிறைந்த இனிய தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள்..! 






No comments:

Post a Comment

Blogger templates

Help this Blog Click the link

Like

Facebook likes