Showing posts with label Tamil History. Show all posts
Showing posts with label Tamil History. Show all posts

Tuesday, February 12, 2013

108 சித்தர்களும் அவர்களின் ஜீவ சமாதிகளும்



1. திருமூலர் - சிதம்பரம்.
2. போகர் - பழனி என்கிற ஆவினன்குடி.
3. கருவூர்சித்தர் – கருவூர், திருகாளத்தி, ஆணிலையப்பர் க...ோவில்.
4. புலிப்பாணி - பழனி அருகில் வைகாவூர்.
5. கொங்கணர் - திருப்பதி, திருமலை
6. மச்சமுனி - திருப்பரங்குன்றம், திருவானைக்கால்
7. வல்லப சித்தர் என்னும் சுந்தரானந்தர் - மதுரை.
8. சட்டைமுனி சித்தர் – திருவரங்கம்.
9. அகத்தியர் – திருவனந்தபுரம், கும்பகோணத்திலுள்ள கும்பேஸ்வரர் கோவில்.
10. தேரையர் - தோரணமலை (மலையாள நாடு)
11. கோரக்கர் – பேரூர்.
12. பாம்பாட்டி சித்தர் - மருதமலை, துவாரகை, விருத்தாசலம்.
13. சிவவாக்கியர் - கும்பகோணம்.
14. உரோமரிசி - திருக்கயிலை
15. காகபுசுண்டர் - திருச்சி, உறையூர்.
16. இடைக்காட்டுச் சித்தர் - திருவண்ணாமலை
17. குதம்ப்பைச் சித்தர் - மயிலாடுதுறை
18. பதஞ்சலி சித்தர் - சிதம்பரம், அழகர் கோவில், இராமேஸ்வரம்.
19. புலத்தியர் - பாபநாசம், திருஆலவுடையார் கோவில்.
20. திருமூலம் நோக்க சித்தர் - மேலை சிதம்பரம்.
21. அழகண்ண சித்தர் - நாகப்பட்டினம்.
22. நாரதர் - திருவிடைமருதூர், கருவை நல்லூர்.
23. இராமதேவ சித்தர் - அழகர் மலை
24. மார்க்கண்டேயர் - கருவை நல்லூர்.
25. புண்ணாக்கீசர் - நண்ணாசேர்.
26. காசிபர் - ருத்ரகிரி
27. வரதர் - தென்மலை
28. கன்னிச் சித்தர் - பெருங்காவூர்.
29. தன்வந்தரி – வைத்தீஸ்வரன் கோவில்
30. நந்தி சித்தர் - காசி, திருவாவடுதுறை, காளங்கி.
31. காடுவெளி சித்தர் - திருக்காஞ்சிபுரம்.
32. விசுவாமித்திரர் - காசி, திருவாவடுதுறை, காளங்கி.
33. கௌதமர் - திருவருணை, திருவிடைமருதூர்.
34. கமல முனி - ஆரூர்
35. சந்திரானந்தர் - திருவாஞ்சியம்.
36. சுந்தரர் - வாரிட்சம், திருவாரூர்.
37. காளங்கி நாதர் - திருக்கடவூர், திருப்பணந்தாள்.
38. வான்மீகி - எட்டிக்குடி, திருவையாறு.
39. அகப்பேய் சித்தர் - திருவையாறு, எட்டிக்குடி.
40. பட்டினத்தார் - திருவொற்றியூர்.
41. வள்ளலார் - வடலூர்.
42. சென்னிமலை சித்தர் - கேரளத்தில் உள்ள நாங்குனாசேரி.
43. சதாசிவ_பிரமேந்திரர்_சமாதிசதாசிவப் பிரம்மேந்திரர் - நெரூர்.
44. ராமகிருஷ்ணர், சாரதாதேவியார் - பேலூர் மடம்
45. ராகவேந்திரர் - மந்திராலயம்.
46. ரமண மகரிஷி - திருவண்ணாமலை, மாத்ருபூதேஸ்வரர் ஆலயம்.
47. குமரகுருபரர் - காசி.
48. நடன கோபால நாயகி சுவாமிகள் - காதக்கிணறு.
49. ஞானானந்த சுவாமிகள் - அனைத்து தபோவனங்கள்.
50. ஷீரடி சாயிபாபா - ஷீரடி.
51. சேக்கிழார் பெருமான் - மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி சன்னதிக்கு பின்புறம்.
52. ராமானுஜர் - ஸ்ரீரங்கம்.
53. பரமஹம்ச யோகானந்தர் - கலிபோர்னியா.
54. யுக்தேஸ்வரர் - பூரி.
55. ஜட்ஜ் சுவாமிகள் - புதுக்கோட்டை
56. ஆதி பராசக்தி திருகோவிலில் 21 சித்தர்களின் ஜீவ சமாதிகள் உள்ளன.
57. கண்ணப்ப நாயனார் - காளஹஸ்தி.
58. சிவப்பிரகாச அடிகள் - திருப்பழையாறை வடதளி.
59. குரு பாபா ராம்தேவ் - போகரனிலிருந்து 13 கி.மி.
60. ராணி சென்னம்மாள் - பிதானூர், கொப்புலிமடம்.
61. பூஜ்ய ஸ்ரீ சித்த நரஹரி குருஜி - மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் அருகில் சித்தாசிரமம்.
62. குழந்தையானந்த சுவாமிகள் - மதுரை காளவாசல்.
63. முத்து வடுகநாதர் - சிங்கம் புணரி.
64. இராமதேவர் - நாகப்பட்டிணம்.
65. அருணகிரிநாதர் - திருவண்ணாமலை.
66. பாடக்சேரி தவத்திரு இராமலிங்க சுவாமிகள் – தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் திருக்கோவில்.
67. மௌன சாமி சித்தர் - தென்காசியிலிருந்து செங்கோட்டை செல்லும் வழியில் உள்ளது.
68. சிறுதொண்டை நாயனார் - திருச்செட்டாங்குடி.
69. ஒடுக்கத்தூர் சுவாமிகள் - பெங்களூரில் அல்சூர் ஏரிக்கரையில் உள்ளது.
70. வல்லநாட்டு மகாசித்தர் - வல்லநாடு.
71. சுப்பிரமணிய சித்தர் - ரெட்டியப்பட்டி.
72. சிவஞான பாலசித்தர் - மயிலாடுதுறை முருகன் சந்நிதி.
73. கம்பர் - நாட்டரசன் கோட்டை.
74. நாகலிங்க சுவாமிகள் - புதுவை அம்பலத்தாடையார் மடம்.
75. அழகர் சுவாமிகள் - தென்னம்பாக்கம்.
76. சிவஞான பாலைய சுவாமிகள் - புதுவைக்கு வடக்கே 6 மைல் தொலைவில் உள்ளது.
77. சித்தானந்த சுவாமிகள் - புதுவைக்கு அருகிலுள்ள கருவடிக்குப்பம்.
78. சக்திவேல் பரமானந்த குரு - புதுவையிலுள்ள முதலியார் பேட்டை.
79. ஸ்ரீராம் பரதேசி சுவாமிகள் - வில்லியனூர் செல்லும் பாதையில் வலப்புறம் அமைந்து உள்ளது.
80. அக்கா சுவாமிகள் - புதுவையில் உள்ள குதிரைக்களம் அருகே.
81. மகான் படே சுவாமிகள் - சின்னபாபு சமுத்திரம்.
82. கம்பளி ஞானதேசிக சுவாமிகள் - புதுவை அருகில் ருத்திர பூமிக்கு சமீபமாக அமைந்துள்ளது.
83. பகவந்த சுவாமிகள் - புதுப்பாளையத்தில் கெடில நதிக்கரையில்.
84. கதிர்வேல் சுவாமிகள் – ஸ்ரீலங்கா, புதுவை அருகில் சித்தன் குடியிலும் சமாதி உண்டு.
85. சாந்த நந்த சுவாமிகள் - ஸ்ரீ சாரதா சிவகங்கை பீடத்திற்கு அருகில் உள்ளது.
86. தயானந்த சுவாமிகள் - புதுப்பாளையத்தில் கெடில நதிக்கரையில்.
87. தஷிணாமூர்த்தி சுவாமிகள் - பாண்டிசேரியடுத்த பள்ளித் தென்னல்.
88. ஞானகுரு குள்ளச்சாமிகள் - புதுவை.
89. வேதாந்த சுவாமிகள் - புதுவை, திருமுத்துகுமார் சுவாமிகள் தோட்டத்தில் உள்ளது.
90. லஷ்மண சுவாமிகள் - புதுவையிலுள்ள புதுப்பட்டி.
91. மண்ணுருட்டி சுவாமிகள் - புதுவையிலுள்ள சுதேசி காட்டன் மில் எதிரில்.
92. சுப்பிரமணிய அபிநய சச்சிதானந்த பாரதி சுவாமிகள் - பாண்டிசேரியிலுள்ள எல்லப் பிள்ளை.
93. யோகி ராம் சுரத்குமார் (விசிறி சுவாமிகள்) - திருவண்ணாமலை.
94. கோட்டூர் சுவாமிகள் - சாத்தூர் அருகிலுள்ள கோட்டூர்.
95. தகப்பன் மகன் சமாதி - கிரிவலம் வந்த நல்லூர் அருகே பனையூர்.
96. நாராயண சாமி அய்யா சமாதி - நாகர்கோவில்.
97. போதேந்திர சுவாமிகள் - தஞ்சை மாவட்டத்திலுள்ள மருதநல்லூர்.
98. அவதூர ரோக நிவர்தீஸ்வரர் சுவாமிகள் - சென்னை பூந்தமல்லி.
99. வன்மீக நாதர் - எட்டிக்குடி.
100. தம்பிக்கலையான் சித்தர் - சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் திருக்கோவிலில் உள்ள 108 சிவலிங்கங்களில் இரண்டாவதாக உள்ள லிங்கத்தில் ஐக்கியம் ஆகியுள்ளார்.
101. மெய்வரத் தம்பிரான் சுவாமிகள் - திருச்சி, ஜெயங்கொண்ட சோழபுரத்திலிருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ளது.
102. குகை நாச்சியார் மகான் - திருவண்ணாமலை.
103. வாலைகுருசாமி - சிதம்பரத்திலுள்ள கொம்மடிக் கோட்டை.
104. பாம்பன் சுவாமிகள் - திருவான்மியூர்.
105. குமாரசாமி சித்தர் சுவாமிகள் - கோயமுத்தூரிலுள்ள பூராண்டான் பாளையம்.
106. பெரியாழ்வார் சுவாமிகள் - அழகர் கோவில் (மதுரை)
107. மாயம்மா ஜீவசமாதி - கன்னியாகுமரி.
108. பரமாச்சாரியார் ஜீவசமாதி - காஞ்சிபுரம்

