சூரியக் குடும்பத்தை விட்டு தனியாக கண்ணுக்கு தெரியாத தூரத்தில் மறைந்து கிடந்த புதிய கிரகத்தை இங்கிலாந்து விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் கெப்ளர் டெலஸ்கோப்பை கடந்த 2009ஆம் ஆண்டு முதல் நிறுவி உள்ளது. அதி நவீன தொழில்நுட்பம் கொண்ட இந்த டெலஸ்கோப் மூலம் புதிய கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் கண்டறியப்படுகின்றன. இதன் மூலம் 1,50,000 நட்சத்திரங்களை கண்காணிக்க முடியும்.
தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த புதிய கிரகம் சனிக்கிரகம் போன்றும், கே 01-872-0 என்ற நட்சத்திரத்தை சுற்றியும் உள்ளது, இந்த புதிய கிரகத்தை 150 வருடங்களுக்கு முந்தைய தொழில்நுட்பத்தின் மூலம் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இதே தொழில்நுட்பத்தை வைத்து தான் நெப்டியூன் கிரகத்தையும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment