Saturday, December 10, 2011

உலகின் முதல் தொடுதிரை 3 ஜி செல்பேசி கைகடிகாரம்

உலகின் முதல் தொடுதிரை 3 ஜி செல்பேசி கைகடிகாரம்
தொழில்நுட்பம் - நவீன கருவிகள் ஓர் அறிமுகம்
இதுவரை ஜேம்ஸ் பாண்ட் படங்களில் மட்டும் பார்த்துக்கொண்டிருந்த இது போன்ற சாதனம் தற்போது சந்தையில் விற்பனைக்கு வரவுள்ளது.

LG நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த உலகின் முதல் தொடுதிரை(Touch Screen) 3 ஜி செல்பேசி கைகடிகாரம், தற்போது சந்தையில் உள்ள 3ஜி செல்பேசிகளை விடவும் சிறப்பான வசதிகளை கொண்டுள்ளது.

சில வாரங்களுக்கு முன்பு லாஸ் வேகசில் நடைபெற்ற நுகர்வோர் மின்னணு கண்காட்சியில் பொதுமக்களுக்கு முதலில் காண்பிக்கப்பட்ட இந்த கைகடிகாரத்தின் சிறப்பம்சம் நம் பேச்சை புரிந்து கொள்ளும் திறமை (Speech recognition) மற்றும் குரல் ஆணைகள்(Voice Commands). சில செல்பேசிகளில் இந்த அம்சம் இருந்தாலும், இந்த செல்பேசியில் இது மிகவும் மேம்படுத்தப்பட்டுள்ளது.

ஒருவரை தொலைபேசியில் அழைக்கவும்,இதில் உள்ள mp3 ப்ளேயரை உபயோகித்து பாடல் கேட்கவும் குரலால் ஆணையிட்டால் போதுமானது. தொடுதிரை வசதி வழக்கம்போல அசத்தல். மேலும் mp3 பிளேயர், ப்ளுடூத் வசதிகளையும் கொண்டுள்ளது. இதனோடு ப்ளுடூத் ஹெட் செட்டும் இணைந்தே வருகிறது.

No comments:

Post a Comment

Blogger templates

Help this Blog Click the link

Like

Facebook likes