Friday, August 10, 2012

மெரீனா

மெரீனா 


காலையில் கடல் காற்றில் வாக்கிங் போனது...மாலையில் சூடான தேங்காய், மாங்காய், பட்டாணி சுண்டலுடன் கடலின் அழகில் மனதைப் பறிகொடுத்தது.. என சென்னைவாசிகள் அனைவரிடமும் மெரீனா பற்றிய இனி
ய நினைவுகள் நிறைந்திருக்கும். மெரீனாவில் வாக்கிங் போகும் வயோதிகர்கள் முதல்... காதலியுடன் கரை ஒதுங்கும் வாலிபர்கள் வரை அனைவரும் நன்றி சொல்ல வேண்டிய ஒருநபர் இருக்கிறார். அவர்தான் மவுண்ட்ஸ்டூவர்ட் எல்பின்ஸ்டோன் கிராண்ட் டஃப் (Mountstuart Elphinstone Grant Duff).காரணம் இவர்தான் மெரீனாவுக்கு பேரும் வைத்து, சோறும் வைத்தவர். ஆமாம், இவர்தான் ஜார்ஜ் கோட்டைக்கும் வங்கக் கடலுக்கும் இடையில் வெறும் மணல்வெளியாக இருந்த பகுதியை அழகிய கடற்கரையாக மாற்றியவர். 1881இல் சென்னை துறைமுகம் கட்டப்படும் வரை, இன்றைக்கு காமராஜர் சாலை இருக்கும் இடம்வரைக்கும் கடல் இருந்தது. கடலை ஒட்டி வெறும் சேறும்சகதியும்தான் நிறைந்து கிடந்தது.



1881இல் இருந்து 1886 வரை சென்னையின் ஆளுநராக இருந்தவர்தான் நம்ம கிராண்ட் டஃப். இவருக்கு வங்கக் கடலையும், அதன் கரையையும் பார்க்கும் போது, மண்டைக்குள் மணியடித்ததன் விளைவு, சென்னைக்கு ஒரு அழகிய கடற்கரை கிடைத்தது. 1884இல் நடைபாதை எல்லாம் அமைத்து மெட்ராஸ்வாசிகளுக்கு ஒரு ஒழுங்கான கடற்கரையை உருவாக்கிக் கொடுத்தார் கிராண்ட் டஃப். அதற்கு 'மெட்ராஸ் மெரீனா' என்றும் பெயர் வைத்தார்.



இத்தாலியில் இருக்கும் சிசிலித் தீவின் நினைவாக இந்தப் பெயரை வைத்ததாக கிராண்ட் டஃப் ஒரு கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார். மெரீனா (Marine-கடல்) என்றால் "கடலில் இருந்து" என்று அர்த்தம். டஃப் அமைத்துக் கொடுத்த இந்த கடற்கரை அன்றைய மெட்ராஸ்வாசிகளுக்கு ஒரு சொர்க்கபுரியாகவே திகழ்ந்தது.



கோட்டையின் தெற்குப் பகுதியில் இருந்து சாந்தோம் வரை நீண்டு கிடக்கும் இந்த கடற்கரையில் காலாற நடப்பதே ஒரு இனிய அனுபவமாக இருந்தது. அன்னி பெசண்ட் அம்மையார் கூட, தாம் நடத்தி வந்த 'நியூ இந்தியா' பத்திரிகையில் மெரீனாவின் அழகைப் பற்றி விவரித்திருக்கிறார். 1914இல் வெளியான ஒரு கட்டுரையில், 'மெரீனாவைப் போல நீண்ட, அழகிய கடற்கரை இந்தியாவில் வேறு எங்கும் கிடையாது. மெட்ராஸின் தவிர்க்க முடியாத அழகு மெரீனா' என்று எழுதியிருக்கிறார்.



சுமார் 13 கி.மீ தூரம் நீளும் இந்த கடற்கரை உலகின் இரண்டாவது மிக நீளமான கடற்கரையாக கருதப்படுகிறது. கடற்கரையில் சிலை வைக்கும் கலாச்சாரம் முதலில் 1959ஆம் ஆண்டுதான் உதித்தது. அந்த ஆண்டு குடியரசு தினத்தன்று மெரீனா கடற்கரையில் புகழ்மிக்க உழைப்பாளர் சிலை நிறுவப்பட்டது. அதனைத் தொடர்ந்து திருவள்ளுவர், நேதாஜி, சுப்பிரமணிய பாரதி, ஔவையார், கண்ணகி என நிறைய பேர் வந்துவிட்டார்கள். இதில் கண்ணகி மட்டும் சில நாட்கள் விடுமுறையில் அரசு அருங்காட்சியகம் போய் வந்தார். தலைவர்கள் வரிசையில் ஜி.யூ.போப், கான்ஸ்டான்சோ பெஸ்கி எனப்படும் வீரமா முனிவர் என வெளிநாட்டு அறிஞர்களுக்கும் இடம்கொடுத்து கௌரவித்துக் கொண்டிருக்கிறது மெரீனா.



சுமார் 30 ஆண்டு காலம் மெரீனாவில் குடியிருந்த பிறகு, விடைபெற்றுப் போனது சீரணி அரங்கம். 1970இல் கட்டப்பட்ட திறந்தவெளி அரங்கமான இதில் நின்றபடி எத்தனையோ தலைவர்கள் ஏராளமான அரசியல் மற்றும் சமூக உரைகளை ஆற்றி இருக்கிறார்கள். அனல் பறக்கும் அந்த உரைகளால் மாலை நேரக் குளிர்காற்றில் வெப்பநிலையை அதிகரித்துக் கொண்டிருந்த சீரணி அரங்கம், கடற்கரையை நவீனப்படுத்த வசதியாக 2003இல் இடித்துத் தள்ளப்பட்டது. இதைத் தொடர்ந்து 2008ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சி, மெரீனாவை இன்னும் கொஞ்சம் மெருகூட்டியது.



மெரீனாவிற்கு வரும் அனைவரும் கடலுக்கு அடுத்தபடியாக கால் பதிக்கும் இடம், பேரறிஞர் அண்ணா மற்றும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் ஆகியோரின் நினைவிடங்கள்தான். கடற்கரைக்கு எதிர்புறம் சேப்பாக்கம் மைதானம், சென்னைப் பல்கலைக்கழகம், பிரசிடென்சி கல்லூரி, விவேகானந்தர் இல்லம், குயின் மேரீஸ் கல்லூரி, ஆல் இந்தியா ரேடியோ என பழமையும், புதுமையும் கைகோத்து நிற்கும் சென்னையின் முக்கியக் கட்டடங்கள் வரிசைகட்டி நிற்கின்றன.



ஒருபுறம் ஆர்ப்பரிக்கும் கடல், மறுபுறம் கண்ணைப் பறிக்கும் கலைநயமிக்க கட்டடங்கள் என இயற்கையின் பிரம்மாண்டத்தையும், உழைப்பின் உன்னதத்தையும் ஒருசேர நினைவூட்டியபடி அமைதியாக நின்று கொண்டிருக்கிறது மெரீனா கடற்கரை.




* விடுமுறை நாட்களில் தினமும் சுமார் 50 ஆயிரம் பேர் மெரீனாவிற்கு வருகிறார்கள்.



* சென்னையின் கலங்கரை விளக்கம் தற்போது மெரீனாவில்தான் இருக்கிறது.



* 2004ஆம் ஆண்டு சுனாமியின்போது மெரீனா கடற்கரை கடுமையாக பாதிக்கப்பட்டது.



* பாதுகாப்பு கருதி மெரீனாவில் குளிப்பது சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளது.

Friday, July 6, 2012

சாக்கடல் Dead Sea


இறந்த கடல் அல்லது செத்த கடல் அல்லது சாக்கடல் என்றழைக்கப்படும் இந்த ஏரிதான் இஸ்ரேலையும் (பாலஸ்தீனம் மேற்குக் கரை) ஜோர்டானையும் பிரிக்கிறது. பள்ளி நாட்களில் புவியியல் புத்தகங்களில் படித்தி...ருப்பீர்கள், உலகின் மிகவும் தாழ்வான இடமான இங்குள்ள நீரின் உவர்ப்பால் எந்த உயிரினமும் வாழ முடியாது, இதன் அடர்த்தியால் எவராலும் இதனுள் மூழ்க முடியாது.

இஸ்ரேல் - ஜோர்டான் எல்லையில் மத்தியதரைக் கடலோடு சேர்ந்திருக்கும் ஒரு உப்பு நீர் ஏரிதான் சாக்கடல் உண்மையில் இதற்கு சாக்கடல் என்ற பெயர் பொருந்தாது. முதலாவதாக இந்தப் பெயர் குறிப்பிடுவதுபோல இது ஒரு கடல் அல்ல.

இது ஒரு பெரிய ஏரிதான். உலகத்திலேயே மிகவும் அடர்த்தி மிகுந்த உப்பு நீர் உள்ள ஏரி இது. சாதாரண கடல் நீரைவிட ஏழு அல்லது எட்டு மடங்கு அதிகமான உப்பும் மற்ற உப்புப் பொருட்களும் சாக்கடல் நீரில் கலந்திருக்கின்றன. உப்பு மற்றும் மற்ற உப்புப் பொருட்களின் அதிகமான அடர்த்தியின் காரணத்தால் மீன்களோ மற்ற சாதாரண நீர் வாழ் உயிரினங்களோ இங்கே வாழ முடியாது.

