Showing posts with label Tech. Show all posts
Showing posts with label Tech. Show all posts

Friday, July 6, 2012

இந்தியா Toll Free numbers

இந்தியாவின் சில Toll Free நம்பர்கள் !

Toll Free Numbers in India ,

Airlines

... Indian Airlines - (1800 180 1407)
Jet Airways - (1800 22 5522)

Spice Jet - (1800 180 3333)
Air India -- (1800 22 7722)
Kingfisher - (1800 180 0101)

Banks

ABN AMRO - (1800 11 2224)
Canara Bank - (1800 44 6000)
Citibank - (1800 44 2265)
Corporation Bank - (1800 443 555)
Development Credit Bank - (1800 22 5769)
HDFC Bank - (1800 227 227)
ICICI Bank - (1800 333 499)
ICICI Bank NRI - (1800 22 4848)
IDBI Bank - (1800 11 6999)
Indian Bank - (1800 425 1400)
ING Vysya - (1800 44 9900)
Kotak Mahindra Bank - (1800 22 6022)
Lord Krishna Bank - (1800 11 2300)
Punjab National Bank - (1800 122 222)
State Bank of India - (1800 44 1955)
Syndicate Bank - (1800 44 6655)

Automobiles

Mahindra Scorpio - (1800 22 6006)
Maruti - (1800 111 515)
Tata Motors - (1800 22 5552)
Windshield Experts - (1800 11 3636)

Computers/IT

Adrenalin - (1800 444 445)
AMD - (1800 425 6664)
Apple Computers - (1800 444 683)
Canon - (1800 333 366)
Cisco Systems - (1800 221 777)
Compaq - HP - (1800 444 999)
Data One Broadband - (1800 424 1800)
Dell - (1800 444 026)
Epson - (1800 44 0011)
eSys - (3970 0011)
Genesis Tally Academy - (1800 444 888)
HCL - (1800 180 8080)
IBM - (1800 443 333)
Lexmark - (1800 22 4477)
Marshal's Point - (1800 33 4488)
Microsoft - (1800 111 100)
Microsoft Virus Update - (1901 333 334)
Seagate - (1 800 425 4535)
Symantec - (1800 44 5533)
TVS Electronics - (1800 444 566)
WeP Peripherals - (1800 44 6446)
Wipro - (1800 333 312)
Xerox - (1800 180 1225)
Zenith - (1800 222 004)

Indian Railway General Enquiry 131
Indian Railway Central Enquiry 131
Indian Railway Reservation 131
Indian Railway Railway Reservation Enquiry 1345,1335,1330
Indian Railway Centralised Railway Enquiry 1330/1/2/3/4/ 5/6/7/8/9

Couriers/Packers & Movers

ABT Courier - (1800 44 8585)
AFL Wizz - (1800 22 9696)
Agarwal Packers & Movers - (1800 11 4321)
Associated Packers P Ltd - (1800 21 4560)
DHL - (1800 111 345)FedEx - (1800 22 6161)
Goel Packers & Movers - (1800 11 3456)
UPS - (1800 22 7171)

Home Appliances

Aiwa/Sony - (1800 11 1188)
Anchor Switches - (1800 22 7979)
Blue Star - (1800 22 2200)
Bose Audio - (1800 11 2673)
Bru Coffee Vending Machines - (1800 44 7171)
Daikin Air Conditioners - (1800 444 222)
DishTV - (1800 12 3474)
Faber Chimneys - (1800 21 4595)
Godrej - (1800 22 5511)
Grundfos Pumps - (1800 33 4555)
LG - (1901 180 9999)
Philips - (1800 22 4422)
Samsung - (1800 113 444)
Sanyo - (1800 11 0101)
Voltas - (1800 33 4546)
WorldSpace Satellite Radio - (1800 44 5432)

Travel

Club Mahindra Holidays - (1800 33 4539)
Cox & Kings - (1800 22 1235)
God TV Tours - (1800 442 777)
Kerala Tourism - (1800 444 747)
Kumarakom Lake Resort - (1800 44 5030
Raj Travels & Tours - (1800 22 9900)
Sita Tours - (1800 111 911)
SOTC Tours - (1800 22 3344)

Healthcare

Best on Health - (1800 11 8899)
Dr Batras - (1800 11 6767)
GlaxoSmithKline - (1800 22 8797)
Johnson & Johnson - (1800 22 8111)
Kaya Skin Clinic - (1800 22 5292)
LifeCell - (1800 44 5323)
Manmar Technologies - (1800 33 4420)
Pfizer - (1800 442 442)
Roche Accu-Chek - (1800 11 4546)
Rudraksha - (1800 21 4708)
Varilux Lenses - (1800 44 8383)
VLCC - (1800 33 1262)

Hotel Reservations

GRT Grand - (1800 44 5500)
InterContinental Hotels Group - (1800 111 000
Marriott - (1800 22 0044)
Sarovar Park Plaza - (1800 111 222)
Taj Holidays - (1800 111 825)

Teleshopping

Asian Sky Shop - (1800 22 1800)
Jaipan Teleshoppe - (1800 11 5225)
Tele Brands - (1800 11 8000)
VMI Teleshopping - (1800 447 777)
WWS Teleshopping - (1800 220 777)

Others

Domino's Pizza - (1800 111 123)

Cell Phones

BenQ - (1800 22 08 08)
Bird CellPhones - (1800 11 7700)
Motorola MotoAssist - (1800 11 1211)
Nokia - (3030 3838)
Sony Ericsson - (3901 1111)

Wednesday, July 4, 2012

ஹிக்ஸ் போஸான்..


கடவுளின் அணுத்துகள் என்று அழைக்கப்படும் ஹிக்ஸ் போஸான் இருப்பது 99.999% உறுதி செய்யப்பட்டுள்ளதாக இது தொடர்பான ஆராய்ச்சியை நடத்தி வரும் விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.
இதன்மூலம் ஹிக்ஸ் போஸான் இருக்கிறதா இல்லையா என்பது தொடர்பான கேள்விகளுக்கு ஓரளவுக்கு விடை கிடைத்திருக்கிறது.
Big Bang எனப்படும் பெரு வெடிப்பைத் தொடர்ந்தே அணுக்களும், மூலக்கூறுகளும், கிரகங்களும், இந்த பேரண்டமும் (universe) உருவாயின என்பது தியரி.
இதன்படி பிக் பேங் வெடிப்பு நிகழ்ந்த கணத்தில் அணுக்கள் ஒலியை விட பயங்கரமான வேகத்தில் எல்லா திசைகளிலும் சிதறின. அப்போது அந்த அணுக்களுக்கு எந்த நிறையும் (mass) இல்லை.
ஆனால், ஹிக்ஸ் போஸான் எனப்படும் 'சக்தியோடு' அவை தொடர்பு கொண்ட பிறகே அந்த அணுக்களுக்கு நிறை கிடைத்தது. இது தான் இந்த பேரண்டம் உருவானதன் அடிப்படை என்று சொல்கிறது ஸ்டாண்டர்ட் மாடல் தியரி.
இந்த கோட்பாட்டின்படி (தியரி) இந்த யுனிவர்ஸ் உருவாக முக்கிய அடிப்படையாக இருந்தவை 12 வகையான அணுத் துகள்கள். அடுத்தடுத்து நடந்த ஆய்வுகளில் 11 அணுத் துகள்கள் அடையாளம் காணப்பட்டுவிட்டன. அவை இருப்பதையும் பார்த்துவிட்டோம்.
ஆனால், இதுவரை கண்ணுக்குப் புலப்படாத 'சூப்பர் ஸ்டார்' தான் ஹிக்ஸ் போஸான். சரி, இதைத் தான் கண்டுபிடிக்கவே முடியவில்லையே, விட்டுவிட வேண்டியது தானே என்றால், அதுவும் முடியாது. காரணம், அது இந்த யுனிவர்ஸ் உருவானது தொடர்பான ஒட்டு மொத்த தியரிகளையும் குப்பைக்குக் கொண்டு போய்விடும்.
இதையடுத்தே ஹிக்ஸ் போஸானை கண்டுபிடிக்கும் முயற்சிகள் தொடங்கின. அமெரிக்காவில் தான் முதலில் இந்த ஆய்வுகள் நடந்தன. பல ஆண்டுகள் நீடித்த இந்த சோதனைகள் எந்த முடிவையும் எட்டாததால், அந்த ஆய்வுகளுக்கு நிதி தருவதை அமெரிக்க அரசு நிறுத்திவிட்டது.
இதைத் தொடர்ந்தே பிரான்ஸ்-சுவிஸ் எல்லையில் ஜெனீவா அருகே ஐரோப்பிய அணு ஆராய்ச்சிக் கழகம் (CERN) அமைத்த மாபெரும் வட்ட சுரங்க ஆய்வகத்தில் இந்தச் சோதனைகள் தொடங்கின.
அணுத் துகள்களுக்கு நிறையைத் தருவதாகக் கருதப்படும் ஹிக்ஸ் போஸான் தான் நம்மைச் சுற்றியுள்ள இந்த பேரண்டத்தின் பெரும் பகுதியை நிறைத்திருக்கிறது. இதனால் பாதிக்கப்படாத ஒரே அணுத் துகள் ஒளிக் கதிர்களான போட்டான்கள் மட்டுமே. இதனால் தான் போட்டான்களுக்கு நிறை இல்லை. மற்ற எல்லா அணுத் துகள்கள் மீதும் இந்த ஹிக்ஸ் போஸான் தனது ஆதிக்கத்தைச் செலுத்தி நிறையைத் தந்துவிடுகிறது என்று சொல்கிறது ஸ்டாண்டர்ட் மாடல் தியரி.
ஆனால், அதில் விடுபட்டு நிற்கும் ஒரே கேள்வி அணுத் துகள்களுக்கு நிறையைத் தரும் ஹிக்ஸ் போஸானின் எடை என்ன என்பதே. (நிறை என்றால் என்ன?. ஒரு பொருளின் எடை மைனஸ் புவிஈர்ப்பு விசை தான் நிறை. அதாவது நமது எடை 55 கிலோ என்றால் நம் உடலின் மீது புவிஈர்ப்பு விசை செலுத்தும் இழுவிசையைச் சேர்த்தது தான் 55 கிலோ எடை. இதில் புவிஈர்ப்பு விசையை கழித்துவிட்டால் மிச்சமிருக்கும் எடையே நிறை)
பார்க்கவே முடியாத ஹிக்ஸ் போஸானை நிரூபிக்க ஒரே வழி. அதன் எடையைக் கண்டுபிடிப்பதே. இந்த ஆய்வைத் தான் CERN நடத்தியது.

