Monday, September 19, 2011

Tamil Techno


16 மணிநேரம் பேக்கப் கொண்ட பேட்டரியுடன் புதிய லேப்டாப்: லினோவா


திங்க்பேட் எக்ஸ்-220 என்ற புதிய கணினியை லினோவா அறிமுகப்படுத்தவிருக்கிறது. இந்த புதிய லேப்டாப் 16 மணிநேரம் தொடர்ந்து பேக்கப்பை கொடுக்கும் ஆற்றல் படைத்த பேட்டரியுடன் வருகிறது.

இதன் சிபியு பல விஷேச அம்சங்களை கொண்டிருக்கும். விரல்கள், குச்சி மற்றும் கீபோர்ட் ஆகிய அனைத்தின் மூலமும் இயக்க முடியும்.

இதன் மல்டி டச் ஹார்ட்வேர் மல்டிமீடியா சாதனங்களை கட்டுப்படுத்துகிறது. அடுத்த சிறப்பம்சம் என்னவென்றால் இதன் கீறல் வீழாத கொரில்லா கண்ணாடி திரையாகும்.

திங்க்பேட் எக்ஸ்-220 ஹைடெபினிஷன் க்ராபிக் சப்போர்ட்டுடன், 2ஜிகாஹெர்ட்ஸ் இன்டல் கோர் ப்ராஸஸரை பெற்றுள்ளது. இதில் க்ராபிக் வேலைகள் செய்வது மிக எளிது. இது பல்திறன் கொண்ட நோட்பேடாகும். இதில் அலுவலக அப்ளிகேஷன்களையும், கான்பரன்சிங் வசதியையும் பெற முடியும்.

தகவல் தொடர்பு வசதிக்காக இதன் கீபோர்டு ஒலி சப்ரஷன் கீகளை கொண்டுள்ளது. மேலும் இதன் கேமரா மூலம் உரையாடல் மற்றும் வீடியோ கான்பரன்ஸ் செய்ய முடியும். ஏற்கனவே கூறியபடி இதன் பேட்டரி திறன் மூலம் மின் இனணப்பு இல்லாமல் தொடர்ந்து 16 மணி நேரம் இதனை இயக்க முடியும்.

திங்க்பேட் எக்ஸ்-220 தகவல் பரிமாற்றத்தை 10 மடங்கு அதிக வேகத்தில் வழங்குவதற்காக யுஎஸ்பி 3.0வை வழங்குகிறது. இதன் சேமிப்பு வசதி மிக அலாதியானது.

அதாவது சேமிப்புக்காக 8ஜிபி ரேமையும் 320 ஜிபி டிரைவையும் மற்றும் 160 ஜிபி ஹார்டு டிஸ்க்கையும் பெற்றுள்ளது. அலுவலக வேலைகளுக்கான அனைத்து அப்ளிகேஷன்களையும் இது வழங்கும்.

திங்க்பேட் எக்ஸ்-220 அலுவலக பணியாளர்களை மனதில்கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மேலதிகாரிகள் எந்த இடத்தில் இருந்தாலும் தங்களுக்கு கீழ் வேலை பார்க்கும் அலுவலகர்களோடு தொடர்பு கொள்ள முடியும். இந்த புதிய லேப்டாப் ரூ. 70,000க்கு விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை ஒரு அலுவலக கணினி என்றும் அழைக்கலாம். 

Working with computers

 
 
1# கணிப்பொறியின் திரையை பார்வை மட்டத்திலும் பார்வைக்கு நேர்க்கோட்டிலும் அமைக்க வேண்டும்.


2# திரைக்கும் உங்கள் கண்களுக்கும் இடையேயான தூரம் 16"-ஆக இருக்க வேண்டும்.