இந்தக் காரணத்தால்தான் இதை சாக்கடல் என்று அழைக்கிறார்கள். ஆயினும் இங்கும் இந்தப் பெயர் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. சாக்கடல் என்ற பெயரைக் கேட்கும்போது எந்த ஒரு உயிரினமும் இல்லாத கடல் என்றுதானே நாம் நினைப்போம்? அது தவறு. உப்பை உணவாகக் கொள்கின்ற பலவித நுண் உயிரிகள் சாக்கடலில் நல்லபடியாக வாழ்கின்றன.

உலகில் மிக கீழ் மட்டத்தில் உள்ள இக்கடல் வெறும் 425 மீட்டர்களே கடல் அளவை விட உயரமான நிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதிக உப்பு தன்மையுள்ள இக்கடல் 1,20,000 ஆண்டுகளுக்கு முன் வற்றி போன போதும் திரும்ப வந்தது போல் இம்முறை வற்றினால் சுத்தமான நீர் முற்றிலுமாக தடுக்கப்பட்டு விட்டதால் இது இறந்து விடும் அபாயம் உள்ளது என்றும் விஞ்ஞானிகள் கூறினர்.

ஹாலோ பாக்டீரியம், ஹாலோபியம், ட்யூனாலைலா எனும் நுண் உயிரிகளை உதாரணமாகச் சொல்லலாம். இவை சூரிய ஒளியைப் பயன்படுத்தி உணவை உருவாக்கிக்கொள்ளும் திறன் பெற்றவை. இவை, தாவரங்களில் உள்ள குளோரோபிலுக்குச் சமமான ஒரு இயற்கைப் பொருளை தாமாகவே உற்பத்தி செய்து, அதன் உதவியுடன் உணவை உற்பத்தி செய்துகொள்கின்றன.

சாக்கடலில் பொட்டாசியம், மக்னீசியம், புரோமைடுகள் ஆகியவை பெரிய அளவில் அடங்கியிருக்கின்றன. நிறைய ரசாயன மற்றும் ரசாயன உரத் தொழிற்சாலைகள் இவற்றைப் பயன்படுத்திவருகின்றன. சாக்கடலில் தண்ணீர் மிகவும் அடர்த்தியாக இருப்பதால் அதில் மனிதர்கள் மூழ்குவது சிரமம். மனிதர்கள் அதில் மிதக்கலாம். சாக்கடலில் படுத்தபடி பத்திரிகை படிக்கின்ற வெளிநாட்டுப் பயணிகளின் படங்கள் பிரபலமானவை.

மைசூர் சிங்கம் மன்னர் ஹைதர் அலி


ஹைதர் அலி

வீரம், மானம், தியாகம் இவையெல்லாம் வர்க்கங்களுக்கு அப்பாற்பட்டவை. வர்க்கங்களுக்கிடையேயான போராட்டங்கள் உலகின் போக்குகளை மாற்றியிருக்கின்றன. பல நேரம் ஏழை வர்க்கத்தில் தோன்றிய சாமான்யர்களால் வரலா...றுகளையே திணறடிக்கவும் முடிந்திருக்கிறது.அப்படியரு வரலாற்று பெருவீரன்தான் ஹைதர் அலி. ஹைதர் என்றால் சிங்கம் என்று அர்த்தம். ஆங்கிலேயர்களின் ஆதிக்கப் போருக்கு எதிராக கர்ஜித்த மைசூர் சிங்கம்தான் ஹைதர் அலி.

இவரது முன்னோர்கள் பஞ்சாபைச் சேர்ந்தவர்கள். 17ஆம் நூற்றாண்டில், ஒரு சூபி குடும்பம் குல்பர்காவை நோக்கி வந்தது. அப்பகுதியில் பீஜப்பூர் சுல்தான்களின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஷியா சிந்தனைப் பிரிவின் தாக்கமும், பாரசீக மொழியின் ஆளுமையும் அப்பகுதியில் இருந்தது. அக்குடும்பத்தில் மார்க்க அறிஞர்கள், போர் வீரர்கள், தர்ஹா பணியாளர்கள் என பலரும் இருந்தனர்.

இக்குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் 1686ல் ஒளரங்கசீப், பீஜப்பூர் மீது படையெடுத்தபோது, அதை எதிர்த்துப் போரிட்டு உயிர் துறந்திருக்கிறார்கள். அந்த சூஃபி குடும்பத்திலிருந்த ஒருவர் தான் பத்தே முஹம்மது. பஞ்சாபிலிருந்து புறப்பட்டு, பல ஊர்களில் குடியமர்ந்து இறுதியாக கோலார் (தங்கவயல்) பகுதியில் குடியேறினார்கள். இக்குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இடைக்காலத்தில் கன்னடத்தின் வெவ்வேறு பகுதிகளில் தங்களின் வசதிக்கேற்ப சூழ்நிலைக்கேற்ப வாழ்க்கையை அமைத்துக் கொண்டனர்.
ஆனால், பத்தே முஹம்மது கோலாரில் தங்கினார். பின்னர் ஆற்காடு நவாபின் படையில் முக்கிய வீரராகப் பணியில் சேர்ந்து, முக்கிய தளபதியாக உயர்ந்தார்.

சிங்கம் பிறந்தது

அப்போது தஞ்சாவூரில் செய்யது புர்கானுதீன் என்ற அறிஞரின் மகளை மணமுடித்தார். இவர்களுக்குப் பிறந்தவர்தான் ஹைதர் அலி. முகலாயப் பேரரசர் ஒளரங்கசீப் மரணித்து 14 வருடங்களுக்குப் பிறகு 1721ல் பிறந்தார் ஹைதர் அலி.ஒளரங்கசீபின் மரணத்திற்குப் பின்னால் முகலாய சாம்ராஜ்யம் அரசியல் குழப்பத்திற்கு உள்ளாகி பலவீனம் அடைந்தது. அவரது வாரிசுகளின் திறமையின்மையால் பாபரில் தொடங்கிய முகலாயர் வரலாறு, முடிவை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த காலக்கட்டத் தில்தான் ஹைதர் அலி வளர்கிறார்.
அக்காலக் கட்டத்தில்தான் ஒளரங்கசீபால் நிர்வாகத் தலைவர்களாக நியமிக்கப்பட்ட நவாபுகளும், நிஜாம்களும் முகலாயப் பேரரசை உடைத்து தங்களைத் தாங்களே ஆட்சியாளர்களாக முடிசூட்டிக் கொள்கின்றனர். அப்போதுதான் ஆங்கிலேயர்கள் வங்கக் கடலோரம் தங்களின் வியாபாரத்தை அரசியல் தந்திரங்களுடன் வளர்த்துக் கொண்டிருந்தனர். இவர்களுக்குப் போட்டியாக பிரெஞ்சுக்காரர்கள் வேறு.

மைசூர் அரசியல்

இத்தகைய அரசியல் தட்பவெப்பம் நிலவிக் கொண்டிருந்த போது, மைசூரை உடையார்கள் ஆண்டு வந்தனர்.இதற்கு முன்பு மைசூர், விஜயநகரப் பேரரசின் கீழும், பாமினி¢,
ுல்தான்களின் ஆட்சியின் கீழும் ஆளப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.அப்போது கிருஷ்ணராஜா என்ற 20 வயது இளைய மன்னனிடம் சாதாரண படை வீரர்களாக ஹைதர் அலியும், அவரது அண்ணன் ஷாபாஸ் சாஹிபும் பணியில் சேர்ந்தனர்.

1749ல் நடைபெற்ற தேவனஹள்ளிப் போரில் இவர்கள் காட்டிய வீரமும் தீரமும் மன்னரை வியப்பில் ஆழ்த்தியது.தொடர்ந்து முன்னேற்றம்அதற்குப் பரிசாக குதிரைப் படைக்குத் தளபதியாக நியமிப்பார் ஹைதர் அலி. திறமைசாலியின் உழைப்பு வீண் போவதில்லைதானே…!
1750-ல் ஆங்கிலேயர்களுக்கும் பிரஞ்சுகாரர்களுக்கும் இடையில் கர்நாடக யுத்தம் நடைபெற்றது. மைசூர் அரசு பிரஞ்சுக்காரர்களுக்கு ஆதரவாக இருந்தது. அப்போது நடைபெற்ற போரில் ஹைதர் அலி ஆங்கிலேயர்களுக்கு எதிரான அணியில் போராடினார்.

அந்தப் போர் அனுபவம்தான் ஹைதர் அலிக்கு தன்னம்பிக்கையை ஊட்டியது! ஐரோப்பியர்களின் ராணுவ நுட் பங்களையும், நவீன ஆயுதங்களைக் கையாளும் முறையையும் அறிந்துகொள்ள அந்த அனுபவங்கள் உதவியது.
இத்தருணத்தில் மைசூர் ஆட்சியில் நிலவிய உள் அரசியலை நினைவூட்டிக் கொள்ள வேண்டும். 1734ல் ஐந்து வயதில் குழந்தை மன்னராகப் பதவியேற்ற சிக்க கிருஷ்ணராஜாவை ஆட்டிப் படைக்கும் அமைச்சராக இருந்தவர் நஞ்சராஜர். இவரும் படைத்தளபதி தேவராஜும்தான், குழந்தை மன்னரின் தந்தையைக் கொன்றவர்கள் என்பது ஒரு கூடுதல் தகவலாகும்!

