மைக்ரோசாஃப்ட் விண்டோசின் அடுத்த ரிலீஸ் "விண்டோஸ் 8" 2012-ஆம் வருடம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விண்டோஸ் 7 2009-ல் வந்தது. அதை வைத்து பார்த்தால், இனிமேல் சுமார் மூன்று/நான்கு வருடங்களுக்கு ஒரு முறை புது விண்டோஸ் ரிலீஸ் செய்ய மைக்ரோசாப்ட் திட்டம் போட்டு உள்ளதாக தெரிகிறது.
விண்டோஸில் எட்டு போட்டு மைக்ரோசாஃப்ட் ஷொட்டு வாங்குமா? குட்டு வாங்குமான்னு பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
XP-க்கு ஆப்பு. இது நாட்டாமை தீர்ப்பு.
இனிமேல் விண்டோஸ் XP-யை புது கணினியோடு pre-install செய்து விற்கக்கூடாது என்று மைக்ரோசாப்ட் கணினி தயாரிப்பாளர்களுக்கு கண்டிப்பாக சொல்லிவிட்டது. விஸ்டாவில் இருந்த பல பிரச்சனைகளால், மைக்ரோசாப்ட் XP-யை அப்படியே விட்டுவைத்திருந்தது.
விண்டோஸ் 7தான் வரலாற்றிலேயே அதிக வேகமாக விற்பனையாகும் ஆபரேடிங் சிஸ்டம் என்று பெயர் வாங்கியுள்ளது.
ஒரு நொடிக்கு 7½ லைசென்ஸ்கள் விற்பனை ஆகிறது என்று, வேறு உருப்படியான வேலை இல்லாதவர்கள் கணக்கு போட்டு சொல்லி இருக்கிறார்கள்.
பயன்படுத்துபவர்களுக்கு வைரஸ் வந்து 7½ பிடிக்காமல் இருந்தால் சரி.
சீகேட் உலகின் முதல் 3 TB (External) ஹார்ட் டிஸ்க்கை விற்பனைக் கொண்டுவந்துவிட்டது. TB என்றால் Terabyte. இதில் 120 High Definition சினிமா படங்கள் அல்லது 1500 வீடியோ கேம்களையும் சேமித்து வைக்க முடியும்.
கலிபோர்னியாவை சேர்ந்த ஒரு 12 வயசு பையன் அலெக்ஸ் மில்லர், ஃபயர்பாக்சில் ஒரு பாதுகாப்பு குறைபாடு இருப்பதை கண்டுபிடித்து மொசில்லா பெளண்டேஷனிடமிருந்து 3000 டாலர் வெகுமதி வாங்கிவிட்டான். நம்ம பசங்களும் இருக்காங்களே!
லேட்டஸ்டாக ஆப்பிள் வெளியிட்ட மேக்புக் ஏர் கணினிகளில் வழக்கமாக சேர்க்கப்படும் அடோபி ஃபிளாஷ் மென்பொருள் இல்லை. ஆனால் மேக்கில் அடோபி ஃபிளாஷ் வேலை செய்வதை ஆப்பிள் தடுக்கவில்லை. அதனால் மேக் பயனர்கள் தாங்களாகவே ஃபிளாஷை டவுன்லோடு செய்து நிறுவிக்கொள்ளலாம்.
சுமார் 8.3 சதவீதம் சந்தை பங்கு உள்ள மேக் ஓஸ் X ஆபரேடிங் சிஸ்டத்தின் அடுத்த வெர்ஷன் 10.7 "Lion" என்று பெயரிடப்பட்டுள்ளது.
Mac OS X-ன் அனைத்து வெர்ஷன்களின் பெயர் பின்வருமாறு:
10.0 Cheetah
10.1 Puma
10.2 Jaguar
10.3 Panther
10.4 Tiger
10.5 Leopard
10.6 Snow Leopard
10.7 Lion
No comments:
Post a Comment