3# சி.பி.யு. வை கை எட்டும் தூரத்தில் வைக்கும் அதேநேரம் திரை அமைந்திருக்கும் மேசை மேல் வைக்காமல் வலப்பக்கம் மேசைக்கு கீழே வைக்கவேண்டும். ( இது வலது கை பழக்கம் உள்ளவர்களுக்கு ; இடது கை பழக்கம் உள்ளவர்கள் இடப்பக்கம் வைக்கலாம் )



4# உங்கள் முழங்கால்கள் மேசைக்கு கீழே வசதியாக அமையுமாறு மேசை உயரம் இருத்தல் அவசியம். அல்லது அதற்குத்தகுந்த உயரத்துக்கு உங்கள் நாற்காலியை உயர்த்தியோ தாழ்த்தியோ கொள்ள வேண்டும். கால்களை தொங்க விடாமல் ( பாதத்தின் விரல்கள் பாகம் உயர்ந்தும் குதிகால் பாகம் தாழ்ந்தும் உள்ள ) ஏதாவது ஒரு நிலையான கட்டையில் வைத்துக்கொள்ள வேண்டும்.


5# விசைப்பலகை, நாற்காலியின் கைப்பிடியால் முட்டுக்கொடுக்கப்பட்ட முழங்கைக்கு கீழ்மட்டத்திலும் அதன்மூலம் தோள்களுக்கு அழுத்தம் தராத வகையிலும் இருத்தல் வேண்டும்.


6# விசைப்பலைகையின் முன் புறம் சற்று தூக்கி இருக்கும் படி அமைத்துக்கொள்ள வேண்டும்.


7# முழங்கை கோணம் தோராயமாக 90° இருக்கும்படி அமைத்து, மணிக்கட்டுகள் முழங்கைக்கு கிடைமட்டமாக அமையுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.


8# 'மவுசை' (இதற்கு என்ன தமிழ்ப்பெயர்?) விசைப்பலகை மட்டத்திலே அதற்கு முடிந்தவரை நெருக்கமாக வைக்கவேண்டும்.


9# முதுகுவலி அவஸ்தை வராமல் இருக்க, எப்போதுமே முதுகை கணிப்பொறி இயக்கத்திற்கென்றே பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட சுழல் நாற்காலியுடன் ஒட்டி சாய்த்து அதே நேரம் முதுகு வளையாமல் செங்குத்தாக இருக்கும் படி அமர வேண்டும்.


10# ஒருமுறை இந்த அமர்வில் இருந்து எழுந்துவிட்டால், உடனே மீண்டும் அமர்ந்துவிடாமல், (சிறுது நேரம் நின்றுவிட்டோ, ஒரு சிறு உலா போய்விட்டோ...) அடுத்த அமர்விற்கு குறைந்தது 20 வினாடிகளிலிருந்து 2 நிமிடங்கள் வரை இடைவெளி விட்டு மீண்டும் அமர்தல் நல்லது.







பேஸ்புக்குக்கு போட்டியாக கூகுள் ஆரம்பித்துள்ள கூகுள் ப்ளஸ் சேவையின் சோதனை ஓட்டமே பெரும் வெற்றியாக அமைந்துள்ளது.

இந்த சமூக தளத்தில் இணைய லட்சக்கணக்கான மெயில்கள் குவிந்துவிட்டன. இதன் விளைவு, கூகுள் ப்ளஸ் அழைப்பு அனுப்ப முடியாத அளவுக்கு திணறிவிட்டது.

எனவே, 'மன்னிக்கவும், அழைப்பு அனுப்ப முடியாத அளவுக்கு வாடிக்கையர் மெயில்கள் குவிந்துவிட்டன. சோதனை ஓட்டம் முடிந்த பிறகு அனைவரும் பயன்படுத்தும் வகையில் கூகுள் ப்ளஸ் செயல்படும்' என அறிவிப்பு வெளியிட்டுள்ளார் அந்நிறுவனத்தின் சமூகத் தள பொறுப்பாளர் குண்டோத்ரா.

பல கோடி பேர் ஒரே நேரத்தில் பயன்படுத்தினாலும், தாங்கும் அளவுக்கு இந்த கூகுள் ப்ளஸை பலமான தளமாக உருவாக்கி வருகிறது கூகுள்.

