Tuesday, October 18, 2011


முழுவதும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டதும் உலகின் மிக மலிவான
விலையிலும் கிடைக்கக் கூடியவாறு டேப்ளட் பிசியை Datawind எனும் நிறுவனம் வெளியிட்டது.


டேப்ளட் பிசி (Tablet PC) என்று அழைக்கப்படும் மினி வகையான கம்ப்யூட்டர்கள் தற்போது சந்தையில் பிரபலமாக இருக்கின்றன. ஆப்பிள் ஐபேடும் இந்த வகையில் சார்ந்ததே. சாம்சங், ஆப்பிள் உட்பட பெரும்பாலான நிறுவனங்களின் டேப்ளட் பிசிகள் விலையில் அதிகமாக இருப்பதால் வாங்குவதற்கு ஆர்வம் இருந்தாலும் வாங்காமல் இருப்பார்கள். இவைகள் கையடக்கமாகவும் கணிணியின் வசதிகளைக் கொண்டும் மொபைல் போன்களின் வசதிகளையும் கொண்டிருப்பதால் பலரால் விரும்பப் படுகிறது.

இந்திய நாடு உலகிலேயே மலிவு விலையில் முதன்முறையாக ஒரு டேப்ளட் பிசியைத் தயாரித்துள்ளது. அக்டோபர் 6 ந்தேதி டெல்லியில் மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி கபில்சிபல் இதனை அறிமுகப்படுத்தினார். இந்த தொடுதிரை கணிணி Datawind என்ற நிறுவனத்தின் மூலம் உருவாக்கப் பட்டுள்ளது. பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கும் மலிவு விலையில் கணிணி அறிவு சென்று சேர வேண்டும் என்ற முயற்சியின் காரணமாக இந்த டேப்ளட் பிசி தயாரிக்கப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார். இந்த வருட இறுதிக்குள் ஒரு லட்சம் கருவிகள் மாணவர்களுக்கு 1500 ருபாய் விலையில் வழங்கப்படும். ஆகாஷ் (Akash) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கணிணியைத் தயாரிக்க 2300 ருபாய் செலவானதாகக் குறிப்பிட்டார்கள்.


இதில் உள்ள வசதிகள்:

* ஆண்ட்ராய்டு இயங்குதளம் 2.2 (Android)
* 2GB Hard disk
* 256 Mb RAM
* 2GB External Memory ( Support upto 32GB)
* 3 Hour Battery Power
* 7” Touch Screen Display
* HD Video Processor
* Wifi & 3G Modems
* 2 USB Ports ( கீபோர்டு மற்றும் மவுஸ் இணைக்க முடியும்)


மேலும் இதனை வர்த்தக ரீதியாகவும் நவம்பர் மாதத்தில் Datawind நிறுவனம் 3000 ருபாய் விலையில் அனைவருக்கும் அறிமுகப் படுத்தப் போகிறது. இந்தியக் கணிணிச் சந்தையில் அதிகமான விலையில் விற்கப்படும் பொருள்களுக்கு இடையே இதன் வரவு புதிய மாற்றத்தை உருவாக்கலாம். UbiSlate என்று பெயரிடப்பட்டுள்ள இதில் செல்லுலர் மோடம் இணைக்கப்பட்டுள்ளது. இதனால் இணையப் பயன்பாடும் மொபைல் பயன்பாடுகளும் இதிலேயே பயன்படுத்திக் கொள்ளலாம். இதன் மூலம் உலகின் இணையப் பயன்பாட்டாளர்களில் இந்தியாவும் முக்கிய இடத்தைப் பெறும் எனச் சொல்லப்படுகிறது.

No comments:

Post a Comment

Blogger templates

Help this Blog Click the link

Like

Facebook likes