இதற்காகத் தான் சிறிய அளவிலான Big Bang வெடிப்பை செயற்கையாக நடத்திப் பார்த்தனர். இதற்காகத் தான் நியூட்ரான்-புரோட்டான்களின் அதி பயங்கர மோதலை நடத்தினர். இந்த மோதலில் வெடித்துச் சிதறிய பல்வேறு அணுத் துணைத் துகள்கள், கதிர்வீச்சுகளுக்கு இடையே ஹிக்ஸ் போஸானையும் (அதன் எடையை) தேடினர்.
ஸ்டாண்டர்ட் மாடல் தியரியின் படி ஹிக்ஸ் போஸானின் எடை 125 கிகா எலெக்ட்ரோ வோல்ட்ஸ் (GeV) என்ற அளவில் இருக்க வேண்டும். அதாவது அணுக்களுக்குள் இருக்கும் துணைத் துகளான புரோட்டானின் எடையை விட 125 மடங்கு அதிகமாக இருக்க வேண்டும்.
CERN விஞ்ஞானிகள் நடத்திய ஆராய்ச்சியில் 125.3+ GeV எடை கொண்ட துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது 99.999% ஹிக்ஸ் போஸானாகத் தான் இருக்க வேண்டும் என்கிறார்கள்.
ஆனால், 0.1% கேள்வி இன்னமும் மிச்சமிருக்கிறது...!

Thursday, May 17, 2012

செவ்வாய்

மூன்று மாதம் 27 நாட்களாக செவ்வாய் கிரகத்தை சுற்றி வந்து ஏறத்தாழ 3500 ஒளிப்படங்களை எடுத்து அனுப்பியுள்ளது.கடந்த 2004 ஆண்டு ஜனவரி மாதம் 24ம் திகதி தொடங்கிய இந்த பயணம் 2009ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நிறைவு பெற்றது.

இந்த விண்கலத்தில் 4.8 மைல் தூர பயணத்தில் எண்ணற்ற பாறைகள் மற்றும் வெளிர் நிறமுடைய மணல் போன்றவற்றை ஆய்வு செய்து படங்களை அனுப்பியுள்ளது.செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பதை கண்டுபிடித்தது தான் இந்த விண்கலத்தின் மிகப்பெரிய சாதனையாகும்.
vedio url
தற்பொழுது இந்த விண்கலமானது மண்ணில் புதைந்து செயலிழந்து போய்விட்டது. இரண்டு ஆண்டுகளாக இதனை மீட்டு எடுக்க முயற்சி செய்தும் நாசாவால் இயலவில்லை.முதன் முதலில் இந்த விண்கலம் செவ்வாய் கிரகத்தில் இறங்கிய போது 3 மாதம் மட்டுமே செயல்படும் என நாசா விஞ்ஞானிகள் கருதினர். ஆனால் இதன் இயக்கம் நீடித்தது அறிவியலின் வெற்றியாகும்.

சூரியனில் அமைதி

 சுமார் ஐந்தரை ஆண்டுகள் அமைதியின் சொரூபம். பின்னர் ஐந்தரை ஆண்டுகள் ஆக்ரோஷத் தாண்டவம். பொதுவில் சூரியனில் இதுதான் மாறி மாறி நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இப்போது சூரியன் ஆக்ரோஷத்தைக் காட்டவேண்டிய காலம். ஆனால், அமைதியாக இருக்கிறது. இது ஏன் என்பதுதான் விளங்கவில்லை. விஞ்ஞானிகள் திகைத்து நிற்கின்றனர்.

கண்ணைக் கூச வைக்கிற அளவுக்கு மிகப் பிரகாசமான ஒளித்தட்டாக சூரியன் காட்சி அளிக்கிறது. ஆனாலும், சூரியனின் மேற்புறத்தில் அவ்வப்போது கரும்புள்ளிகள் தென்படுகின்றன. இது சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னரே கண்டுபிடிக்கப்பட்ட விஷயம். இத்தாலிய விஞ்ஞானி கலிலியோ 1612-ம் ஆண்டில் தமது சிறிய தொலைநோக்கி மூலம் சூரியனின் கரும்புள்ளிகளை ஆராய்ந்து வரைபடமே தயாரித்தார். கட்டுரைகளையும் எழுதினார். கிட்டத்தட்ட அப்போதிலிருந்தே சூரியனின் ஒளித்தட்டு தொடர்ந்து ஆராயப்பட்டு வந்துள்ளது.

சூரியனில் கரும்புள்ளிகள் நிரந்தரமாக இருப்பது கிடையாது. ஒருசமயம் கரும்புள்ளிகளே இராது. பிறகு கொஞ்சம் கொஞ்சமாகப் புள்ளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். ஒருகட்டத்தில் அது உச்சத்தை எட்டும். பின்னர் அதேபோல மறைய ஆரம்பிக்கும். ஒரு கட்டத்தில் கரும்புள்ளிகளே இராது. பிறகு மறுபடி அவை தோன்ற ஆரம்பிக்கும். இதற்கெல்லாம் ஒரு காலக்கணக்கு உள்ளது.
அதாவது கரும்புள்ளிகள் தெரிய ஆரம்பித்து உச்சத்தை எட்டுவதற்கு சுமார் ஐந்தரை ஆண்டுகள் ஆகும். பிறகு அவை படிப்படியாகக் குறைந்து புள்ளிகள் மறைவதற்கு அதேபோல ஐந்தரை ஆண்டுகள் பிடிக்கும். ஆக மொத்தம், 11 ஆண்டுகள் ஆகும். இது 11 ஆண்டு கரும்புள்ளிக் காலச்சுழற்சி என்று குறிப்பிடப்படுகிறது.