பேஸ்புக்கில் வருவதுபோன்ற ஸ்பேம் செய்தி தொல்லைகள் இந்த கூகுள் ப்ளஸில் இல்லாத அளவுக்கு கோடிங் உருவாக்கப்பட்டு வருவதாக கூகுள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

ஆப்பிள் இயங்கு தளத்தில் செயல்படும் ஐபோன்களுக்காகவே மொபைல் கூகுள் ப்ளஸ் என்ற மென்பொருளையும் அறிமுகப்படுத்தியுள்ளது கூகுள்.

முழுமையாக கூகுள் ப்ளஸ் பயன்பாட்டுக்கு வரும் தருணத்தில் ட்விட்டர் மற்றும் பேஸ்புக் இரண்டுமே பெரும் சரிவைச் சந்திக்கும் என்று இப்போது கணிப்புகளை வெளியிட ஆரம்பித்துள்ளன சைபர் உலக ஜாம்பவான் நிறுவனங்கள்.

கூகுள் தேடும் தளம் தான், இன்று இணையத்தில் அதிகம் நாடப்படும் தளமாகத் தொடர்ந்து இருந்து வருவது அனைவரும் அறிந்ததே. அப்படியானல், குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நேரத்தில், அதிகம் தேடப்படும் பொருள் தெரிந்தால், உலகம் எதனை நோக்கி அதிகம் கவலைப் படுகிறது அல்லது தெரிந்து கொள்ள ஆசையாய் இருக்கிறது என்று தெரிந்து கொள்ளலாமே. நாடு, இனம்,மொழி பாகுபாடின்றி, எது குறித்து மக்கள் அதிக சத்தம் எழுப்பிக் கொண்டிருக்கின்றனர் என்று தெரிந்து கொண்டு, நாமும் உலகத்தோடு ஒட்ட வாழ்கிறோமா என்று அறிந்து கொள்ளலாம் அல்லவா!


கவலைப் படவே வேண்டாம், கூகுள் தேடுதல் சாதனமே இந்த தகவல்களை கூகுள் ட்ரெண்ட்ஸ் என்ற தலைப்பில் தருகிறது. இதற்கு முதலில் Google.com செல்லுங்கள். இதன் மேல் பக்கத்தில் more என்று இருப்பதில் கிளிக் செய்திடுங்கள். பின்னர் இதனை அடுத்து even more என்பதில் கிளிக்கிடுங்கள். கிடைக்கும் அடுத்த பக்கத்தில், அப்படியே மவுஸின் சக்கரத்தினை உருட்டிச் சென்று Trends என்று இருக்குமிடம் சென்று நிறுத்துங்கள். இதன் மீது கிளிக் செய்திடுங்கள். இங்குதான் மேலே முதல் பத்தியில் நாம் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பதில் கிடைக்கும். இங்குதான், பன்னாட்டு மக்களும் எந்த செய்தி அல்லது தகவலுக்காக, கூகுள் தேடுதல் தளத்தினை நாடி உள்ளனர் என்று காட்டப்படும்.
இங்கு காட்டப்படும் தேடுதல் பட்டியலில் நீங்கள் எதிர்பார்த்த தேடுதல் விஷயம் இல்லை என்றால், உங்களுக்கு ஏமாற்றம் ஏற்படலாம். கவலைப்பட வேண்டாம். நீங்கள் எதனை எதிர்பார்க்கிறீர்களோ, அதனை தேடுதல் சொற்களாக அமைத்து, தேடுதல் கட்டத்திலேயே “Search Trends” என டைப் செய்து, என்டர் தட்டினால், உடன் ஒரு வரை படமாக முடிவுகள் காட்டப்படும். உங்கள் மனதில் ஒன்றுக்கு மேற்பட்ட பொருள் குறித்த தேடல்களை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும் என எண்ணினால், அதனை தேடுதலுக்கான விண்டோவில், ஒரு கமா மூலம் பிரித்துக் கொடுத்தால், இதே போன்ற வரைபடத்தின் மூலம் முடிவுகள் காட்டப்படும்.



Blogger templates

Help this Blog Click the link

Like

Facebook likes