Sunday, April 8, 2012

GOOGLE GLASS


ன்ரர்நெட் உலகத்தையே ஆட்டிப் படைக்கும் கூகுள் நிறுவனம், உலகின் முதல்தர தேடுபொறியாக உள்ளது. இந் நிறுவனம் பல பில்லியன் டாலர்களைச் செலவுசெய்து புதுப் புது தொழில் நுட்ப்பத்தைக் கண்டு பிடிக்கிறது. இதன் ஒருவடிவமாக கூகுள் கண்ணாடியை அது கண்டுபிடித்துள்ளது.

இக் கண்ணாடி 2012ம் ஆண்டு இறுதியில் விற்பனைக்குவர உள்ளது. கம்பியூட்டர் செயல்பாடுபோல இயங்கும் இக் கண்ணாடியில் உள்ள அம்சங்களே தனி. இதில் ஜி.பி.எஸ் என்னும் செயற்கைக்கோள்(சட்டலைட்) வழிநடத்தல் இருக்கிறது.

இதனூடாக நடை பயணிகள் ஒரு சாலையை அல்லது வீட்டி இலகுவாகக் கண்டுபிடிக்க முடியும். வீடியோ படம் எடுக்க முடியும். எடுத்த படத்தை நன்பர்களுக்கு 1 செக்கனில் அனுப்பவும் முடியும். அதுமட்டுமா ! நான் சொல்லும் கட்டளைகளை அது நிறைவேற்ற வல்லது.

படம் எடு என்று மட்டும் சொன்னால் போதும் அது உடனே படம் எடுக்க ஆரம்பித்துவிடும். 4ம் தலைமுறை இன்ரர்நெட் வசதிகொண்டதாக அது அமைந்துள்ளது. சிறந்த தேடுபொறியாகவும் அதனைப் பயன்படுத்தலாம் மோபைல் தொலைபேசி உள்ளது.

அழைக்கும் நபரின் உருவம் கண்ணாடியில் தோன்றும். பிறிதொருவர் இதேபோல ஒரு கண்ணாடியை அணிந்திருந்தால், அவர் உங்கள் நண்பராக இருந்தால் அதனையும் அது காட்டவல்லது.
அந் நபர் எவ்வளவு தூரத்தில் இருக்கிறார் என்பதனைக் கூட அது துல்லியமாகக் காட்டிவிடும். கூகுள் வெளிவிடும் இக் கண்ணாடி குறித்த காணொளியை இணைத்துள்ளோம். அதனைப் பார்த்தால் மீதம் விளங்கும்.

No comments:

Post a Comment

Blogger templates

Help this Blog Click the link

Like

Facebook likes