அத்தகைய திறமை(!) வாய்ந்த அமைச்சர் நஞ்ஞராஜர், ஹைதர் அலியின் திறமையை நம்பினார். மைசூர் ஆட்சியின் ஒரு பகுதியாக இருந்த திண்டுக்கல்லை நிர்வகிக்கும் பொறுப்பை ஹைதர் அலிக்கு வழங்கினார். தன் மீது வைத்த நம்பிக்கையை அவர் வீணாக்கவில்லை. ஐரோப்பிய ராணுவ நுட்பங்களைக் கண்டறியும் இராணுவ ஆய்வுக் கூடத்தை திண்டுக்கல்லில் உருவாக்கினார். மேலும் ஆங்கிலேப் படையை சமாளிக்கும் வகையில் பீரங்கி படையையும் அங்கு உருவாக்கினார்.

பட்டமும் பாராட்டுகளும்

இன்னொருபுறம் ஆட்சிக்கு எதிராக மைசூர் படையில் அதிருப்தி உருவாகியது. சம்பள உயர்வு பிரச்சனையாக உருவெடுத்தது. கடைசியில் 1758ல் கலகமாக மாறியது. கலகத்தை அடக்கும் பொறுப்பு ஹைதர் அலியிடம் ஒப்படைக்கப்பட்டது. சாட்டையைச் சுழற்றி அனைவரையும் கட்டுக்குள் கொண்டு வந்தார். அதற்கு அடுத்த வருடம் மராட்டியப் படை மைசூரைத் தாக்கியது. வலுவான மராட்டியப் படையை வேறு யாரால் எதிர்கொள்ள முடியும்? இப்போதும் ஹைதர் அலிதான் தலைமையேற்று களமாடினார்.
அந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில் ‘‘தைரியம் கொண்ட வெற்றிச் சிங்கம்’’ என்ற பட்டத்தை மைசூர் அரசவை ஹைதருக்கு வழங்கி கௌரவித்தது.

எந்த ஒரு தலைவனும் தன்னைச் சுற்றியிருப்பவர்களின் குறைகளைக் கேட்டறிந்து, கோரிக்கைகளை நிறைவேற்றினால்தான் சிறந்த தலைவனாக உருவாக முடியும்.மைசூர் படையில் சம்பள பாக்கியின் காரணமாகத்தான் முன்பு கலகம் ஏற்பட்டது. கலகம் அடக்கப்பட்டாலும், அதிருப்தி நீடித்தது.இது நல்லதல்லவே… என தீவிரமாக யோசித்த ஹைதர் அலி, தனது முயற்சியாலும், சொந்த பணத்தாலும் படையினரின் சம்பள பாக்கியை நிவர்த்தி செய்தார்.இதனால் மைசூர் படை வீரர்கள் ஹைதர் அலியைக் கொண்டாடினர். மன்னர் சிக்க கிருஷ்ணராஜரும் மகிழ்ச்சியடைந்தார்.

புனித நூலான குரானை, 12 மணிநேரத்தில் பார்க்காமல் ஓதி மகாராஷ்டிரா மாணவர் சாதனை

போபால் : இஸ்லாமியர்களின் புனித நூலான குரானை, 12 மணிநேரத்தில் பார்க்காமல் ஓதி மகாராஷ்டிரா மாணவர் சாதனை படைத்துள்ளார். தரூல் உலூம் தஜூல் மஸ்ஜித்தை சேர்ந்த மாணவன் ஹபீஜ் முகம்மது ஜபியுல்லா, புனித நூலான குரானை 8 மாதத்தில் முழுதாக மனப்பாடம் செய்தார். இன்று அவர் பீர் சயீத் ஷகாப் மவுலானா நாத்வி உள்ளிட்டோர்களின் முன்னிலையில், குரானை பார்க்காமல், 12 மணிநேரத்தில் முழுவதுமாக ஓதி சாதனை படைத்துள்ளார். காலை 8 மணிக்கு துவங்கிய அவன், இரவு 8மணியளவில் முழுவதுமாக ஓதி முடித்தான். இவனுக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது

Wednesday, July 4, 2012

தபால் துறை வரலாறு


புராதன இந்தியாவில் கி.மு. 322 இல் சந்திர குப்த மௌரியர் காலத்தில் செய்திகளைப் பரிமாற சிறந்தவொரு அரசு அமைப்பு இருந்ததாக குறிப்புகள் உள்ளன. 1672 இல் மன்னர் சிக்கதேவராயர் காலத்தில் மைசூரில் சிறந்த ஒரு தபால் அமைப்பு நடைமுறையில் இருந்தது. 




கிழக்கிந்தியக் கம்பெனி தமது தேவைகளுக்காக 1988இல் மும்பை, சென்னை ஆகிய நகரங்களில் தபால் அலுவலகங்களை உருவாக்கினார்கள். பிற்பாடு 1774 இல் வங்காள கவர்னர் ஜெனரல் வார்ன்ஹேஸ்டிங் தபால் வசதியை பொது மக்களும் பயன்படுத்துமாறு விரிவுபடுத்தினார். அத்துடன் தபால் அமைப்பை நிர்வகிக்க 'போஸ்ட்மாஸ்டர் ஜெனரல்' என்று ஒரு பதிவையையும் நியமனம் செய்தார்.

1837 இல் இந்தியத் தபால் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

இந்தியாவில் முதல் தபால்தலை 1852இல் சிந்து பகுதி கமிஷனராக இருந்த பார்ட்டன் ஃபெரேரே என்பவரால் வெளியிடப்பட்டது.

'சிந்த் டாக்' எனும ்பெயரில் வெளியான இந்த தபால்தலையே ஆசியாவிலும் வெளியான முதல் தபால்தலை என்னும் சிறப்பைப் பெற்றது.

1854 அக்டோபர் ஒன்றில் இந்திய தபால் சேவை அதிகாரபூர்வமாக அமலில் வந்தது. 

இந்தியாவில் தலைமைத் தபால் அலுவலகம், சப் தபால் அலுவலகம், எக்ஸ்ட்ரா டிப்பார்ட்மெண்டல் பிராஞ்ச் தபால் அலுவலகம் என்னும் நான்கு வகையான தபால் அலுவலகங்கள் உள்ளன.

பின்கோடு (Pincode)

1972 ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்தியாவில் பின்கோடு அமைப்பு உருவாக்கப்பட்டது. பின்கோடு ஆறிலக்கம் கொண்டது. இடமிருந்து வலமாக, முதல் எண் தபால் அலுவலகத்தின் புவியியல் இருப்பிடத்தைக் குறிக்கும். அதற்கடுத்து இரு இலக்கங்கள் துணை மண்டலத்தையும், கடைசி மூன்று இலக்கங்கள் தபால் பிரிப்பு அலுவலகத்தையும் குறிக்கின்றன.

பாராளுமன்ற மேல்சபையில் நடந்த கேள்வி நேரத்தின்போது மத்திய மனிதவளத்துறை மற்றும் தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் கபில் சிபல் கூறியதாவது:

இந்தியா 154,688 தபால் அலுவலகங்களை கொண்டு உலகின் மிகப்பெரிய தபால் துறையாக உள்ளது. இதில் 25,154 தபால் அலுவலகங்கள் மிதமுள்ளவைகள் கிராம சேவாவின் கீழ் செயல்படுகிறது.

24969 தபால் அலுவலகங்கள் கணினிமயமாக்கப்பட்டுள்ளன. இதில் 19,890 அலுவலகங்கள் நெட்வொர்க் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. இதேபோல் கிராம சேவாவின் கீழ் உள்ள அலுவலகங்கள் விரைவில் கணினிமயமாக்கப்படும். இதுபோன்ற தபால் துறை நவீனமயமாக்கும் திட்டத்திற்காக ரூ. 1,877.2 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

தபால் துறை அலுவலகங்களில் ஏ.டி.எம். நிறுவனங்கள் அமைப்பதும் இந்த திட்டத்தின் கீழ் வருகிறது. விரைவில் 1000 ஏ.டி.எம். மையங்கள் அமைக்கப்படும். மேலும்தபால் அலுவலகத்தை வங்கிகளாக மாற்ற ஆகும் செலவு ஒரு வங்கியை தொடங்க ஆகும் செலவில் ஒரு பங்குதான் ஆகும். இதன்மூலம் தபால் துறைகள் வங்கிகளாக செயல்படும். இதற்கு ரிசர்வ் வங்கியின் உதவி கோரப்பட்டுள்ளது என கூறினார்

தற்காலத்தில் தபால்துறை மிகவும் பின்தங்கியுள்ளது. காரணம் தொழில்நுட்பம் மற்றும் பெருகிவரும் தொலைத்தொடர்பு சாதனங்கள். இதை தவிர்க்கும்பொருட்டு தபால்துறையுடன் பல திட்டங்களை தொடங்கி அதை செயல்படுத்தியும் வருகிறது அரசு. தபால்கள் அல்லாத இன்ஸ்யூரன்ஸ், தங்கம் விற்பது, சேமிப்புத் திட்டங்கள் போன்ற பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி செயல்படுத்தியும் வருகிறது தபால்துறை. தபால் துறையில் அழிவிலிருந்து காக்க இத்தகைய திட்டங்கள் அதற்கு உதவும் என்று நம்பப்படுகிறது.

Sunday, July 1, 2012

புனித ஜார்ஜ் கோட்டை

தனது 370 ஆண்டுகால நினைவுகளை சுமந்துகொண்டு இன்றும் கம்பீரமாக நின்றுகொண்டிருக்கிறது புனித ஜார்ஜ் கோட்டை. சென்னையின் முக்கிய அடையாளமாகத்திகழ்பவற்றில் முதன்மையானது புனித ஜார்ஜ் கோட்டை (Fort St. George). இந்த கோட்டைதான் இன்றைய சென்னைமாநகரம் உருவாகவே காரணமாகஇருந்தது. ஆம், இந்தியாவில் பிரிட்டீஷார்கட்டிய முதலாவது கோட்டை இதுதான்.1600ஆம் ஆண்டில் வணிக நோக்குடன் இந்தியாவுக்குள் நுழைந்த கிழக்கிந்தியக் கம்பெனி சூரத்தில் அனுமதி பெற்று தனது வணிக நடவடிக்கைகளைத் தொடங்கியது. வங்கக் கடலில் தனது வணிகக் கப்பல்களையும், வாசனைப் பொருள் வணிகத்தில் தங்களுடைய நலன்களையும் பாதுகாத்துக் கொள்வதற்காக,மலேசியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கு அருகில் ஒரு துறைமுகம் இருந்தால் நன்றாக இருக்கும் என கிழக்கிந்தியக் கம்பெனியினர் கருதினர்.