சில சமயங்களில் கரும்புள்ளிகளின் எண்ணிக்கை அதிகபட்சம் 200 வரை இருக்கலாம். உதாரணமாக, 1954-ம் ஆண்டில் 201 கரும்புள்ளிகள் தென்பட்டன. கரும்புள்ளிகள் முதலில் சூரியனின் நடுக்கோட்டுக்கு மேலேயும் கீழேயும்தான் தோன்றுகின்றன. பின்னர் சூரியனின் நடுப்பகுதியிலும் இவை தோன்றுகின்றன. பெயர்தான் கரும்புள்ளியே தவிர, கரும்புள்ளி ஒவ்வொன்றும் பிரம்மாண்டமானது. சிறிய கரும்புள்ளிகூட ஒரு பூமியை உள்ளே இறக்கி விடலாம் என்று சொல்லத்தக்க அளவில் மிகப்பெரியது. உண்மையில் சூரியனின் கரும்புள்ளிகள் கருமையானவை அல்ல. சூரியனின் மேற்புறத்தில் மற்ற இடங்களைவிட வெப்பம் குறைவான பகுதிகளே நமக்குக் கரும்புள்ளிகளாகத் தெரிகின்றன.
சூரியனில் மிக நீண்ட காலம் கரும்புள்ளிகளே தோன்றாமல் போகுமா? கடந்த காலத்தில் நமக்குத் தெரிந்து குறைந்தது நான்கு தடவை அவ்விதம் ஏற்பட்டுள்ளது. கி.பி. 1645 முதல் 1715-ம் ஆண்டு வரையிலான 70 ஆண்டுகளில் சூரியனில் கரும்புள்ளிகளே காணப்படவில்லை. சூரியனின் கரும்புள்ளிகளை ஆராய்ந்தவரான எட்வர்ட் மாண்டர் என்ற விஞ்ஞானியைக் கௌரவிக்கும் வகையில் இக் காலகட்டத்துக்கு “மாண்டர் மினிமம்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் கி.பி. 1280 – 1350 காலகட்டத்திலும் கி.பி.1460 – 1550 காலகட்டத்திலும் இவ்வித நிலைமை இருந்தது. மாண்டர் மினிமத்துக்குப் பிறகு கி.பி. 1790 முதல் 1830-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்திலும் இதேபோல சூரியனில் அனேகமாகக் கரும்புள்ளிகளே காணப்படவில்லை.
கரும்புள்ளிகள் நிறைய இருந்தால் என்ன அல்லது இல்லாவிட்டால் என்ன என்று கேட்கலாம். சூரியனில் கரும்புள்ளிகளின் எண்ணிக்கை உச்சத்தை எட்டுமானால் அது பூமியில் நம்மைப் பல வகைகளிலும் பாதிக்கிறது. சூரியனிலிருந்து இயல்பாக ஆற்றல் மிக்க துகள்கள் (இதைச் சூரியக்காற்று என்றும் சொல்வதுண்டு) வெளிப்பட்டு வருகின்றன. கரும்புள்ளிகள் அதிகமாகத் தோன்றும் காலகட்டத்தில் சூரியனிலிருந்து இவ்விதத் துகள்கள் அதிக அளவில் அதிக வேகத்தில் வெளிப்படுகின்றன.
இவை பூமியை அதாவது மக்களைத் தாக்காதபடி பூமியின் காந்த மண்டலம் தடுத்து விடுகிறது. சூரியனில் கரும்புள்ளிகள் அதிகரிக்கும்போது சூரியனில் கடும் சீற்றம் ஏற்படுகிறது. தவிர, சூரியனிலிருந்து ஆற்றல் முகில் தூக்கி எறியப்படுகிறது. இந்த உருண்டை பூமியின் காந்த மண்டலத்தில் பெரும் பாதிப்பை உண்டாக்குகிறது. இதை விண்வெளியிலிருந்து பயங்கர மின்னல் தாக்குவதற்கு ஒப்பானது என்றும் கூறலாம். இதன் விளைவாக, நீண்ட தூரம் மின்சாரத்தை எடுத்துச்செல்லும் கம்பிகளில் கூடுதல் மின்சாரம் தோன்றி மின்சார டிரான்ஸ்பார்மர்கள் வெடிக்கும். இதனால் பெரிய பிராந்தியத்தில் மின்சப்ளை பாதிக்கப்படும்.
1989-ம் ஆண்டில் கனடாவின் கிழக்குப் பகுதியில் இவ்விதம் மின்சப்ளை பாதிக்கப்பட்டு 6 கோடி மக்கள் பல மணி நேரம் மின்சாரம் இன்றி அவதிப்பட்டனர். வடகிழக்கு அமெரிக்காவிலும் மற்றும் சுவீடன் நாட்டிலும் பாதிப்பு ஏற்பட்டது. இப்போது அது மாதிரி சூரியனிலிருந்து வெளிப்படும் ஆற்றல் முகில் தாக்குமானால் பல நாடுகளில் பாதிப்பு ஏற்பட்டு கோடானுகோடி மக்கள் பாதிக்கப்படுவர். மின்சார சாதனங்களையும் இயந்திரங்களையும் சீர்படுத்த பல ஆண்டுகள் பிடிக்கும். தவிர, சூரியனிலிருந்து வெளிப்படும் ஆபத்தான ஆற்றல் முகில்,தொலைபேசித் தொடர்பு உள்பட தகவல் தொடர்பு சாதனங்களையும் பாதிக்கும். தரைக்கு மேலே அமைந்த எண்ணெய்க் குழாய்களையும் இது பாதிக்கும்.
பூமியைச் சுற்றுகிற செயற்கைக்கோள்களின் சுற்றுப்பாதை வேகம் பாதிக்கப்பட்டு அதனால் அவற்றின் ஆயுள் குறையும். பூமியைச் சுற்றுகிற விண்வெளி நிலையத்திலிருந்து யாரேனும் வெளியே வந்து அந்தரத்தில் பணியாற்ற நேர்ந்தால் கடும் கதிரியக்கப் பாதிப்பு ஏற்பட்டு அவர்களின் உயிருக்கு ஆபத்து நேரிடலாம். பூமியில் ஏற்படக்கூடிய பாதிப்புகளை இவ்விதம் அடுக்கிக் கொண்டே போகலாம். சூரியனில் கரும்புள்ளிகள் அனேகமாக இல்லாத காலம் முடிந்து புதிய 11 ஆண்டுகால சுழற்சி கடந்த 2008 டிசம்பரில் தொடங்கியது. அப்போதே அமெரிக்க விண்வெளி அமைப்பான நாஸப் 2011 வாக்கில் சூரியனின் ஒளித்தட்டில் 150 முதல் 200 கரும்புள்ளிகள் தென்படலாம் என்று கூறியது. ஆனால், அப்படி நிகழவில்லை.
2011-ம் ஆண்டு ஜனவரி 15-ம் தேதி வரையிலான புள்ளிவிவரப்படி தொடர்ந்து 820 நாள்களுக்கு சூரியனில் கரும்புள்ளிகளே காணப்படவில்லை. நியாயமாகப் பார்த்தால் 2012-ம் ஆண்டில் சூரியனின் கரும்புள்ளிகளின் எண்ணிக்கை உச்ச அளவை எட்ட வேண்டும். ஆனால், அப்படி நிகழும் என்று தோன்றவில்லை. சூரியனின் வழக்கமான போக்கு மாறிவிட்டது போலத் தோன்றுகிறது. இதில் வேடிக்கை என்னவென்றால் 2012-ம் ஆண்டு வாக்கில் சூரியனில் அதிகபட்சமாகக் கரும்புள்ளிகள் தோன்றும் என்றும், அதன் விளைவாக சூரியனில் கடும் சீற்றங்கள் ஏற்படும் என்றும், அதையடுத்து பூமிக்கே ஆபத்து ஏற்படும் என்ற கற்பனை அடிப்படையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஹாலிவுட் தயாரிப்பாக ஓர் ஆங்கிலப் படம் வெளியானது. இந்தியாவிலும் அது திரையிடப்பட்டது.
உள்ளபடி இப்போது சூரியனில் கரும்புள்ளிகள் எண்ணிக்கை அதிக அளவில் இல்லை. ஆகவே, சூரியனில் சீற்றங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பும் குறைவாகவே உள்ளதாக விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். 2010 ஆகஸ்டிலும் 2011 பிப்ரவரியிலும் சூரியனிலிருந்து ஆற்றல் முகில் வெளிப்பட்டு பூமியை நோக்கி வந்தன என்றாலும் பொதுவில் சூரியன் அமைதியாக இருக்கிறது.
சூரியனின் கரும்புள்ளிகள் விஷயத்தில் கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து காணப்பட்டு வந்த 11 ஆண்டு காலச் சுழற்சி மறைந்து முன்பு மாண்டர் மினிமம் காலகட்டத்தில் நிகழ்ந்ததுபோல தொடர்ந்து நீண்ட காலம் சூரியன் அமைதியாக இருந்து வருமோ என்று விஞ்ஞானிகள் கருதத் தொடங்கியுள்ளனர். சூரியனில் அப்படியான அமைதி நிலை ஏற்பட்டால் பூமியில் ஏற்படக்கூடிய முக்கிய பாதிப்பு ஒன்று உண்டு. அதாவது, பூமியில் குறிப்பாக வட பகுதியில் உள்ள நாடுகளில் வெப்ப நிலை குறையும். முன்பு மாண்டர் மினிமம் காலகட்டத்தில் ஐரோப்பாவின் வட பகுதியில் அமைந்த நாடுகளில் பல பகுதிகள் பனிக்கட்டியால் மூடப்பட்டன. அதுபோல இப்போது பொதுவில் பூமியில் வெப்ப நிலை குறையலாம். ஆனாலும் இது காற்று மண்டலத்தில் கார்பன் சேர்மானம் அதிகரித்து வருவதால் பூமியின் சராசரி வெப்ப நிலை அதிகரித்து வருகிற பிரச்னையை சரிக்கட்டி விடாது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
சூரியனில் கடும் சீற்றங்கள் ஏற்பட்டு, சூரியனிலிருந்து ஆற்றல் முகில் தூக்கி எறியப்பட்டு, அது பூமியை நோக்கி வந்தால் பூமியில் தகவல் தொடர்பு உள்பட பலவும் கடுமையாகப் பாதிக்கப்படும் என்று கூறினோம். ஆகவே, இவை பற்றி முன்கூட்டி அறிந்து கொள்வதற்காக சூரியனை ஆராயும் பொருட்டு சில ஆளில்லா செயற்கைக்கோள்கள் செலுத்தப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று “ஏசிஇ’ என்பதாகும். இது தொடர்ந்து சூரியனை ஆராய்ந்து வருகிறது. சூரியனில் நிகழும் முக்கிய மாற்றங்களை இது ஆராய்ந்து தகவல் அனுப்புகிறது. ஆகவே, நாம் உஷாராகி, தக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கப் போதிய அவகாசம் கிடைக்கிறது. சூரியனில் நிகழும் மாற்றங்கள் ஏன் நிகழ்கின்றன என்பது பற்றி நீண்ட நாள்களாகவே ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.
இதுதொடர்பாக பல கொள்கைகளும் கூறப்பட்டுள்ளன. ஆனாலும் நம்மால் இன்னும் சூரியனை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆகவேதான் சூரியனில் கரும்புள்ளி இல்லாத காலம் இன்னும் எவ்வளவு காலம் நீடிக்கும் என்று நம்மால் திட்டவட்டமாகக் கூற முடியவில்லை. ஒன்று மட்டும் உறுதியாகத் தெரிகிறது. சூரியனின் கரும்புள்ளிகளுக்கும் பூமியின் பருவ நிலைமைகளுக்கும் ஏதோ ஒரு வகையில் தொடர்பு உள்ளது. விஞ்ஞானிகள் விசேஷ கருவிகளைப் பயன்படுத்தி சூரியனை ஆராய்கிறார்கள். ஆகவே, சூரியனில் கரும்புள்ளிகள் உள்ளனவா என்று கண்டறிய ஒருபோதும் சூரியனை வெறும் கண்ணால் பார்க்கலாகாது. அவ்விதம் செய்தால் நிச்சயம் கண் பார்வை போய்விடும்

