அமெரிக்க ஜனாதிபதியின் அலுவலக மாளிகையின் பெயர் வெள்ளை மாளிகை. வாஷிங்டன் நகரின் மத்தியில், "நச்' என்று உள்ளது.இந்த மாளிகை மிகவும் எளிமையானது. ஆனால், மதிப்பிற்குரியது. முழுவதும் வெள்ளையாக வர்ணமடிக்கப்பட்ட மாளிகை இது. இந்த மாளிகையை வடிவமைத்தவர் ஜேம்ஸ் ஹோபன். 1792 முதல் 1800ம் ஆண்டு வரை கட்டப்பட்டது. ஹோபன் ஒரு ஐரிஷ் கட்டட கலை வல்லுனர். ஜனாதிபதி மாளிகையை வடிவமைக்கும் போட்டியில் வென்றதன் மூலம், ஹோபனுக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது.
அயர்லாந்தில் டப்லின் என்னும் இடத்தில் "டுயூக் ஆப் லெயின்ஸ்டர்' என்னும் அரண்மனை அமைந்துள்ளது. இதனை மனதில் கொண்டுதான், அமெரிக்க ஜனாதிபதி மாளிகையை வடிவமைத்ததாக ஹோபன் சொல்கிறார்.இந்த மாளிகையில் முதன்முதலில் வசித்த ஜனாதிபதி, ஜான் ஆடம்ஸ். அவரும், அவருடைய மனைவியும் இங்கு குடியேற வந்தபோது, வெறும் ஆறு அறைகள் தான் தயாராகி இருந்தன. ஜான் ஆடம்ஸின் மனைவி அன்று மிகவும் கஷ்டப்பட்டு சமாளித்த கிழக்கு புறமிருக்கும் மிகச் சிறிய அறைதான், இன்றைய மிகப் பெரிய அறையான விருந்தினர் வரவேற்பறை.
ஆடம்ஸின் மனைவி இந்த வரவேற்பு அறையை, அன்றைய துணி துவைக்கும் சிறிய அறையாக பயன்படுத்தி வந்தார்.1814ம் ஆண்டு அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கு இடையே போர் மூண்டது. பிரிட்டன், அமெரிக்க அதிபர் மாளிகைக்கு தீ வைத்தது. இதனால், மாளிகையின் உள்பகுதி முழுவதும் சேதமடைந்தது. வெளிப்புற சுவரில் ஏற்பட்ட தீ தாக்குதல்களை மறைக்க, வெள்ளை பெயின்ட் அடிக்கப்பட, வெள்ளை மாளிகை என பெயர் வந்தது.
அதேவேளை, சீரழிந்த மாளிகையின் உட்புறம் சீரமைக்கப்பட்டது. அறை வட்ட தென்பகுதி போர்டிகோவும், சம இடைவெளி கொண்ட தூண் வரிசைகளும் கொண்ட தெற்கு போர்டிகோவும் 1920களில் மாளிகையில் சேர்க்கப்பட்டது. அதன் பிறகு, ஒவ்வொரு அமெரிக்க அதிபரின் விலாசமானது இம்மாளிகையானது.
இப்போது இம்மாளிகையின் ஒரு படுக்கை அறையில் நீண்ட படுக்கை ஒன்று உள்ளது. மிக உயரமான மனிதரான ஆபிரகாம் லிங்கன் பயன்படுத்தியது இப்படுக்கை. மேற்குபுறம் 1902ம் ஆண்டு உருவாக்கப் பட்டது. கிழக்கு புறம் 1942ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. மேற்குபுறத்தில்தான் குடியிருப்பு வீடுகள் உள்ளன.
இது மிக பிரமாண்டமான ஜனாதிபதியின் தனிப்பட்ட மாளிகையாக தோற்றமளித்தாலும், ஜனாதிபதியின் குடும்பம் மட்டுமல்லாமல் அவரின் மிகப்பெரிய எண்ணிக்கையிலான ஊழியர்கள், காரியதரிசிகள் மற்றும் உதவியாளர்கள் என ஏராளமானவர்களும் இங்கு வசிக்கின்றனர்.
54 அறைகள், 16 குளியல் அறைகள், எண்ணற்ற ஹால்கள், ஏகப்பட்ட நடைப்பாதைகள் மற்றும் ஸ்டோர் ரூம்கள் உள்ளன.இவ்வறைகளில், பொது மருத்துவர் அறை, பல் மருத்துவர் அறை, தொலைக்காட்சி அறை, வான்கோளரங்க அறை ஆகியனவும் உண்டு. இங்கே உள்ளரங்கு நீச்சல் குளமும் இருக்கிறது.
இங்குள்ள அனைத்து ஊழியர்களையும், அணுகுண்டு தாக்குதலில் இருந்து, அடைகாக்கும் மிகப் பெரிய அறையும் உண்டு.இம்மாளிகையில் இருப்பவர்களை தவிர மற்றவர்கள் வந்து போகும் அறைகள், உணவு அறை, கிழக்கு அறை, நீல பச்சை மற்றும் சிவப்பு என அழைக்கப்படும் வரவேற்பறைகள், அற்புத கண்ணாடி அலங்காரங்கள், நேர்த்தியான கம்பளங்கள் அறைகளுக்கு அழகூட்டும். இங்கே உள்ள தோட்டம், 6.4 ஹெக்டேருக்கு விரிந்து கிடக்கிறது. தோட்டத்தில் புல்வெளிப்பரப்பு, பூந்தோட்டங்கள், வெவ்வேறு வகை மரங்கள் எல்லாம் உண்டு.
தெற்கு போர்டிகோவின் முன்புறம் இருக்கும் புல்வெளிபரப்பு, ஜனாதிபதியின் குடும்பத்திற்குரியது. ஈஸ்டர் ஞாயிறை கொண்டாட, சிறுவர்கள் முட்டை உருட்டல் சம்பிரதாயம் நடக்கும் தினத்தன்று மட்டும் இந்த பிரத்யேக புல்வெளிபரப்பில் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவர்.இந்த தோட்டத்தில் ஏராளமான வகை ரோஜா தோட்டங்கள் உண்டு. விழாக்களின் போது அந்த ரோஜாக்கள் பயன்படுத்தப் படும்.
வாவ் சூப்பர் ஒயிட்டி!
No comments:
Post a Comment