Monday, September 24, 2012

அவசர உதவிக்கு

 
இதற்காகவே 24 மணி நேரமும் செயல்படக்கூடிய அவசர எங்கள் உள்ளன. காவல் துறை கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ள 044-28447200 என்ற என்னை எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம். கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்ட இந்த சேவையில் சம்பந்தப்பட்ட துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோக ஒவ்வொரு துறைக்கும் இலவச அவசர அழைப்பு எண்கள் உள்ளன. இவை அனைத்தும் 24 மணி நேர சேவை கொண்டவை.

அவசர போலிஸ் உதவிக்கு 100, தீயணைப்புத் துறைக்கு 101, போக்குவரத்து முறைகேட்டிற்கு 103, ஆம்புலன்ஸ் உதவிக்கு 108, குழந்தைகளுக்கான உதவிகளுக்கு 1098, பெண்களுக்கான உதவிக்கு 1091, முதியோருக்கான உதவிக்கு 1253, மீனவர்கள் மற்றும் கடலோர பாதுகாப்பு உதவிக்கு 1093, விலங்குகள் பாதுகாப்பு உதவிக்கு 12700, ராகிங் தொல்லை உதவிக்கு 155222 அல்லது 18001805512 என்று ஒவ்வொன்றிற்கும் ஒரு எண் உண்டு. இவை அனைத்தையும் நினைவில் வைத்துக்கொள்வது சிரமம். அதிலும் வெளிநாடு சென்றிருக்கும் போது நமது நாட்டிற்கான அவசர உதவி எண்கள் பயன்படாது.

இன்றைக்கு வெளிநாட்டு பயணம் என்பது சாதரணமானதாக உள்ளது. அங்கு நாம் ஏதேனும் பிரச்சனையில் மாட்டிக்கொண்டால், அவசர உதவிக்கு என்ன செய்வது? அதற்காகத்தான் உலகம் முழுக்க ஒட்டுமொத்த உதவிக்கு ஒரு அவசர உதவி எண்ணை வைத்துள்ளனர். அந்த எண் 911, 112.

இந்த எண்ணை ஒவ்வொரு நாடும் தங்கள் நாட்டில் இருக்கும் காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கோ அல்லது உதவிமயத்திற்கோ சென்றடையும்படி அமைத்திருப்பார்கள். நமது தமிழகத்தில் 911, 112 எண்களை டயல் செய்தால், அது தானாக அவசர எண் 100க்கு சென்று சேர்வது போல் அமைத்துள்ளனர். இந்த எண்ணிற்கு மிஸ்டுகால் கொடுத்தால் கூட போதும் அவர்கள், நம்மை தொடர்பு கொண்டு உதவி செய்வார்கள்
உலகில் நாம் எங்கு சென்றாலும் அவசர உதவிக்கு உங்களுக்கு உடனே நியபகதிர்க்கு வர வேண்டிய எண்கள் !!!!!

எப்போது, என்ன நடக்கும் என்று சொல்ல முடியாத உலகில்தான் நாம் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சுற்றுலா செல்லும் போது நாம் நினைத்துப் பார்க்க முடியாத சம்பவங்கள் எங்குவேண்டுமானாலும் நடந்துவிடலாம். அப்போது உதவிக்கு யாரை அழைப்பது என்று பரிதவிப்போம்.

செல்போன்களில் இதற்கு பணம் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. மேலும் போனில் கீபேட்லாக் ஆகியிருந்தால் கூட 1,2,9 ஆகிய இந்த மூன்று எண்களை மட்டும் டயல் செய்ய முடியும். உங்கள் மொபைல் சிம் பிளாக் ஆகியிருந்தாலும், சிம் பிளாக் ஆகியிருந்தாலும், சிம் கார்டே இல்லாமலும் கூட இந்த 911, 112 எண்களை அழைக்க முடியும். மொபைல் சிக்னல் இல்லாத இடங்களில் கூட டயல் செய்ய முடியும். எனவே உலகம் முழுவதும் அவசர உதவிக்கு அழைக்கக் கூடிய 911, 112 எண்களை நாம் நினைவில் வைத்திருப்பது நல்லது

மாவீரன் ஃபிடல் கேஸ்ட்ரோ


கியூபா ! 1492 ல் கொலம்பஸ் அட்லாண்டிக் சமுத்திரத்தில் கண்டெடுத்த குட்டித் தீவு. கண்டெடுத்த நாளிலிருந்துஸ்பெயின் நாட்டின் சுரண்டல் ஆதிக்கத்தின் அடிமையாக சிக்கித் தவித்துக் கொண்டிருந்தது. இதன் அடிமை விலங்கைஉடைத்தெறிய சுமார் நூறு வருடங்களுக்கு முன் கியூபா மக்கள் சுதந்திர போராட்டத்தில் குதித்தார்கள். அதிசயம்!ஆனால் உண்மை. அமெரிக்க ராணுவம் கியூபா மக்களின் சுதந்திர போராட்டத ்தின் ஆதரவாக களத்தில் குதித்துஸ்பெயின் நாட்டு ராணுவத்தை கியூபாவிலிருந்து விரட்டி அடித்தது. கியூபா விடுதலை அடைந்ததாகவும்அறிவிக்கப்பட்டது. சுமார் 60 ஆண்டுகள் மாறி மாறி பல்வேறு ஆட்சியாளர்கள் வந்து போனார்கள்.