ஆபத்து நீங்கியது பசிபிக் கடலில் விழுந்தது செயலிழந்த செயற்கைக்கோள் !

 வாஷிங்டன்: கடந்த 20 ஆண்டுகளாக பூமியைச் சுற்றிக் கொண்டிருந்த செயற்கைக் கோள் ஒன்று செயலிழந்து பூமியை நோக்கி வந்தது. அது நேற்று காலை பசிபிக் பெருங்கடலில் விழுந்ததாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி ஆராய்ச்சி மையம் கடந்த 1991ம் ஆண்டு Ôஅப்பர் அட்மாஸ்பியர் ரிசர்ச் சேட்டிலைட்Õ (யுஏஆர்எஸ்) என்ற செயற்கைக்கோளை விண்ணுக்கு அனுப்பியது. ரூ.3,525 கோடி செலவில் அனுப்பப்பட்ட அந்த செயற்கைக் கோள் ஓசோன் படலம் மற்றும் பூமியின் வளி மண்டலத்தைப் பற்றி ஆராய்ந்து வந்தது. இது நாசா விஞ்ஞானிகளால் கடந்த 2005ம் ஆண்டு செயலிழக்க வைக்கப்பட்டது. அதன் பிறகு அது பூமியை நோக்கி வந்து கொண்டிருப்பதாக சமீபத்தில் விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
6,000 கிலோ எடை கொண்ட, பஸ் அளவிலான அந்த செயற்கைக்கோள் நேற்று முன்தினம் பூமியை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுவதாக நாசா விஞ்ஞானிகள் கூறியிருந்தனர். ஒரு நாள் முன்னதாகவோ அல்லது பின்போ வரவும் வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தனர்.
பூமியின் தட்பவெப்ப நிலைக்குள் நுழைந்தவுடன் செயற்கைக்கோள் 26 பெரிய துண்டுகளாக உடையும். பூமியின் 75 சதவீதத்தை ஆக்கிரமித்துள்ள கடல் பகுதியில் விழுவதற்கே அதிக வாய்ப்பு உள்ளது. தவறினால் வடக்கு கனடாவுக்கும் தென்அமெரிக்காவின் தென்பகுதிக்கும் இடையில் பூமியின் மீது விழும் அபாயமும் உள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தனர்.
பூமியில் விழுந்தால் 3,200ல் ஒரு பங்கு மனிதர்கள் மீது விழுந்து பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக எச்சரித்தனர். எனினும், யுஏஆர்எஸ் செயற்கைக்கோள் நேற்று அதிகாலையில் பசிபிக் பெருங்கடலில் விழுந்து விட்டதாகவும் அதனால், மனிதர்களுக்கு அபாயம் இல்லை என்றும் நாசா விஞ்ஞானிகள் அறிவித்தனர்.

புதிய கிரகம் கண்டுபிடிப்பு

சூரியக் குடும்பத்தை விட்டு தனியாக கண்ணுக்கு தெரியாத தூரத்தில் மறைந்து கிடந்த புதிய கிரகத்தை இங்கிலாந்து விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் கெப்ளர் டெலஸ்கோப்பை கடந்த 2009ஆம் ஆண்டு முதல் நிறுவி உள்ளது. அதி நவீன தொழில்நுட்பம் கொண்ட இந்த டெலஸ்கோப் மூலம் புதிய கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் கண்டறியப்படுகின்றன. இதன் மூலம் 1,50,000 நட்சத்திரங்களை கண்காணிக்க முடியும்.
தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த புதிய கிரகம் சனிக்கிரகம் போன்றும், கே 01-872-0 என்ற நட்சத்திரத்தை சுற்றியும் உள்ளது, இந்த புதிய கிரகத்தை 150 வருடங்களுக்கு முந்தைய தொழில்நுட்பத்தின் மூலம் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இதே தொழில்நுட்பத்தை வைத்து தான் நெப்டியூன் கிரகத்தையும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்தது குறிப்பிடத்தக்கது.

Thursday, May 10, 2012

Watch Phones


நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த பர்க் நிறுவனம் கைகளில் கடியாரங் களாக அணிந்து இயக்கக் கூடிய மொபைல் போன்களைத் தயாரித்து வருகிறது. உலக அளவில், மொபைல் போன் விற்பனையில் இரண்டாவது இடத்தைக் கொண்டிருக்கும் இந்தியாவில் தன் வர்த்தகத்தினை விரிவாக் கம் செய்வதற்காக, டில்லியில் இரு விற்பனை மையங்களையும் அலுவலகத்தினையும் அமைக்கிறது. ஏற்கனவே குவஹாத்தி மற்றும் கொல்கத்தாவில் இந்நிறுவனத்தின் விற்பனை மையங்கள் இயங்கி வருகின்றன. முதலில் வட இந்திய மாநிலங்களில் கால் ஊன்றி, பின் ஒன்பது மாதங்கள் கழித்து தென் இந்திய மாநிலங்களில் விற்பனையை மேற்கொள்ள இந்த நிறுவனம் திட்டமிடுகிறது.

இந்நிறுவனம் தயாரிக்கும் கை கடியாரங்கள், ஒரு மொபைல் போன் இயக்கத்தினையும் மேற்கொண்டுள்ளன. இவற்றின் விலை ரூ.9,000 முதல் ரூ.23,000 வரை உள்ளது. தொடக்க நிலை கைக்கடியார மொபைல்களில் அழைப்புகளைப் பெறவும் ஏற்படுத்த வும் மட்டுமே செய்திடும் வசதிகள் உள்ளன. உயர் நிலைக் கடியார மொபைல்களில், மல்ட்டிமீடியா வசதிகளும் உள்ளன. மத்திய நிலையில் ரூ.12,000 என்ற விலையில் உள்ள கடியாரங்களிலும் அனைத்து வசதிகளும் கிடைக்கின்றன. இந்த போன் கள் அனைத்திலும் புளுடூத் வசதி தரப்பட்டுள்ளதால், ஹெட்செட் மூலம் இவற்றை இயக்கலாம். கைகளைக் காதருகே கொண்டு சென்று பேச வேண்டிய தில்லை. இவற்றில் உள்ள ஏ-ஜி.பி.எஸ். வசதி மூலம் இணையம் வழியாக இவற்றின் இருப்பிடத்தினைத் தெரிந்து கொள்ளலாம்.

