கார்ல் ஸெய்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டு, நோக்கியா தன் பியூர் வியூ 808 மொபைல் போனில், 41 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட கேமராவினைத் தர இருக்கிறது. இந்த மொபைல் போன் மே மாதம் முடிவடைவதற்குள் விற்பனைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதலில் இந்தியாவிலும் ரஷ்யாவிலும் இது விற்பனைக்கு வரும். இந்த ஸ்மார்ட் போனின் சிறப்பம்சம் இந்த கேமரா வாகத்தான் இருக்கும். இந்த கேமராவில் HD 1080p வீடியோ பதிவு மற்றும் இயக்கும் வசதி கிடைக்கிறது. இதன் ஸ்டீரியோ ஆடியோ டோல்பி ஹெட்போன் தொழில் நுட்பத்தில் இயங்குகிறது. இதன் 4 அங்குல AMOLED CBD டிஸ்பிளே திரை கொரில்லா கிளாஸ் பாதுகாப்பினைக் கொண்டுள்ளது. இதன் மற்ற சிறப்பம்சங்களாக, NFC, Stereo FM Radio with FM transmitter, HDMI, 3G, Bluetooth 3.0, WiFi b/g/n, DLNA, aGPS ஆகியவற்றைக் குறிப்பிடலாம். இதன் பேட்டரி 1400 ட்அட திறன் கொண்டதாகும்.இதனைத் தொடர்ந்து விண்டோஸ் சிஸ்டத்தில் இயங்கும் மொபைல் போன் ஒன்றை இதே திறன் கொண்ட கேமராவுடன் வழங்க நோக்கியா திட்டமிட்டுள்ளது. அண்மையில் நடந்த பன்னாட்டளவிலான மொபைல் போன் கருத்தரங்கில், பியூர் வியூ போன் காட்டப்பட்ட போது பலரும் அதன் வடிவமைப்பு மற்றும் செயல்பாட்டில் ஆர்வம் காட்டிப் பாராட்டினர். எனவே இந்த போனை பல நவீன வசதிகளுடன் தர நோக்கியா திட்டமிடுகிறது.
No comments:
Post a Comment