அதற்காக நிலம் தேடும் பணி கிழக்கிந்திய கம்பெனியின் ஏஜெண்ட்பிரான்சிஸ் டே என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர் கிழக்குக் கடற்கரை ஓரத்தில் விஜயநகர அரசின் நிர்வாகிகளிடமிருந்து, ஒரு பொட்டல்வெளியைவிலைக்கு வாங்கினார். அங்கு போர்ட் ஹவுஸ் என்ற சிறிய கட்டிடத்தைகட்டினார். இதனைத் தொடர்ந்து ஒரு துறைமுகமும், கோட்டையும்கட்டப்பட்டன. இந்த கோட்டை 1640ஆம் ஆண்டு, ஏப்ரல் 23ந் தேதி கட்டிமுடிக்கப்பட்டது. அது புனித ஜார்ஜ் நினைவு தினம் என்பதால் அந்தகோட்டைக்கு புனித ஜார்ஜ் கோட்டை எனப் பெயரிட்டனர். அந்த கோட்டைதான் ஆங்கிலேயர்கள் இந்தியாவை அடிமைப்படுத்த அடித்தளம் அமைத்துக் கொடுத்தது.

1678இல் புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் மிகத்தொன்மையான புனிதமேரி ஆலயம் கட்டப்பட்டது. அந்தப் பேராலயத்தில்தான் இந்தியாவில்பிரிட்டீஷ் ஆட்சிக்கு வித்திட்ட இராபர்ட் கிளைவின் திருமணம் 1753இல்நடைபெற்றது. 1670களில் எலிகு யேல் என்னும் ஆங்கிலேயர் மெட்ராஸ் கவர்னராக இருந்தார். அவர் கோல்கொன்டா சுல்தானிடமிருந்து, திருவல்லிக்கேணி, தண்டையார்பேட்டை,எழும்பூர் போன்ற கிராமங்களைவிலைக்கு வாங்கி பிரிட்டிஷ் பகுதியின் எல்லையை விரிவுபடுத்தினார்.



பின்னர் பணியிலிருந்து ஓய்வு பெற்று அமெரிக்கா சென்ற அவர், அங்கு ஒரு பள்ளிக்கு தனது சொத்தில் ஒரு பகுதியை தானமாக அளித்தார். அதுதான் வளர்ந்து இன்று புகழ்பெற்ற யேல் பல்கலைக்கழகமாகத் திகழ்கிறது. அந்த பிரபல யேலின் திருமணமும் இந்த தேவாலயத்தில்தான் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
ஆங்கிலேயர்கள் செயிண்ட் ஜார்ஜ் கோட்டையை மிகவும் முக்கியமானதாக கருதியதால், இதனைப் பாதுகாக்க சுற்றிலும் சுமார் 6 மீட்டர் உயரத்திற்கு சுற்றுச்சுவர் எழுப்பினர். 1695ஆம் ஆண்டு பிரான்சிஸ் டே கட்டிய போர்ட்ஹவுஸ் கட்டிடம் இடிக்கப்பட்டு, தற்போது தலைமைச் செயலகம்அமைந்திருக்கும் வளாகத்தின் நடுவே அடுக்குமாடிக் கட்டிடம் கட்டப்பட்டு,அதில் ஆங்கிலேய ஆளுநர் இல்லமும், அலுவலகமும் அமைக்கப்பட்டது.அங்கு ஆங்கிலேய வணிகர்கள் வீடுகளை கட்டிக் கொண்டு குடியேறினர்.செயிண்ட் ஜார்ஜ் கோட்டைக்குள் வெள்ளையர் நகரம் என்றும், வெளிப்புறப் பகுதியில் ஆந்திராவில் இருந்து வந்த ஏராளமான கலைஞர்களும்,நெசவாளர்களும் வாழ்ந்த பகுதி கருப்பர் நகரம் என்றும் இரு நகரங்கள்உருவாகின. கருப்பர் நகரம்தான் பின்னர் ஜார்ஜ் டவுன் ஆனது.

1700 முதல் 1774 வரை புனித ஜார்ஜ் கோட்டைதான்
ஆங்கிலேயர்களுக்குதலைமையிடமாகத் திகழ்ந்தது. அதன்பிறகுதான் கல்கத்தா தலைமையிடமாகமாறியது. ஆங்கில பேரரசை தொடங்கி வைத்த ராபர்ட் கிளைவுடன்பிரெஞ்சுக்காரர்கள் முதன் முதலில் போரிட்டு 1746இல் புனித ஜார்ஜ்கோட்டையைக் கைப்பற்றினர். கோட்டை பலவீனமாக இருந்ததால் எளிதில் பிரெஞ்சு படைகளிடம் வீழ்ந்துவிட்டது. அப்போது சிறைபிடிக்கப்பட்ட ராபர்ட் கிளைவ் சாதுர்யமாகத் தப்பி கடலூரில் உள்ள டேவிட் கோட்டைக்கு சென்றுவிட்டார். இது அக்காலத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.

1749இல் பிரெஞ்சுகாரர்களிடம் இருந்து ஜார்ஜ் கோட்டையை ஆங்கிலேயர்கள்மீண்டும் கைப்பற்றினர். இதனையடுத்து ராபர்ட் கிளைவ் மீண்டும் சென்னைதிரும்பி கோட்டை பொறுப்பாளர் ஆனார். உடனடியாக கோட்டையை பலப்படுத்தும் பணி தொடங்கியது. கோட்டையைச் சுற்றி அகழி ஏற்படுத்தி,பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. வடக்கே ஓடிக் கொண்டிருந்த எழும்பூர்ஆற்றின் பாதையை மாற்றி அதனை ஒரு அகழியாக்க முயற்சிமேற்கொண்டனர்.

1758-59இல் பிரெஞ்சுக்காரரான லாலி என்பவரால் கோட்டை மீண்டும்முற்றுகையிடப்பட்டது. இதனையடுத்து, 1783 வரை கோட்டையைபுனரமைத்து, பலப்படுத்தும் பணி தொடர்ந்தது. கருப்பர் நகரப் பகுதிமுழுவதும் தரைமட்டமாக்கப்பட்டு, பீரங்கிகள் நிறுத்தும் இடமாகமாற்றப்பட்டது. அதன் பின்னர் விரிவுபடுத்தப்பட்ட கோட்டையின் வடிவத்தில்பெரும் மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை. 107.50 ஏக்கர் பரப்பளவுகொண்ட புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் வெல்லஸ்லி இல்லம், கிளைவ்இல்லம், டவுன் ஹால், ஆங்கிலேயப் படைகள் தங்கிய பாரக்ஸ் கட்டிடம்ஆகியவை தற்போதும் உள்ளன.

இந்தக் கோட்டைதான் தமிழக சட்டசபையாக இத்தனை ஆண்டுகள்ஓய்வின்றி (திமுக அரசு இதற்கு சற்று ஓய்வு கொடுக்க முயற்சித்தது)பணியாற்றி வருகிறது. தமிழகத்தின் முதல் சட்டசபை 1921ஆம் ஆண்டுஉருவாக்கப்பட்டது. அதற்கு மெட்ராஸ் லெஜிஸ்லேட்டிவ் கவுன்சில் என்றுபெயர். இந்த சட்டமன்றம் முதல்முறையாக புனித ஜார்ஜ் கோட்டையில்,1921ஆம் ஆண்டு ஜனவரி 9ந் தேதி கூடியது. கன்னாட் கோமகன் இதைதொடங்கி வைத்தார்.

முதல் உலகப் போரிலும் புனித ஜார்ஜ் கோட்டைக்கு பங்கு இருக்கிறது. 1914ஆம் ஆண்டு, செப்டம்பர் 22ந் தேதி இரவு 9.30 மணியளவில் ஜெர்மானிய கடற்படையைச் சேர்ந்த 'எம்டன்' கம்பல் மெட்ராஸ் நகரம் மீது பீரங்கிக் குண்டுகளை வீசியது. எம்டனிலிருந்து கிளம்பிய குண்டுகள் சென்னைத் துறைமுகத்திற்கு வெளியே நின்றிருந்த பிரிட்டிஷ் கப்பல்,ஆங்கிலேயருக்குச் சொந்தமான 'பர்மா ஷெல் ஆயில் டாங்குகள்', சென்னை உயர்நீதிமன்றம், செயின்ட் ஜார்ஜ் கோட்டை போன்றவற்றில் வீழ்ந்து வெடித்தன.

கோட்டையைப் போன்றே அதில் கம்பீரமாக வானுயரக் காட்சியளிக்கும் கொடி மரமும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது. புனித ஜார்ஜ் கோட்டையின் முகப்பில் தேக்கு மரத்தினாலான கொடிக் கம்பத்தில் கிழக்கிந்திய கம்பெனி கொடி பறந்து கொண்டிருந்தது. அதில் கவர்னர் யேல்காலத்தில் பிரிட்டிஷ் அரசின் கொடி பறக்கவிடப்பட்டது. கடற்கரையில்தரைதட்டி உடைந்த லாயல் அட்வெஞ்சர் என்ற கப்பலில் இருந்த தேக்கு மரத்தாலான கம்பம் எடுக்கப்பட்டு கோட்டை கொத்தளத்தில் நிறுவப்பட்டது.150 அடி உயரம் கொண்ட இந்தக் கொடிக் கம்பம்தான், இந்தியாவிலேயேஉயரமானதாகும். இந்திய சுதந்திரத்தின் போது, இதில் மூவர்ணக்கொடிஏற்றப்பட்டது. தேக்கு மரத்திலான இந்தக் கொடிக் கம்பம் பழுதடைந்ததால்,1994ஆம் ஆண்டு இரும்பு கம்பம் நிறுவப்பட்டது.

