கணித மேஜை ராமானுஜம் பிறந்த டிசம்பர் 22 ம் தேதி தேசிய கணிதநாளாக கடைபிடிக்கப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். ராமானுஜத்தின் 125 வது பிறந்த நாளை ஒட்டி 2012 ம் ஆண்டை கணித ஆண்டாக அனுசரிக்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
கணித மேதை ராமானுஜத்தின் 125 வது பிறந்தநாள் விழா சென்னை சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில், நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், ராமானுஜத்தின் கணித புலமைகள் வியக்கத்தவை என்று தெரிவித்தார். உலகம் போற்றும் அந்த கணித மேதையை சிறப்பிக்கும் வகையில் இனி அவரது பிறந்தநாளான டிசம்பர் 22ம் நாள் தேசிய கணித நாளாக கடைபிடிக்கப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்தார்.
2012 ம் ஆண்டு கணித ஆண்டு
ராமனுஜத்தின் 125 வது பிறந்தநாளை சிறப்பிக்கும் விதமாக 2012 ம் ஆண்டு கணித ஆண்டாக அனுசரிக்கப்படும் என்றும் பிரதமர் அறிவித்தார். முன்னதாக அவர், கணித மேதை ராமானுஜத்தின் அஞ்சல் தலை மற்றும் அஞ்சல் உறையை வெளியிட்டார். ராமானுஜம் எழுதிய கணித நூல்களின் புதிய பதிப்புகளையும் பிரதமர் வெளியிட்டார். ராமானுஜத்தின் வாழ்க்கை வரலாற்றினை எழுதிய ராபர்ட் காளிக்கலுக்கு சிறப்பு கவுரவம் விழாவில் சிறப்பு கவுரவம் அளிக்கப்பட்டது.
No comments:
Post a Comment