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பர்க் நிறுவனம் தயாரிக்கும் கைகடியார மொபைல்கள், அணிந்திருப்பவரின் உடல் நிலை மற்றும் ஆரோக்கியம் குறித்தும் அறிவிக்கும் மொபைல்களாக வடிவமைக் கப்படும். அத்துடன், இப்போது வேகமாகப் பரவி வரும், அண்மைத் தள டேட்டா பரிமாற்ற தொழில் நுட்பத்தினையும் இந்த கடியார மொபைல்களில் கொண்டு வர இருப்பதாக, இந்நிறுவனத்தின் பன்னாட்டளவிலான விற்பனை இயக்குநர் கோயன் பைட்டர்ஸ் தெரிவித்தார். தற்போது ஐந்து விற்பனை மையங்கள் இயங்குவதாகவும் இதன் எண்ணிக்கையை விரைவில் 20 ஆக உயர்த்த இருப்பதாகவும் அவர் கூறினார்.

Monday, May 7, 2012

நவீன தொடுதிரைகள் அறிமுகம்




கணணிகள், கைப்பேசிகளின் திரைகளின் தொழில்நுட்பத்தில் நாளுக்கு நாள் மாற்றங்கள் வந்து கொண்டே இருக்கின்றது.அதன் அடிப்படையில் தற்போது XSense எனும் மீள்தன்மை கொண்ட அல்லது நெகிழும் தன்மை கொண்ட தொடுதிரைகள் அறிமுகமாகியுள்ளன
இத்திரைகள் ஸ்மார்ட் கைப்பேசிகள், மடிக்கணணிகள் என்பனவற்றிற்கும் ஏனைய சாதனங்களிலும் இணைக்கப்படவுள்ளன.
இத்தொழில்நுட்பமானது வாடிக்கையாளர்களை பல வழிகளிலும் கவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Saturday, April 14, 2012

நிலநடுக்கம் குறித்து ‘அலர்ட்’


நிலநடுக்கம் பற்றி அறிய புதியதோர் ஆன்ட்ராய்டு அப்ளிக்கேஷன். ஜியோநெட் என்ற இந்த அப்ளிக்கேஷன் மூலம் நிலநடுக்கம் பற்றிய தகவல்களை உடனுக்குன் தெரிந்து கொள்ள முடியும்.

எந்தெந்த இடங்களில் நிலநடுக்கும் வந்துள்ளது, எந்நெந்த பகுதிகள் பாதித்துள்ளது என்பது போன்ற தகவல்களை இருந்த இடத்தில் இருந்து எளிதாக பெற
முடியும்.

இதே போல் எர்த்குவேக் என்ற இன்னொரு அப்ளிக்கேஷனும், நிலநடுக்கத்தை பற்றிய தகவல்களை வழங்கும். இந்த அப்ளிக்கேஷன் 24 மணி நேரமும் நிலநடுக்கும் பற்றிய முழு விவரத்தினையும் தெரியப்படு்த்தும்.

இன்னும் சுருக்கமாக சொன்னால் நிலநடுக்கம் பற்றிய செய்திகளை உடனே தெரிந்து கொள்ளவும், மற்றவர்களுக்கு தெரியப்படுத்தவும் இந்த அப்ளிக்கேஷன்கள் பெரிதும் உதவும். இந்த அப்ளிக்கேனில் கிடைக்கும் தகவல்களை எஸ்எம்எஸ், இ-மெயில், டிவிட்டர், ஃபேஸ்புக் போன்றவற்றில் தகவல் பரிமாற்றம் செய்வதன் மூலம் அனைவருக்கும் தெரியப்படுத்தலாம்.

நிலநடுக்கும் வந்த இடங்களை இந்த அப்ளிகேஷன் வழங்கும் மேப் மூலமும் பார்த்து தெரிந்து கொள்ளலாம். தற்பொழுது இந்த ஜியோநெட் ரேப்பிட் அப்ளிக்கேஷனை பெற வேண்டும் என்றால் கூகுள் ப்ளே இணையதளத்தின் மூலம் பெறலாம். இதை பற்றிய தகவல்களை அறிய இங்கே கிளிக் செய்யவும்.

சார்ச் 15 வருடங்களுக்கு சார்ச்


மொபைல் போன் வைத்திருக்கும் நம்மில் பலருக்கு இருக்கும் பிரச்சினை சார்ச் தான். போனை பாவிக்காமல் வைத்திருந்தாலும் ஓரிரு நாட்களில் பற்றரி சார்ச் தீர்ந்துவிடும். சுவிச் ஓஃப் நிலையில் வைத்திருந்தாலும் இதே நிலைதான்.

இப் பிரச்சினைக்கு தீர்வு வந்துள்ளது.

XPAL Power நிறுவனம் தயாரித்திருக்கும் SpareOne என்ற பெயர் கொண்ட மொபைல் போனை ஒருமுறை சார்ச் பண்ணிவிட்டால், சுமார் 15 வருடங்களுக்கு மேலாக சார்ச் தீராது இருக்கும்.

இத் தொலைபேசியில் 10 மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக பேசமுடியும். போனை பாவிக்காது வைத்தால் அதன் சார்ச் 15 வருடங்களுக்கு அப்படியே இருக்கும்.

இத் தொலைபேசி தயாரிக்கப்பட்டதன் நோக்கம், அவசர நிலைமைகளில் பயன்படுத்துவதற்காகும்.

ஒருமுறை சார்ச் செய்து, சுவிச் ஓஃப் பன்ணி கைப்பையில் வைத்துவிட்டால் போதும், அவசர தேவைகளின் போது பயன்படுத்தலாம்.
இக் கைபேசியின் விலை வெறும் 50 டொலர்கள் என்பது மேலும் இனிப்பான செய்தி. இவ் வருட இறுதியில் சந்தைக்கு வர இருக்கிறது SpareOne.

Sunday, April 8, 2012

GOOGLE GLASS


இன்ரர்நெட் உலகத்தையே ஆட்டிப் படைக்கும் கூகுள் நிறுவனம், உலகின் முதல்தர தேடுபொறியாக உள்ளது. இந் நிறுவனம் பல பில்லியன் டாலர்களைச் செலவுசெய்து புதுப் புது தொழில் நுட்ப்பத்தைக் கண்டு பிடிக்கிறது. இதன் ஒருவடிவமாக கூகுள் கண்ணாடியை அது கண்டுபிடித்துள்ளது.

இக் கண்ணாடி 2012ம் ஆண்டு இறுதியில் விற்பனைக்குவர உள்ளது. கம்பியூட்டர் செயல்பாடுபோல இயங்கும் இக் கண்ணாடியில் உள்ள அம்சங்களே தனி. இதில் ஜி.பி.எஸ் என்னும் செயற்கைக்கோள்(சட்டலைட்) வழிநடத்தல் இருக்கிறது.

இதனூடாக நடை பயணிகள் ஒரு சாலையை அல்லது வீட்டி இலகுவாகக் கண்டுபிடிக்க முடியும். வீடியோ படம் எடுக்க முடியும். எடுத்த படத்தை நன்பர்களுக்கு 1 செக்கனில் அனுப்பவும் முடியும். அதுமட்டுமா ! நான் சொல்லும் கட்டளைகளை அது நிறைவேற்ற வல்லது.

படம் எடு என்று மட்டும் சொன்னால் போதும் அது உடனே படம் எடுக்க ஆரம்பித்துவிடும். 4ம் தலைமுறை இன்ரர்நெட் வசதிகொண்டதாக அது அமைந்துள்ளது. சிறந்த தேடுபொறியாகவும் அதனைப் பயன்படுத்தலாம் மோபைல் தொலைபேசி உள்ளது.

அழைக்கும் நபரின் உருவம் கண்ணாடியில் தோன்றும். பிறிதொருவர் இதேபோல ஒரு கண்ணாடியை அணிந்திருந்தால், அவர் உங்கள் நண்பராக இருந்தால் அதனையும் அது காட்டவல்லது.
அந் நபர் எவ்வளவு தூரத்தில் இருக்கிறார் என்பதனைக் கூட அது துல்லியமாகக் காட்டிவிடும். கூகுள் வெளிவிடும் இக் கண்ணாடி குறித்த காணொளியை இணைத்துள்ளோம். அதனைப் பார்த்தால் மீதம் விளங்கும்.

கணணி செய்தி Youtube


Youtubeல் அதி உயர் பிரிதிறன் கொண்ட முப்பரிமாண காட்சிகளை பார்ப்பதற்குவீடியோ தரவிறக்கம், தரவேற்றம் என்பனவற்றில் முதன்மையாக விளங்கும் Youtube தளமானது அதி உயர் பிரிதிறன் கொண்ட முப்பரிமாண வீடியோக்களை பார்வையிடும் வசதியை உருவாக்கியுள்ளது.