கடற்கரையோரம் பெரிய மதிற்சுவர் போலத் தோன்றும் இந்தக்கோட்டைக்குள் ஆயிரம் அதிசயங்கள் புதைந்து கிடக்கின்றன. தமிழக சட்டமன்றம், தலைமைச் செயலகம், ராணுவம் மற்றும் தொல்லியல் துறைஅலுவலகங்கள் இங்கு இயங்கி வருகின்றன. இங்கு ஓர் அருங்காட்சியகமும்இருக்கிறது. ஐரோப்பிய பாணியிலான பழம்பெரும் ஓவியங்கள் இங்குள்ளன.

இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்ததும் ஆங்கிலேயர்கள் கப்பலேறிப்போய்விட்டார்கள். ஆனால் வங்கக் கடலை வெறித்தபடி தனது 370 ஆண்டுகால நினைவுகளை சுமந்துகொண்டு இன்றும் கம்பீரமாக நின்றுகொண்டிருக்கிறது புனித ஜார்ஜ் கோட்டை.

நன்றி: தினத்தந்தி

சீனாவின் சோகம் மஞ்சள் ஆறு


மஞ்சள் ஆறு (சீன மொழி:  ஹுவாங் ஹ) சீனாவின் 2-வது நீளமானதும் உலகின் 6-வது நீளமானதும் ஆகும். மேற்கு சீனாவின் சிங்ஹாய் (Qinghai) மாகாணத்திலுள்ள பாயன் ஹர் மலைத்தொடரில் தோன்றி 9மாகாணங்கள் வழியாக 5,464 கிமீ (3,398 மைல்) தொலைவு ஓடி பொகாய் கடலில் கலக்கிறது. மஞ்சள் ஆற்றுப் படுகை கிழமேற்காக 1900 கிமீ (1,180 மைல்) மற்றும் வடக்கு தெற்காக 1100 கிமீ (684 மைல்) வரை பரவியுள்ளது. இதன் படுகையின் மொத்தப்பரப்பு 742,443 சதுரகிமீ (290,520 சதுர மைல்).

மஞ்சள் ஆறு சீன நாகரிகத்தின் தொட்டில் என அழைக்கப்படுகிறது. இங்கேயே வட சீன நாகரிகம் தோன்றியது. இவ்வாற்றுப்பகுதி பழங்காலத்தில் மற்ற பகுதிகளை விட மிகவும் செழிப்பாக வளம் மிகுந்து இருந்தது. ஆனால் அடிக்கடி இவ்வாற்றில் ஏற்படும் வெள்ளப்பெருக்கின் காரணமாக சீனாவின் துயரம்என்ற பெயர் இதற்கு ஏற்பட்டது

பழங்கால சீன இலக்கியங்களில் மஞ்சள் ஆறானது ஹெ (He (河)) என்று குறிக்கப்படுகிறது. அதற்கு தற்போதையசீன மொழியில் ஆறு என்று பொருள். (பழங்காலத்தில் ஆறு என்பதை குறிக்க  மற்றும்  என்ற வடிவத்தை பயன்படுத்தினர்). மஞ்சள் ஆறு என்ற பதம் முதலில் மேற்கு ஹான் வம்சத்தில் (206 BC–AD 9)) உருவான ஹானின் புத்தகம் என்பதில் குறிக்கப்பட்டுள்ளது. மஞ்சள் ஆறு சில முறை சேற்று நீரோட்டம் என கவித்துவமாக குறிப்பிடப்படுவதுண்டு. 'மஞ்சள் ஆறு தெளிவாக ஒடும் போது' என்று சீனத்தில் சொலவடை நடக்க இயலாத செயல்கள் குறித்து சொல்லப்படுவதுண்டு.
பெயர் காரணம்

இவ்வாற்று நீர் மஞ்சளாக இருப்பதால் இதற்கு இப்பெயர் ஏற்பட்டது. மஞ்சள் ஆற்றின் மேல் மற்றும் நடு பகுதியானது காற்றடு வண்டல் மேட்டு நிலப்பகுதியை கடந்து வருகிறது. இந்த காற்றடு வண்டலே மஞ்சள் நிறத்திற்கு காரணமாகும்.

மஞ்சள் ஆற்று பண்பாடு

சீன நாகரிகம் மஞ்சள் ஆற்றும் படுகையிலேயே தோன்றியதாக நம்பப்படுகிறது. இது 'தாய் ஆறு' எனவும் 'சீன நாகரிகத்தின் தொட்டில்' எனவும் சீனர்களால் குறிப்பிடப்படுகிறது. நெடிய சீன வரலாற்றில் மஞ்சள் ஆறு சீனாவின் வரம் மற்றும் சாபம் என முரண்பாடாக கருதப்பட்டுள்ளது. எனவே இதற்கு சீனாவின் பெருமை மற்றும் சீனாவின் துயரம் என முரண்பாடான பட்டப்பெயர்கள் உண்டு.

மஞ்சள் ஆறு ஏற்படுத்திய சேதம்

ஆற்றின் நிறம் மஞ்சளாக இருக்க காரணம் இது நன்கு தூளான சுண்ணாம்பு வண்டலை காற்றடு வண்டல் மேட்டு நிலத்தில் இருந்து தன் ஓட்டத்தில் கொணர்வதே ஆகும். நூற்றாண்டுகளாக படியும் வண்டல் மற்றும் கரையினால் ஆற்றில் வெள்ளம் ஏற்படுகிறது. உலகின் மோசமான வெள்ளப்பெருக்குகளை ஏற்படுத்தியது மஞ்சள் ஆறாகும். 1887 மற்றும் 1931ம் ஆண்டுகளில் ஏற்பட்ட வெள்ளத்தில் ஆறு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இறந்தனர்.

      
     
1938ம் ஆண்டு ஜூன் 9ம் தேதி இரண்டாம் சீன ஜப்பானிய போரின் போது சியங் கை செக் (Chiang Kai-Shek)தலைமையிலான சீன தேசிய துருப்புகள் ஆற்றின் கரைகளை உடைத்து பெரிய வெள்ளத்தை உருவாக்கினர்.வெள்ளம் உருவாக்கியதின் நோக்கம் ஜப்பானிய துருப்புகளின் முன்னேற்றத்தை தடுப்பதாகும். இந்த வெள்ளத்தில் 54,000 சதர கிமீ பரப்பு மூழ்கியது மேலும் 500,000–900,000 வரையான உயிர்கள் பலியான .ஜப்பானிய தரப்பில் பலியான துருப்புகளின் விபரம் தெரியவில்லை. இந்த வெள்ளம் ஜப்பானி துருப்புகள் ஜின்ஜோகு (Zhengzhou) நகரத்தை கைப்பற்றுவதை தடுத்தாலும் அவர்கள் அப்போதய சீனாவின் தலைநகரான வுஹேனை (Wuhan) கைப்பற்றுவதை தடுக்க முடியவில்லை

தனிச் சிறப்புப் பண்பு

மஞ்சள் ஆறு 1.6 மில்லியன் டன் வண்டலை ஓர் ஆண்டுக்கு காற்றடு வண்டல் மேட்டுநிலத்திலிருந்து கொணர்கிறது.
1972ல் முதலில் உலர்ந்தது பின் அடிக்கடி கீழ்பகுதி ஆறு உலர்ந்தது குறிப்பாக ஜினான் (Jinan) முதல் கடலை அடையும் பகுதி உலர்ந்தது. 1997ம் ஆண்டில் 226 நாட்களுக்கு உலர்ந்து காணப்பட்டது. குறைந்த நீர் வரத்துக்கு காரணம் அதிகமான விவசாய பயன்பாட்டுக்கு நீர் எடுக்கப்படுவதே ஆகும். 1950ம் ஆண்டில் எடுக்கப்பட்டதை விட தற்போது ஐந்து மடங்கு நீர் அதிகமாக எடுக்கப்படுகிறது. 1999ம் ஆண்டு கணக்கின் படி இதன் நீரை ஆதாரமாக கொண்டு 140மில்லியன் மக்களும் 74,000 சதுர கிமீ(48,572 சதுர மைல்) நிலமும் பயன்பெறுகின்றன. ஜூலை முதல் அக்டோபர் வரையிலான மழைக்காலத்தில் இதில் நீர் வரத்து அதிகமாக இருக்கும். அக்காலத்தில் ஓர் ஆண்டில் செல்லும் அளவில் 60% அளவு நீர் வரத்து இருக்கும். மார்ச் மற்றும் ஜூன் மாதங்களிலேயே விவசாயத்திற்கு அதிக அளவிலான நீர் தேவைப்படும். வெள்ளக்கட்டுப்பாடு, மின்சார உற்பத்தி மற்றும் தேவையான காலத்தில் நீரை பயன்படுத்துதல் போன்ற காரணங்களுக்காக இதன் குறுக்கில் பல அணைகள் கட்டப்பட்டுள்ளன. அதிகளவில் சேரும் வண்டலின் காரணமாக இவற்றின் ஆயுள் காலம் மட்டுப்படுத்தப்பட்டதாகும். முன்மொழியப்பட்ட தெற்கு-வடக்கு நீர் மாற்றல் திட்டப்பணியின் படி யாங்சே ஆற்றின் நீரானது பல திட்டங்கள் மூலம் மஞ்சள் ஆற்றுக்கு திருப்பிவிட திட்டமாகியுள்ளது. மேற்கில் இரண்டு ஆறுகளும் அருகில் உள்ள பகுதி, ஹான் (Han)ஆற்றின் மேல் பகுதி , பெரும் கால்வாய் என மூன்று திட்டங்கள் இதில் உள்ளன.

