Sunday, December 4, 2011

2012 என்ன நடக்கலாம் அறிவியல் ரீதியாக கணித்து சொல்லும் பயனுள்ள தளம்

2012 -ம் ஆண்டு அறிவியல் ரீதியாக உலகில் என்ன நடக்கும் என்பதை தெரிந்து கொள்ளும்  ஆர்வம் நம்மில் அனைவருக்கும் இருக்கும்,  பல இடங்களில் குறிப்பாக மாயன் காலண்டர்  கணிப்புபடி 2012 டிசம்பர் 12 -ல் உலகத்திற்கு பாதிப்பு வரலாம் என்ற செய்தியும் வெகுவேகமாக  மகக்ளிடையை பரவிவருகிறது இதைப்பற்றிய அறிவியல் ரீதியான விளக்கத்தை அளிப்பதற்காக ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.




மாயன் காலண்டர் -ஐ பொருத்தவரை இது அதில் கூறி உள்ள அனைத்தும் நடந்து  இருக்கிறது, 2012 -ல் உலகம் அழியும் என்பது மாயன் காலண்டரில் உள்ள தகவல் என்று பல பேர் கூறிவருகின்றனர் அதற்கு பின் மாயன் காலண்டரில் எந்த தகவலும் இல்லை. அறிவியல் ரீதியாகவும் பூமிக்கு ஆபத்து இருக்கிறது என்று பல பேர் கூறிக் கொண்டிருக்கும்  நிலையில் உண்மையான தகவல்களை அறிவியல் ரீதியாக சொல்ல ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://www.2012predictions.net
2012 -ஐ மக்கள் , விஞ்ஞானிகள் ,  எப்படி எல்லாம் கணித்திருக்கின்றனர் என்பதை ஒவ்வொருவரும் தங்களுக்கு தெரிய வரும் அல்லது தெரிந்த தகவல்களை இத்தளத்தில் பகிர்ந்து கொள்லலாம், பூமியின் வயது என்ன என்பதில் தொடங்கி மாயன் காலண்டர் வரை  அனைத்தையும் விரிவாகவும் அறிவியல் ரீதியாகவும் விளக்குகிறது. மாயன்  காலண்டர் கூறி உள்ளது எல்லாம் சித்திரம் மற்றும் சில விநோத கூறியீடுகள் சில சமயங்களில் அதிகாரப்பூர்வமாக மாயன் காலண்ட்ரில் இப்படி தான் இருக்கிறது என்று யாரும் துல்லியமாக கூறியதில்லை, ஆனால் ஒரு நிகழ்ச்சி நடந்தவுடன் அதை மாயன் காலண்டருடன் ஓப்பிடு செய்து ஏற்கனவே இது மாயனில் சொல்லி இருக்கிறது  என்பதை தெரிவிக்கின்றனர். சில நிகழ்ச்சிகள் மாயன் காலண்டரில் உள்ளதை பார்க்கும் போது உண்மையான நிகழ்ச்சி தான் என்பதை மறுக்க முடியாத அளவிற்கு ஆதாரமும்  உள்ளது. இதைத்தவிர வானவியல் சம்பந்தமான பிரச்சினைகள் 2012 -ல் என்னவெல்லாம் இருக்கிறது என்பதை தெளிவாக அனைவரும் புரிந்து கொள்ளும் வண்ணம்  விளக்கப்பட்டுள்ளது. கண்டிப்பாக 2012 -ல் என்னவெல்லாம் நடக்கலாம் என்று  கணிப்பவர்களுக்கு இந்தத்தளம் பதிலாக இருக்கும்.

No comments:

Post a Comment

Blogger templates

Help this Blog Click the link

Like

Facebook likes