 

USB Power Pot

USB இணைப்பில் பயன்படுத்தக் கூடியதும், எளிதில் எடுத்துச் செல்லக் கூடியதுமான Power Pot எனப்படும் மின்சார அடுப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

இதுவே USB இணைப்பைக் கொண்ட முதலாவது வெப்ப இலத்திரனியல் மின்சார அடுப்பாகும். இவற்றை மின்சார வசதியற்ற இடங்களில் சார்ஜ் செய்து பயன்படுத்த முடியும்.

இவை 5W, 10 W, 15 W ஆகிய வேறுபட்ட வலுவுடைய மின்சாரத்தில் பயன்படுத்த கூடியவாறு வெவ்வேறு அளவுகளில் கிடைக்கின்றன.

இதன் பெறுமதியானது பயன்படுத்தப்படும் மின்சாரத்தின் அளவிற்கு அமைய 125 தொடக்கம் 500 அமெரிக்க டொலர்களுக்குள் மாறுபடக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Friday, March 16, 2012

இலவசமாக ஜிமெயில் மூலம் SMS அனுப்புவது எப்படி????

இணைய பயனர்களில் பெரும்பாலானவர்களால் உபயோகப்படுத்தப்படும் கூகுளின் சிறந்த சேவை ஜிமெயில் எனப்படும் இலவச மெயில் சேவையாகும். நாளுக்கு நாள் பல்வேறு புதிய வசதிகளை ஜிமெயிலில் புகுத்து வாசகர்களை கவர்கிறது கூகுள் நிறுவனம்.

இப்பொழுது மேலும் ஒரு பயனுள்ள வசதியை வாசகர்களுக்கு வழங்கி உள்ளது. ஜிமெயில் மூலம் SMS அனுப்பும் வசதி. இந்த வசதியை சமீபத்தில் வெளியிட்டு இருந்தது கூகுள் நிறுவனம் ஆனால் இந்திய மொபைல்கள் மொபைல் நெட்வொர்க் கம்பெனிகள் சப்போர்ட் செய்யாமல் இருந்தது. இப்பொழுது இந்திய மொபைல்களும் SMS வசதிக்கு சப்போர்ட் செய்கிறது.

இலவசமாக SMS அனுப்புவது எப்படி:
முதலில் உங்கள் ஜிமெயில் கணக்கில் நுழைந்து Chat பகுதியில் நீங்கள் SMS அனுப்ப விரும்பும் நண்பரின் பெயரை டைப் செய்யவும். உங்களுக்கு ஒரு சிறிய மெனு வரும் அதில் Send SMS என்ற வசதியை தேர்வு செய்யுங்கள்.

ஜிமெயில் மூலம் இலவசமாக SMS அனுப்பும் புதிய வசதி [தற்பொழுது இந்தியாவிற்கும்!!

அடுத்து இன்னொரு விண்டோ ஓபன் ஆகும் அதில் உங்கள் நண்பரின் மொபைல் எண்ணை கொடுத்து SAVE பட்டனை அழுத்தவும்.

ஜிமெயில் மூலம் இலவசமாக SMS அனுப்பும் புதிய வசதி [தற்பொழுது இந்தியாவிற்கும்

இப்பொழுது உங்கள் நண்பரின் மொபைல் விவரம் Contact List-ல் சேர்ந்து விடும். அடுத்து அந்த நண்பருக்கு SMS அனுப்ப விரும்பினால் அவரின் பெயரை கிளிக் செய்தால் Chat Window ஓபன் ஆகும். அதில் Send SMS கிளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கு இலவசமாக SMS அனுப்பலாம்.

ஜிமெயில் மூலம் இலவசமாக SMS அனுப்பும் புதிய வசதி [தற்பொழுது இந்தியாவிற்கும்!!

அதிகபட்சமாக ஒரு நாளைக்கு 50 SMS அனுப்ப முடியும். இந்தியாவில் தற்பொழுது Aircel, Loop Mobile, Reliance, Tata DoCoMo, Tata indicom ஆகிய நிறுவனங்களின் மொபைல்களுக்கு SMS அனுப்ப முடியும்.

Cloud Computing Defination (மேகக் கணிமை)


மேகக் கணிமை அல்லது கொளுவுக் கணிமை என்பது கணிமைத் திறனை இணையம் ஊடாக பெறத்தக்கதான ஒரு ஏற்பாடு ஆகும். கணிமைத் திறனை வழங்கும் நிறுவனங்களில் இருந்து தேவைக்கேற்ற அளவு கணிமைத் திறங்களைப் பெற்று பயன்படுத்தலாம். ஒரு நிறுவனம் கணினிகளிலும் மென்பொருட்களிலும் கட்டமைப்பொன்றை அமைக்காமல் பயன்பாட்டுக் கட்டண முறையில் தனது கணிமைத் தேவைகளை பலவேறு இடங்களிலிருந்தும் கணிமை நிறுவனங்களிலிருந்தும் பெற இந்த தொழில்நுட்பம் உதவுகிறது.

சிறப்பியல்புகள்

தற்போது விவாதத்திலுள்ள சாப்ட்வேர் பிளாட்ஃபார்மை ஹோஸ்ட் செய்வதற்கான பௌதீக உள்காட்டுமானத்தை கிளவுட் கம்ப்யூட்டிங் வாடிக்கையாளர்கள் பொதுவாக சொந்தமாகப் பெற்றிருப்பதில்லை.
அதற்குப் பதிலாக, சேவை வழங்கும் மூன்றாம் நபரிடமிருந்து பயன்படுத்துவதற்கு கட்டணமாக தரும் மூலதனச் செலவை அவர்கள் தவிர்த்துவிடுகின்றனர். அவர்கள் மூலாதாரங்களை சேவையாக நுகர்கின்றனர், அவர்கள் பயன்படுத்தும் மூலாதாரங்களுக்கு மட்டுமே கட்டணம் செலுத்துகின்றனர். கிளவுட் கம்ப்யூட்டிங் அளிப்புகள் பலவும், மற்றவையாவும் சந்தா அளிப்பு அடிப்படையில் கட்டணம் விதிக்கையில் பழமையான பயனீ்ட்டு சேவைகள் எவ்வாறு(எல்க்ட்ரிசிட்டி போன்றவை)நுகரப்படுகின்றன என்பதை ஒப்பீடு செய்கின்ற யுடிலிட்டி கம்ப்யூட்டிங் மாதிரியை நிறுவுபவையாக இருக்கின்றன. பலதரப்பட்ட வாடகைதாரர்களிடைய "அழிந்துபடக்கூடிய மற்றும் புலப்படாத" கம்ப்யூட்டிங் சக்தியை பகிர்ந்துகொள்வது சர்வர்கள் தேவையில்லாமல் வெறுமனே விட்டுவைக்கப்படாத வகையில் பயனீட்டு விகிதத்தை மேம்படுத்தலாம்(பயன்பாட்டு மேம்பாட்டின் வேகத்தை அதிகரிக்கின்ற அதேநேரத்தில் செலவுகளை குறிப்பிடத்தக்க அளவு குறைக்கக்கூடியது). இந்த அணுகுமுறையின் பக்கவிளைவு, உச்சபட்ச சுமை வரம்புகளுக்கு வாடிக்கையாளர்களிடம் என்ஜினியர் இல்லாதபோது ஒட்டுமொத்த கம்ப்யூட்டர் பயன்பாட்டின் அளவு சட்டென்று உயர்ந்துவிடுவதாகும். அத்துடன், மற்ற தளங்களில் மையப்படுத்தப்பட்ட உள்கட்டுமானத்திலிருந்து ஒரேவிதமான பதிலளிப்பைப் பெறுவதை "அதிகரித்த அதிவேக பேண்ட்வித்" சாத்தியமாக்குகிறது.