மஞ்சள் ஆற்றின் மிக அதிகளவிலான வண்டல் குறைவான நீர் வரத்து உள்ள காலங்களில் ஆற்றின் அடியில் படிகிறது. இதன் காரணமாக ஆற்றின் உயரம் அதிகரிக்கிறது. மிக அதிக நீர்வரத்து உள்ள காலங்களில் வெள்ளம் உருவாகி அவை ஆற்றின் கரையை உடைத்து அருகிலுள்ள நிலங்களில் பாய்கிறது. மேலும் வெள்ளம் வடிந்த பின்பும் ஆற்றின் அடி உயர்ந்து இருப்பதால் ஆறானது பழைய பாதைக்கு திரும்பாமல் வேறு பாதையை தேர்ந்தெடுத்துக்கொள்கிறது. தற்காலத்தில் கரையின் பலத்தை மேம்படுத்தி வெள்ளத்தை கட்டுப்படுத்த முயற்சிகள் செய்யப்பட்டுள்ளன.

மஞ்சள் ஆற்றின் கழிமுக பரப்பு 8,000 சதுர கி.மீ(3,090 சதுர மைல்). எனினும் 1996ம் ஆண்டு முதல் ஆண்டு தோறும் இது குறைந்து வருவதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதற்கு மண் அரிப்பே முதன்மையான காரணமாக கூறப்பட்டுள்ளது.

Tuesday, June 26, 2012

சேவல் சண்டை


நாம் சிறு வயதில் நம்ம ஊரு பக்கத்தில் சேவல் சண்டை பார்த்து இருப்போம் . நகர் புறங்களில் வசிக்கும் மக்கள் பார்த்திருக்க கொஞ்சம் வாய்ப்பு குறைவு தான் . சமிபத்தில் சேவல் சண்டேயே மையமாக வைத...்து ஆடுகளம் என்ற திரைப்படம் வெளியானது அதில் சேவல் சண்டையே பற்றிய நிறைய விசையங்கள் தத்துருபமாக படம் ஆக்க பட்டு இருந்தது . அதில் அனைவரும் சேவல் சண்டையே பற்றி அறிந்து இருப்பார்கள் . அரசு சேவல் சண்டை நடத்த கூடாது என்றாலும் கூட தமிழ் நாட்டில் ஒரு சில இடங்களில் சேவல் சண்டை மறமுகமாக நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது .

சேவல்! தமிழர்களின் வாழ்வில் இரண்டறக் கலந்த ஒன்று. நிலத்தில் பிரதான வளர்ப்புப் பறவையாக, செல்லப் பறவையாக, வீரத்தை வெளிக்காட்டும் பறவையாக தமிழர்களின் இதயத்தில் என்றென்றும் வீற்றிருக்கக் கூடிய ஒன்று.சில சேவல் எவளவு அடிவாங்கினாலும் நிர்னைத்த வட்டத்தை விட்டு வெளியேறாது . அதே இடத்தில இறந்தாலும் இருக்குமே தவிர அந்த வட்டத்தை விட்டு ஓடாது . அந்த மாதிரியான சேவலுக்கு மதிப்பு கூட

இப்படியான சிறப்புமிகு சேவலை, உருவத்தின் கண் கொண்டு இரண்டு வகையாகப் பிரிக்கின்றனர். பெருவடை, சிறுவடை(சித்துவடை) எனப் பகுத்தறிந்து அடையாளம் கொள்கின்றனர் கொங்கு நாட்டுப் பகுதியில். இது தவிர, காட்டுப் பகுதியில் தான்தோன்றித் தனமாகக் காட்டுப் பகுதியில் திரிவனவற்றைக் காட்டுக் கோழி என்றும் அழைக்கின்றனர்.

சேவற்சண்டையில் குறைந்தது ஐந்து அல்லது ஆறு முறை வென்ற சேவலுக்கு, அதிக முன்னுரிமை கொடுத்து வளர்க்கின்றனர், இச்சேவலைச் சுகாதாரமான கோழியுடன் புணர வைத்து, அவை இரண்டுக்குமான குஞ்சுகளைக் கண்ணுங் கருத்துமாக வளர்த்து அடுத்த தலைமுறையை உருவாக்குகிறார்கள்.

குஞ்சு பொறித்த பின், முதல் மூன்று மாதங்களுக்கு தாய்க் கோழியின் அரவணைப்பில் வளர்கிறது குஞ்சுகள். பின், தாயாலேயே அவை பிரித்து விடப் படுகின்றன. பெருவடைக் கோழிகள் பொதுவாக, பதினைந்து முட்டைகள் இட்டு பதின்மூன்று குஞ்சுகள் வரை பொறித்தெடுக்கும். சித்துவடைக் கோழிகள், இருபத்து ஐந்து முட்டைகள் வரை இட்டு, அனைத்தையும் பொறித்தெடுக்கும்

வல்லமை பெற்றவை.பிறந்தது முதல் மூன்று மாதங்கள் வரை தாயுடன் இருந்த சேவற் குஞ்சுகள், தனியாக வளரத் துவங்கி, ஆறு அல்லது ஏழு மாதங்கள் ஆனதும் கூவ ஆரம்பிக்கும். கூடவே, உடன் பிறந்த சக சேவல்களுடன் சண்டை இடவும் பழகிக் கொள்ளும். இதன் பொருட்டு, இவற்றைத் தனித் தனிக் கூடுகளில் அடைக்க முற்படுவர்.

ஏழு முதல் பனிரெண்டு மாதங்கள் வரைக்குமான காலம், சேவல்களின் வாலிபப் பருவம் ஆகும். இந்த வாலிபப் பருவத்தில், இவைகளின் வளர்ச்சி என்பது அதிவேகமாக உருவெடுக்கும். சேவல் விற்பன்னர்கள், இப்பருவத்தினைக் கூர்ந்து கவனித்து, சேவலின் வலிமையை எடை போட்டு, பயிற்சிக்கு உகந்ததா எனக் கணிப்பர்.பயிற்சிக்கு உகந்தது எனக் கருதப்பட்ட சேவல்கள், முகைச்சல் எனும் சண்டைக்கு அழைக்கும் பயிற்சிக்கு விடப்படும். பனிரெண்டு முதல் பதினைந்து மாதங்கள் வரை, முகைச்சல், நீச்சல், உயரந்தாண்டுதல், பறத்தல் முதலான பயிற்சிக்கு ஆளாகும். நீச்சல் பயிற்சி என்பது வெகுமுக்கியமானதாகக் கருதப்படுகிறது.


நீச்சல் ஒன்றின் மூலம்தான், நெஞ்சு விரியும், கால்கள் முன்பின்னாக வாங்கும் திறம் கொள்ளும், மூச்சடக்கிப் பாயும் வல்லமை பெருகும் என்கிறார் சேவல் வளர்ப்பில் கரை கண்ட சீரபாளையம் வசந்த் என்பவர்.சேவல் போட்டி நடைபெறும் இடங்களுக்கு, போட்டிக்காக நூறுக்கும் மேற்பட்ட சேவல்கள் தினசரி கொண்டு வரப்படுகிறது. சேவல்களின் வலது கால் பின் விரலில் சிறிய கூர்மையான கத்தியை கட்டி விடுகின்றனர்.எல்லோராலும் இப்படி கத்தியை கட்ட முடியாது.சிறப்பு பயிற்சி பெற்ற சிலரால் தான் இந்த கத்திகளை கட்ட முடியும். இவர்களுக்கு கட்டாலிகள் என்ற பட்டமும் உண்டு.

சண்டையில் வெற்றி பெறும் சேவலுக்கு வெற்றி என்றும், தோல்வி பெறும் சேவலுக்கு கோச்சை என்றும் பெயர். ஒரு சேவல் தனது சேவலுடன் சண்டையிட்டு வெற்றி பெற குறைந்த பட்சம் ஐந்து மணித்துளிகள் முதல் முப்பது மணித்துளிகள் வரை ஆகிறது.சேவல்கள் சோர்வு அடையும் போது எலுமிச்சை சாறு, குளுக்கோசு, கோவத்தலை போன்றவற்றை கொடுத்து வீரியம் ஊட்டுகின்றனர். சேவல் சண்டை நடத்தப்படும் இடத்தில் பெருமளவில் குருதி சிந்தி, அது யுத்த களம் போல் காட்சி தருகிறது.







கொண்டை அல்லது தலையில் இருக்கும் பூவைப் பொறுத்து, குருவிப்பூச் சேவல், மத்திப்பூச் சேவல், தவக்களைப் பூச் சேவல், கத்திப்பூச் சேவல், ஊசிப்பூச் சேவல் எனப் பல இரகம்.அதேபோலக் கால்களைப் பொறுத்தும், பல வகைகளாகச் சேவல்களை இனம் பிரிக்கின்றனர். வெள்ளைக்கால், பேய்க்கருப்பு, பொன்றம், பூதக்கால், பசுபுக்கால், காரவெள்ளை, முகைச்சக்கால், கருங்கால் எனப் பட்டியல் இடபடுகிறது

Wednesday, May 30, 2012

இலெமூரியா

19 ஆம் நூற்றாண்டு மத்தியில் செய்யப்பட்ட இலெமூரியா என்ற புவியியல் புனைக்கோள், ஆப்பிரிக்க- ஆசிய கண்டங்களின் பாலமாக, நிலப்பரப்பாக இந்து மாக்கடலில் பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் இருந்திருக்கலாம் என முன்வைக்கப் பட்டது. 20ம் நூ. முன்னேயே அது கைவிடப் பட்டது. இதனை சிலர் கண்டமாக இருந்த ஒரு பரந்த நிலப்பரப்பு எனவும் கூறுவர். இங்கிலாந்தைச் சேர்ந்த உயிரியல் வல்லுனர் பிலிப் ஸ்க்லேட்டர் இந்தியாவிற்கும் மடகாஸ்கருக்கும் இடையில் இந்தியப் பெருங்கடலில் இருந்திருக்கக் கூடும் என்று கருதப்பட்ட நிலப்பாலத்திற்கு லெமூரியா என்று பெயரிட்டார்.