1952 ஆம் ஆண்டு கண்துடைப்புக்காக தேர்தல் நடத்துவதாக அறிவித்தான் சர்வாதிகாரி பாடிஸ்டா. ஃபிடல் கேஸ்ட்ரோஎன்ற இளம் வழக்கறிஞர் தேர்தலில் குதித்தார். பாடிஸ்டா என்ன நினைத்தானோ... தேர்தலை நிறுத்திவிட்டுஜனாதிபதியாக தன்னைத்தானே பிரகடனப்படுத்திக் கொண்டான். இதை எதிர்த்து அந்த இளம் வழக்கறிஞன் நீதிமன்றம்சென்றான். அன்றைய சட்டமோ சர்வாதிகாரிக்கு கிரிடம் சூட்டியது தோல்வியோடு நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்தவழகரிஞன் கேஸ்ட்ரோ கருப்பு அங்கியை உதறிவிட்டு புரட்சிக் காரனாக மாறினான்.

1953ஜூலை 26 அன்று மோன் காடாபாரக் தாக்குதல் வழக்கில் 76 நாள்கள் தனிமைச் சிறையில் இருந்துவிட்டு பிறகு விசாரணைக்காக அழைத்து வரப்பட்டபோது ஃபிடல் காஸ்ட்ரோ நீதிபதியைப் பார்த்து கேட்டார்:

"நீங்கள் ஒரு குற்றவாளியைப் பிடித்து விசாரணை செய்யும்போது எத்தனைக் காலமாக அவன் வேலையில்லாமல் இருந்தான் எனக் கேட்பதுண்டா? அவனுக்கு எத்தனைக் குழந்தைகள் என்றும் வாரத்தில் அவன் எத்தனை நாள்கள் உணவு உண்டான்;எத்தனை நாள்கள் பட்டினி கிடந்தான் எனவும் நீங்கள் அவனிடம் கேட்பதுண்டா? நீங்கள் அவனது சமூக சூழ்நிலையைப் பற்றி விசாரிப்பது உண்டா? அதிகம் ஒன்றும் சிந்திக்காமல் அவனை சும்மா சிறையில் தள்ளுவீர்கள்.

ஆனால்,வர்த்தக நிறுவனங்களுக்கும் கடைகளுக்கும் தீ வைத்து காப்பீட்டுத் தொகையைக் கொள்ளையடிப்பவர்கள்,சில மனித உயிர்களும் இதில் சாம்பலாக்கப்பட்டிருந்தாலும் அவர்கள் சிறைக்குப் போகமாட்டார்கள்.இன்சூர் செய்தவர்களிடம் வழக்குரைஞரை நியமிக்கவும் நீதிபதிகளுக்கு இலஞ்சம் கொடுக்கவும் தேவையான பணம் உள்ளது. பட்டினியால் வாடி வதங்கும் ஏழையை நீங்கள் சிறையில் அடைப்பீர்கள்.

ஆனால், அரசின் கோடிக்கணக்கான ரூபாயைக் கொள்ளையடிக்கின்ற கொடியவர்களில் எவரும் ஓர் இரவு கூட சிறைகளில் கழித்திருக்க மாட்டார்கள். ஆண்டின் இறுதியில் ஏதாவது ஒர் உன்னத கேளிக்கை விடுதியில் நீங்கள் அவர்களுடன் சேர்ந்து உணவு உண்பீர்கள்.அதன் மூலம் அவர்கள் உங்களுடய ஆதரவைப் பெறுகின்றனர்."

உலக வரைபடத்தில் கியூபா என்கின்ற அந்த குட்டித் தீவுக்கு கிரிடம் சூட்டப் போகும்தானைத் தலைவன் அந்த இளம் வக்கீல் என்று யாரும் அறிந்திருக்கவில்லை.கியூபாவின் விடுதலைக்கு அன்று தோள் கொடுத்த அமெரிக்காவிற்கு, கண்ணில்தைத்த முள்ளாக இந்த குட்டி தீவு மாறுமென்று அமேரிக்கா கூட கனவிலும்நினைக்கவில்லை. ஆம் ! இந்த மாவீரன் கேஸ்ட்ரோவிற்கு வலது கரமாக வந்துசேர்ந்த 'சே' என்று உலகம் செல்லமாக அழைக்கும் மாவீரன் சேகுவேராவும்,கேஸ்ட்ரோவும் இணைந்து நடத்திய விடாப்பிடியான போராட்டம்தான் இன்றும்அமெரிக்காவிற்கு சவாலாகவும் விடுதலைக்கு போராடும் நாடுகளுக்குஉதாரணமாகவும் விளங்கும், கியுபா என்னும் அந்த தேசம்.

அமெரிக்க ஏகாதிபத்தியம் வஞ்சகத்தனமாக தனது சகாவான மாவீரன் சேயை கொன்ற பிறகும் தனது மக்களுடன் இணைந்து இன்று வரை காலத்தையும் வென்றுஅந்த மண்ணின் பெருமையை காத்து வரும் அந்த மாவீரனின் பெருமையை நாமும்போற்றுவோம்

Blogger templates

Help this Blog Click the link

Like

Facebook likes