நிறுவனங்கள்

Vmware, Sun Microsystems, Rackspace US, IBM, Amazon, Google, BMC, Microsoft, மற்றும் Yahoo ஆகியவை பிரதான கிளவுட் கம்ப்யூட்டிங் சேவை வழங்குநர்களாவர். Vmware, General Electric, மற்றும் Procter & Gamble உள்ளிட்ட பெரிய நிறுவனங்களின் மூலமாக தனிநபர் பயனர்களால் கிளவுட் சேவைகள் எடுத்துக்கொள்ளப்படுகின்றன

2009 முதல் Ubuntu கிளவுட் கம்ப்யூட்டிங் போன்ற புதிய நிறுவனங்களும் இந்தத் துறையில் கவனம் பெற்று வருகின்றனர் 

வரலாறு

கிளவுட் என்ற கலைச்சொல் டெலிபோனியிலிருந்து பெறப்பட்டது. 1990வரை டேட்டா சர்க்யூட்கள்(இணையத்தள போக்குவரத்தை கொண்டுசெல்பவை உட்பட) யாவும் சேருமிடங்களுக்கிடையே கடுமையான கம்பி கொண்டு இணைக்கப்பட்டிருந்தன. அடுத்தடுத்து வந்த, நெடுந்தொலைவு தொலைபேசி நிறுவனங்கள் டேட்டா தகவல்தொடர்புக்களுக்கான வர்ச்சுவல் பிரைவேட் நெட்வொர்க்குகளை (VPN) வழங்கின. தொலைபேசி நிறுவனங்களால் நிலையான சர்க்யூட்கள் போன்ற உத்திரவாதமான பேண்ட்வித்கள் கொண்டு VPN அடிப்படையிலான சேவைகளை குறைவான செலவில் அளிக்க முடிந்தது, ஏனென்றால் அவர்களால் சரிசெய்யக்கூடியதாக காணமுடிந்த பயனீட்டை சமன்செய்வதற்கு போக்குவரத்தை அவர்களால் மாற்றமுடிந்தது, இதனால் அவர்களது ஒட்டுமொத்த நெட்வொர்க் பேண்ட்வித்தையும் மிகவும் பயன்மிக்க முறையில் பயன்படுத்திக்கொள்ள முடிந்தது. இந்த ஏற்பாட்டின் விளைவாக, எந்த பாதையின் வழியாக போக்குவரத்து அனுப்பப்பட்டிருக்கும் என்பதை முன்கூட்டியே துல்லியமாக தீர்மானிப்பது இயலாமல் போய்விட்டது. "டெலிகாம் கிளவுட்" என்ற கலைச்சொல் இந்தவகையான நெட்வொர்க்கிங்கை விவரிக்கப் பயன்படுத்தப்பட்டது என்பதுடன் கிளவுட் கம்ப்யூட்டிங் ஒருவகையில் கருத்துரீதியாக ஒரேமாதிரியானதுதான்.

கிளவுட் கம்ப்யூட்டிங்கானது பயனர்களின் தேவைகளை எதிர்கொள்ள தேவையை உற்பத்திசெய்யும் விர்ச்சுவல் மெஷின்களையே (VMs) பெருமளவில் சார்ந்திருக்கிறது. இந்த வர்ச்சுவல் நிகழ்வுகள் தேவைகளை உற்பத்தி செய்யக்கூடியவையாக இருப்பதால், இதுபோன்ற எத்தனை VMகள் கொடுக்கப்பட்ட எந்தநேரத்திலும் செயல்படும் என்பதைத் தீர்மானிப்பது இயலாமல் போய்விட்டது. சூழ்நிலைகள் கோரும்போது கொடுக்கப்பட்ட எந்த கம்ப்யூட்டரிலும் தேவையைத் தூண்டுபவையாக VMகள் இருப்பதால் அவை குறிப்பிட்ட இடத்தில் உள்ளவையாக, கிளவுட் நெட்வொர்க்கைப் போன்றே இருக்கின்றன. நெட்வொர்க் டயகிராமில் உள்ள பொதுவான விளக்கம் கிளவுட் அவுட்லைனே ஆகும்

"கணக்கீடு ஒருகாலத்தில் பொதுமக்கள் பயனீட்டிற்கென்று அமைக்கப்படும்" என்ற யூகத்தை ஜான் மெக்கார்த்தி முன்வைத்த 1960களை நோக்கி கிளவுட் கம்ப்யூட்டிங்கின் உள்ளுறையும் கருத்தாக்கம் செல்கிறது; உண்மையிலேயே சேவைப்பிரிவுடனான தன்மைகளை பகிர்ந்துகொள்ளும் 1960களை நோக்கித்தான் இது செல்கிறது.
பெரிய அசின்க்ரனோஸ் டிரான்ஸ்பர் மோட்(ATM)நெட்வொர்க்குகளை குறிப்பிட 1990களின் முற்பாதியிலேயே கிளவுட் என்ற கலைச்சொல் வர்த்தகப் பயன்பாட்டிற்கென்று பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஜெனரல் மேஜிக் நிறுவனம் 1995இல், AT&T போன்ற தொலைத்தொடர்பு நிறுவன கூட்டாளிகள் சிலருடன் இணைந்து, நுகர்வோர் சார்ந்த இணையத்தளம் பிரபலமடைவதற்கு சற்று முன்னர் தொடங்கிய குறுகிய ஆயுள்கொண்ட கம்ப்யூட்டிங் தயாரிப்புகள் துவக்கத்திலேயே தோல்வியில் முடிந்தன. 21ஆம் நூற்றாண்டிற்கு மாறும் சமயத்தில், "கிளவுட் கம்ப்யூட்டிங்" என்ற கலைச்சல் மிகப்பரவலாக தோன்றத் தொடங்கியது, இருப்பினும் அந்த நேரத்தில் பெரும்பாலான கவனம் SaaS அளவிற்கே வரம்பிற்குட்பட்டிருந்தது.

1999இல் மார்க் பெனியாஃப், பார்க்கர் ஹாரிஸ் மற்றும் அவர்களுடைய கூட்டாளிகளால் Salesforce.com நிறுவப்பட்டது. தொழில் பயன்பாடுகளுக்கென்று Google மற்றும் Yahoo! போன்ற நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட பல தொழில்நுட்பங்களையும் அவர்கள் பயன்படுத்தினர். தங்களுடை நிஜ தொழில் மற்றும் வெற்றிகரமான வாடிக்கையாளர்களைக் கொண்டு "தேவைக்கு" மற்றும் SaaS ஆகிய கருத்தாக்கங்களையும் வழங்கினர். SaaSஇன் அடிப்படையே இது வாடிக்கையாளர்களால் குறைவான தொழில்நுட்ப உதவியைக் கொண்டு வாடிக்கையாளர்கள் தங்களுக்கேற்றாற்போல் மாற்றிக்கொள்ள முடியும் என்பதுதான். தொழில் பயனர்கள் இந்த நெகிழ்வுத்தன்மையையும் வேகத்தையும் உற்சாகத்தோடு வரவேற்றனர்.

2000ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில் மைக்ரோசாப்ட், வலைத்தள சேவைகளின் வளர்ச்சியின் மூலமாக SaaSஇன் கருத்தாக்கத்தை விரிவடையச் செய்தது. IBMநிறுவனம் இந்தக் கருத்தாக்கங்களை 2001இல் வெவ்வேறு பாகங்கள் கொண்ட சேமிப்பகம், சர்வர்கள், பயன்பாடுகள், நெட்வொர்க்குகள், பாதுகாப்பு மெக்கானிஸம்கள் மற்றும் நிறுவனம் முழுவதிலும் வர்ச்சுயல்மயமாக்கிவிடக்கூடிய பிற சிஸ்டம் கூறுகள் ஆகியவற்றைக் கொண்டு சிக்கலான ஐடி சிஸ்டம்களின் மேலாண்மையில் சுய-கண்காணிப்பு, சுய-சரிசெய்தல், சுய-உருவமைத்தல் மற்றும் சுய-இணக்கமாக்கல் போன்ற மேம்பட்ட ஆட்டோமேஷன் உத்திகளை விவரிக்கின்ற ஆட்டோனாமிக் கம்ப்யூட்டிங் மேனிஃபெஸ்டோவில் விவரமாக விளக்கியது.

டாட்-காம் பபிளிற்குப் பின்னர் தங்களுடை டேட்டா சென்டரை நவீனமயமாக்கியதன் மூலம் கிளவுட் கம்ப்யூட்டிங் வளர்ச்சியில் Amazonஒரு முக்கியப் பங்காற்றியது, புதிய கிளவுட் கட்டுமானமானது குறிப்பிடத்தக்க உள்புற திறன் மேம்பாடுகளில் காரணமானதைக் கண்டது, யுடிலிட்டி கம்ப்யூட்டிங்கின் அடிப்படையில் 2005இல் Amazon Web Servicesமூலமாக தங்கள் சிஸ்டம்களுக்கான அனுமதியை வழங்கியது. 

2007இல்,Google, IBM மற்றும் பல்வேறு பல்கலைக்கழகங்களும் பெரிய அளவிலான கிளவுட் கம்ப்யூட்டிங் ஆராய்ச்சித் திட்டங்களில் ஈடுபட்டன, இந்த கலைச்சொல் உருவான காலகட்டத்தில் இது ஒரு பரபரப்பான விஷயமாக இருந்தது. 2008ஆம் ஆண்டு மத்தியகாலத்தில், மையநீரோட்ட பிரஸ்ஸில் கிளவுட் கம்ப்யூட்டிங் பிரபலமடைந்தது, அதுசார்ந்த நிகழ்வுகள் பலவும் நடந்தேறின.

