Wednesday, July 4, 2012

தபால் துறை வரலாறு


புராதன இந்தியாவில் கி.மு. 322 இல் சந்திர குப்த மௌரியர் காலத்தில் செய்திகளைப் பரிமாற சிறந்தவொரு அரசு அமைப்பு இருந்ததாக குறிப்புகள் உள்ளன. 1672 இல் மன்னர் சிக்கதேவராயர் காலத்தில் மைசூரில் சிறந்த ஒரு தபால் அமைப்பு நடைமுறையில் இருந்தது. 




கிழக்கிந்தியக் கம்பெனி தமது தேவைகளுக்காக 1988இல் மும்பை, சென்னை ஆகிய நகரங்களில் தபால் அலுவலகங்களை உருவாக்கினார்கள். பிற்பாடு 1774 இல் வங்காள கவர்னர் ஜெனரல் வார்ன்ஹேஸ்டிங் தபால் வசதியை பொது மக்களும் பயன்படுத்துமாறு விரிவுபடுத்தினார். அத்துடன் தபால் அமைப்பை நிர்வகிக்க 'போஸ்ட்மாஸ்டர் ஜெனரல்' என்று ஒரு பதிவையையும் நியமனம் செய்தார்.

1837 இல் இந்தியத் தபால் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

இந்தியாவில் முதல் தபால்தலை 1852இல் சிந்து பகுதி கமிஷனராக இருந்த பார்ட்டன் ஃபெரேரே என்பவரால் வெளியிடப்பட்டது.

'சிந்த் டாக்' எனும ்பெயரில் வெளியான இந்த தபால்தலையே ஆசியாவிலும் வெளியான முதல் தபால்தலை என்னும் சிறப்பைப் பெற்றது.

1854 அக்டோபர் ஒன்றில் இந்திய தபால் சேவை அதிகாரபூர்வமாக அமலில் வந்தது. 

இந்தியாவில் தலைமைத் தபால் அலுவலகம், சப் தபால் அலுவலகம், எக்ஸ்ட்ரா டிப்பார்ட்மெண்டல் பிராஞ்ச் தபால் அலுவலகம் என்னும் நான்கு வகையான தபால் அலுவலகங்கள் உள்ளன.

பின்கோடு (Pincode)

1972 ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்தியாவில் பின்கோடு அமைப்பு உருவாக்கப்பட்டது. பின்கோடு ஆறிலக்கம் கொண்டது. இடமிருந்து வலமாக, முதல் எண் தபால் அலுவலகத்தின் புவியியல் இருப்பிடத்தைக் குறிக்கும். அதற்கடுத்து இரு இலக்கங்கள் துணை மண்டலத்தையும், கடைசி மூன்று இலக்கங்கள் தபால் பிரிப்பு அலுவலகத்தையும் குறிக்கின்றன.

பாராளுமன்ற மேல்சபையில் நடந்த கேள்வி நேரத்தின்போது மத்திய மனிதவளத்துறை மற்றும் தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் கபில் சிபல் கூறியதாவது:

இந்தியா 154,688 தபால் அலுவலகங்களை கொண்டு உலகின் மிகப்பெரிய தபால் துறையாக உள்ளது. இதில் 25,154 தபால் அலுவலகங்கள் மிதமுள்ளவைகள் கிராம சேவாவின் கீழ் செயல்படுகிறது.

24969 தபால் அலுவலகங்கள் கணினிமயமாக்கப்பட்டுள்ளன. இதில் 19,890 அலுவலகங்கள் நெட்வொர்க் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. இதேபோல் கிராம சேவாவின் கீழ் உள்ள அலுவலகங்கள் விரைவில் கணினிமயமாக்கப்படும். இதுபோன்ற தபால் துறை நவீனமயமாக்கும் திட்டத்திற்காக ரூ. 1,877.2 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

தபால் துறை அலுவலகங்களில் ஏ.டி.எம். நிறுவனங்கள் அமைப்பதும் இந்த திட்டத்தின் கீழ் வருகிறது. விரைவில் 1000 ஏ.டி.எம். மையங்கள் அமைக்கப்படும். மேலும்தபால் அலுவலகத்தை வங்கிகளாக மாற்ற ஆகும் செலவு ஒரு வங்கியை தொடங்க ஆகும் செலவில் ஒரு பங்குதான் ஆகும். இதன்மூலம் தபால் துறைகள் வங்கிகளாக செயல்படும். இதற்கு ரிசர்வ் வங்கியின் உதவி கோரப்பட்டுள்ளது என கூறினார்

தற்காலத்தில் தபால்துறை மிகவும் பின்தங்கியுள்ளது. காரணம் தொழில்நுட்பம் மற்றும் பெருகிவரும் தொலைத்தொடர்பு சாதனங்கள். இதை தவிர்க்கும்பொருட்டு தபால்துறையுடன் பல திட்டங்களை தொடங்கி அதை செயல்படுத்தியும் வருகிறது அரசு. தபால்கள் அல்லாத இன்ஸ்யூரன்ஸ், தங்கம் விற்பது, சேமிப்புத் திட்டங்கள் போன்ற பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி செயல்படுத்தியும் வருகிறது தபால்துறை. தபால் துறையில் அழிவிலிருந்து காக்க இத்தகைய திட்டங்கள் அதற்கு உதவும் என்று நம்பப்படுகிறது.

No comments:

Post a Comment

Blogger templates

Help this Blog Click the link

Like

Facebook likes