2008 ஆகஸ்டில், கார்ட்னர் ஆராய்ச்சி "நிறுவனங்கள் நிறுவனத்திற்கு உரிமையான ஹார்டுவேர் மற்றும் சாப்ட்வேர் சொத்துக்களிலிருந்து ஒரு நபர் பயன்பாடு சேவை அடிப்படையிலான மாதிரிகளுக்கு மாறிக்கொண்டிருப்பதையும்", "கிளவுட் கம்ப்யூட்டிங்கிற்கான இந்த திட்டமிட்ட மாறுதல் ஐடி தயாரிப்புகளிலான சில பகுதிகளில் உடனடி வளர்ச்சியையும், மற்ற பகுதிகளில் பலவீனத்தையும் கொண்டுவரும்" என்பதை உணர்ந்தது

== கிளவுட் கம்ப்யூட்டிங் குறித்த விமர்சனங்களும் தீமைகளும் ==

கிளவுட் கம்ப்யூட்டிங் தங்களது டேட்டாவை பௌதீகரீதியில் வைத்துக்கொள்ள பயனர்களை அனுமதிப்பதில்லை என்பதால்(இதற்குள்ள ஒரே விதிவிலக்கு, டேட்டவை பயனர் தனக்குச் சொந்தமான, USB ஃப்ளாஷ் டிரைவ் அல்லது ஹார்ட் டிஸ்க் போன்ற சேமிப்பகத்தில் சேமி்த்துவைத்துக்கொள்ளலாம் என்பதுதான்) இது பொறுப்பிலிருந்து டேட்டா சேமித்துவைப்பதன் பொறுப்பிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்கிறது என்பதுடன், கட்டுப்பாடு வழங்குநரின் கைகளுக்கு சென்றுவிடுகிறது.


பயனர்களின் சுதந்திரம் வரம்பிற்குட்படுவதற்காகவும், அவர்களை கிளவுட் கம்ப்யூட்டிங் வழங்குநரை சார்ந்திருக்கும்படி செய்வதற்காகவும் கிளவுட் கம்ப்யூட்டிங் விமர்சிக்கப்படுகிறகு, வழங்குநர் விருப்பத்திற்கேற்ப வழங்கும் பயன்பாடுகளையோ அல்லது சேவைகளையோ பயன்படுத்துவதற்கு மட்டுமே வாய்ப்புள்ளது என்றும் சில விமர்சகர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதனால்தான் தி லண்டன் டைம்ஸ் பத்திரிக்கை, கிளவுட் கம்ப்யூட்டிங்கை 1950 மற்றும் 60களில் பயனர்கள் மெயின்ஃபிரேம் கம்ப்யூட்டர்களை இணைக்க "வெற்று" டெர்மினல்கள் மூலமாக தொடர்புகொண்டதோடு ஒப்பிடுகிறது. வகைமாதிரியாக, பயனர்களுக்கு புதிய பயன்பாடுகளை நிறுவிக்கொள்ளும் சுதந்திரம் இல்லை என்பதோடு இதுபோன்ற வேலைகளை செய்வதற்கு அட்மினிஸ்ட்ரேட்டரிமிருந்து அங்கீகாரம் பெறவேண்டியிருக்கிறது. ஒட்டுமொத்தமாக, இது சுதந்திரத்தையும் படைப்பாக்கத்திறனையும் வரம்பிற்குட்படுத்துகிறது. கிளவுட் கம்ப்யூட்டிங் என்பது பழங்காலத்தை நோக்கிச் செல்லுதல் என்று டைம்ஸ் பத்திரிக்கை வாதிடுகிறது.

இதேபோல், ஃப்ரீ சாப்ட்வேர் ஃபவுண்டேஷனின் நிறுவனரான ரிச்சர்ட் ஸ்டால்மன், பயனர்கள் தங்களது அந்தரங்கத்தையும் பர்சனல் டேட்டவையும் மூன்றாம் நபருக்கு தியாகம் செய்வதாக இருப்பதால் கிளவுட் கம்ப்யூட்டிங் சுதந்திரத்தை அபாயத்திற்கு ஆட்படுத்துவதாக இருக்கிறது என்று நம்புகிறார். கிளவுட் கம்ப்யூட்டிங் என்பது"இது அதிகமான மக்கள் சிக்கிக்கொள்ள வேண்டும் என்பதற்காக வைக்கப்பட்டுள்ள கண்ணி மட்டுமே, உரிமைதாரர் அமைப்புக்கள் ஒருகாலத்திற்கு அப்பால் மிக அதிகமாக அவர்களுக்கு செலவு வைக்கும்" என்று அவர் குறிப்பிடுகிறார். 

மேலும் ரிச்சர்ட் ஸ்டால்மனின் அறிதல்படி, இது இண்ட்ராநெட் ஹோஸ்டிங்/டெப்லாயிங் மற்றும் அனுமதி வரம்பிற்குட்படுத்தப்பட்ட(அரசாங்க பாதுகாப்பு, நிறுவனம், இன்னபிற போன்ற) தளங்களுக்கான மற்றும் அவற்றின் பராமரிப்பிற்கான சவாலாக மாறிவிடும். வெப் அனாலிடிக்ஸ் போன்ற டூல்களைப் பயன்படுத்தும் வர்த்தக வலைத்தளங்கள் தங்களது தொழில் திட்டமிடல் போன்றவற்றிற்காக சரியான டேட்டாவை பெற இயலாமல் போய்விடலாம்.

Next generation smartphone

What to expect from mobile phones of the future? Increasing merger with laptops and tablet functionality and at the same time to measure mobile phone. UFO-User Feeling The facility has a revolutionary design concept and raises the functionality of a modern touch smartphone to the next level. By using flexible LCD and light touch technology

Spider Computer Concept

What can say about this concept? Spider Computer, a portable device that relies on a projected screen and laser keyboard to offer you a ready computer on the go. That's why he has three thin legs like a spider. When they are hidden, the device becomes a mobile phone. It can be simply put in your pocket. And when the legs are deployed, the device can easily be placed on a flat surface.
 
 

Thursday, March 15, 2012

Portable printer- future technology devices concept

Portable printer
It was about time that someone came up with this, I mean we are in the portable era! Stick POP is a portable printer that can handle a small amount of load. You can’t overburden it with all your documents, just a small stash that you need pronto. Measuring 23 cm by 6 cm, it’s easy to fit it in your handbag. Just hook it up to your comp /device via USB and get printing! Oh, and an OLED screen on the bar displays the printing status.




Solar Rucksack

The solar rucksack is an innovative backpack concept that has been designed to keep the bodily warmth of users in icy conditions, especially for those who love to climb on mountains peaks or treks or works in polar states. The outer surface of the backpack features solar panels that collect solar energy from the sun and converts it to thermal energy. To distribute the generated heat evenly to the user’s body, a circular patch has been utilized on the clothing that remains attached with the backpack via a connecting pipe. Aside from its ultimate functionality, the stylish design of the backpack aims to enhance the user’s aesthetic than other usual backpacks.


Display unveils newspaper-size flexible e-paper

LG Display unveils newspaper-size flexible e-paper

LG Display has announced its development of a newspaper-size flexible e-paper. The 19-inch wide (250x400mm) flexible e-paper is almost as big as a page of A3 sized newspaper. The product is optimized for an e-newspaper and able to convey the feeling of reading an actual newspaper. Additionally, as the product measures 0.3 millimeters thin, the e-paper weighs just 130 grams despite its 19-inch size.

LG Display arranged TFT on metal foil rather than glass substrate, allowing the e-paper display to recover its original shape after being bent. The use of a metal foil substrate makes the e-paper both flexible and durable while maintaining display qualities. In particular, LG Display applied GIP (gate-in-panel) technology which integrates the gate driver IC onto the panel. This improves its flexibility by removing driver ICs which are attached to the side of panel and hinder the bending of the display.

CTO and executive VP of LG Display, In Jae Chung said, “Our development of the world’s largest flexible display has opened up a new market in the next-generation display sector of e-paper. As the e-paper market is growing at a rapid pace, LG Display will continue to deliver new value to customers and the market through industry-leading technologies and differentiated products.”
Meanwhile LG Display plans to launch mass production of an 11.5-inch flexible e-paper display in the first half of 2010.

LG Display cited DisplaySearch saying that the e-book market will grow from approximately US$370 million in 2009 to US$1.2 billion in 2011 and to US$1.73 billion in 2015.

Blogger templates

Help this Blog Click the link

Like

Facebook likes