அறிவியல் கூற்றுகள்

இன்று வாழும் இலெமூர் எனப்படும் புதுவின விலங்கினம் மடகாஸ்கர் மற்றும் அதனை சுற்றியுள்ள தீவுகளில் மட்டுமே காணப்படுகின்றன.பிலிப் ஸ்க்லேடெர்என்னும் ஆராய்ச்சியாளர் தனது கூற்றுகளில் இலெமூர் இன விலங்கினத்தின் தொல்லுயிர் எச்சம் மடகாஸ்கர் மற்றும் இந்தியாவின் சில பகுதிகளில் மட்டுமே உள்ளன எனவும் மேலும் இவ்வகை தொல்லுயிர் எச்சம் ஆப்பிரிக்க மற்றும் கிழக்கரபு கண்டங்களில் இல்லை எனவும் விளக்குகின்றார்.
ஸ்க்லேட்டரின் இக்கூற்றானது அவரது காலகட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை ஆனால் சார்லஸ் டார்வின் கூற்றான "ஒரு குறிப்பிடப்பட்ட விலங்கினமானது பூமியில் ஒரு முனையிலும் அதே இனமானது பூமியின் வேறு முனையினும் வாழ்ந்து வருவதன் காரணங்களினால் பண்டைக் காலங்களில் ஏற்பட்ட நிலவதிர்வுகள் மற்றும் நிலப்பிரிவுகள் போன்ற நிகழ்வுகளினால் இவ்வாறு ஒரே இனமானது பூமியின் பல்வேறு பகுதிகளில் சிதறிக்கிடக்க முடியும்" என்ற கூற்றினை ஏற்றனர்.இவ்வாறு ஏற்பட்ட கணிப்பின் படி பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் இந்தியா மற்றும் அதன் நிலப்பரப்பு பரந்து விரிந்து ஆப்பிரிக்க கண்டங்களுடன் இருந்ததும் குறிப்பிடத்தக்கது.அச்சமயம் இருக்கப்பெற்ற இலெமூரியாக் கண்டமானது பல அரிய ஆன்மீகச் சக்திகள் பல கொண்ட இனங்களின் தலைமையிடமெனச் சிலர் கூறுகின்றனர்.அஃது போலவே ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த ஏர்ண்ஸ்ட் ஹேக்கெல் (Ernst Haeckel) கூற்றுப்படி இலெமூரியாக் கண்டத்திலிருந்தே மனித இனம் தோன்றியிருக்கலாம் எனவும் மேலும் அவற்றின் தொல்லுயிர் எச்சங்கள் பல அக்கண்டம் கடற்கோளால் அழிக்கப்பட்டதனால் கிடைக்கப் பெற இயலவில்லையெனவும் கூறுவது குறிப்பிடத்தக்கது. மேலும் சில அறியலாளர்கள்(விஞ்ஞானிகள்) இத்தகு கண்டம் பசிபிக் கடல்வரை இருக்கப்பெற்றிருக்கலாம் என்னும் கூற்றையும் தெரிவுபடுத்துகின்றனர்.அதாவது அமெரிக்க ஆசியக் கண்டங்கள் சிலவற்றிலும் இலெமூர் இனங்கள் காணப்படுவதாகக் கூறுவது குறிப்பிடத்தக்கது.
புவிஓடு அசைவுகள், கண்ட ஓட்டங்கள் போன்ற புதிய அறிவியல் கருத்துக்கள் புவியியலாளர்களால் ஏற்றுக் கொள்ளப் பட்டபின், ஆசிய ஆப்பிரிக்க கண்டங்களுக்கு இடையே பாலம் போல் அமையலாம் என்ற இலெமூரிய புனைக்கோள் கைவிடப் பட்டது. புதிய கடலாய்வுகள் இந்துமாக்கடலில் செய்யப் பட்டு, அதன் விளைவாக 20 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தெற்கு இந்துமாக்கடலில் இருந்த நிலப்பாகம் நீர்க்கடியில் மூழ்கியிருக்க வேண்டும் என்று நம்பப் படுகின்றது.

பலராலும் கைவிடப்பட்ட இலெமூரியாக் கூற்றானது நிலச் சரிவுகள் மற்றும் கண்ட அசைவுகள் போன்ற பல காரணங்களைக் கூறி இக்கண்டத்தின் தோற்றமானது மறுக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

"பிலாவற்ஸ்கி"அம்மையாரின் இலெமூரியா

1880 ஆம் ஆண்டுகளின் பிலாவற்ஸ்கி அம்மையாரின் கூற்றுகளின் படி அட்லாண்டிக் கண்டம் கண்டுபிடிப்பிற்கு முந்தைய காலங்களில் ட்சையன் Book of Dzyan என்னும் புத்தகத்தினை மகாத்மாக்கள் அவருக்கு வழங்கியதெனவும் மேலும் இலெமூரியாக் கண்டத்தில் வாழ்ந்த இனமானது மூன்றாம் தலைமுறை இனமாகவும் இருக்கப்பெற்றதை விளக்குகின்றார்.ஹெர்மப்ரோடைட் (hermaphrodite) என்னும் இனத்துடன் பாலியல் வகையினைச் சார்ந்தனவையாகவும் அறிவினால் வளர்ச்சியடையாதனவையாகவும் ஆன்மீகத்தினால் மிகவும் பலம் வாய்ந்தனவாகவும் இருக்கப்பெற்றதெனவும் பிலாவற்ஸ்சி அம்மையார் விளக்குவது குறிப்பிடத்தக்கது.மேலும் இவ்வினமானது இன்றைய ஜந்தாம் தலைமுறையினருக்கான ஆன்மீக சக்திகளைவிட உயர்ந்த ஆன்மீகத்தினைக் கொண்டுள்ளனவாக இருக்கப்பெற்றதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இவரின் கூற்றுப்படி சில லெமுரியர்கள் ஆன்மீகப் பலமடைந்த பின்னர் அறிவுஜீவிகள் அல்லாத லெமுரிய இனங்கள் வாழ்ந்த இலமூரியாக் கண்டத்தினை அழித்தனவாகவும் அப்புத்தகத்தின் மூலம் மகாத்மாக்கள் தெரிவித்திருந்தன எனவும் அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இலெமூரியாவும் சாஸ்ட மலைகளும்

1894 ஆம் ஆண்டின் காலப்பகுதியில் பிரெட்ரிக் ஸ்பென்சர் ஒலிவர் வெளியிட்ட நூலான (A Dweller on Two Planets) கூறப்பட்டுள்ள படி அழிவிற்குட்பட்ட கண்டமான இலமூரியாவில் வாழ்ந்து வந்த புத்திஜீவிகள் கலிபோர்னியாவில் உள்ள சாஸ்ட மலைத்தொடர்களில் வாழ்ந்து வருகின்றனர் எனக் கூறுவது குறிப்பிடத்தக்கது.மேலும் இவர்கள் வெள்ளை நிறக் கயிறுகளான ஆடைகளை அணிந்து செல்வதைப் பார்த்துள்ளதாகத் தெரிவிக்கும் இக்கூற்றினைப் போலவே 1930 ஆம் ஆண்டுகளில் காய் வாரென் பலார்ட் உருவாக்கிய அமைப்பான ஜ ஆம் அமைப்பும் இவ்வெள்ளையின சகோதரர்களின் பாதைகளினைக் கடைபிடிப்பவர்கள் எனக் கூறப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.மேலும் பல அமைப்புகள் இவ்வமைப்பைத் தொடர்ந்து ஆரம்ப்பிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.(Bridge to Freedom, Summit Lighthouse, Church Universal and Triumphant, Temple of the Presence, and Hearts Center).

குமரிகண்டமும் இலெமூரியாவும்

குமரிக்கண்டம் என்னும் கண்டம் பண்டையக்காலத்தில் அழிவிற்குட்பட்டதாக இலக்கியகூற்றுக்களான சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை ஆகிய காப்பியங்களை அடிப்படையாய்க் கொண்டு தமிழறிஞர்கள் பலர் கருதுகின்றனர். இக்குமரிக் கண்டமே இலெமூரியாக் கண்டம் என்று கூறுவாரும் உளர்.

Monday, May 21, 2012

தஞ்சாவூர் மாவட்டத்தின் வரலாறு


தமிழகத்தின் நெற்களஞ்சியம். பிற்காலச் சோழர்களின் காலமான கி.பி. 11 மற்றும் 14 ஆம் நூற்றாண்டுகளின் புகழ்பெற்ற மாநகரமாகத் திகழ்ந்தது. கலைக்கும், இலக்கியத்துக்கும், கைவினைப் பொருட்கள் செய்வதற்கும் புகழ்பெற்ற தமிழ்த் தரணி. பெயர் வரக் காரணமாகச் சொல்லப்படும் புராணக்கதை. முற்காலத்தில் தஞ்சன் என்னும் அசுரன் இவ்விடத்தில் மக்களைத் துன்புறுத்திவந்தான்.

மக்களைக் காக்க அவனை சிவபெருமான் வதம் செய்த இடமாதலால் தஞ்சாவூர் என்ற பெயரும், சிவபெருமான் இந்த ஊரில் தஞ்சபுரீசுவரர் என்ற திருப்பெயருடன் கோயில் கொண்டுள்ளார்.

இத்திருக்கோயில் தஞ்சாவூரிலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில், பள்ளியக்கிரகாரத்திற்கு அருகில் இருக்கிறது.முற்கால, பிற்கால தமிழ் இலக்கியத்தின் மாபெரும் படைப்பாளிகளை ஈன்றெடுத்த மண். கர்நாடக இசைத் தந்தையான தியாகையர் வாழ்ந்த திருவையாறு இந்த மாவட்டத்தில்தான் இருக்கிறது. காவிரி

தவழும் கவின்மிகு பூமி. தஞ்சாவூர் 8-ஆம் நுற்றாண்டுகளில் உருவாக்கப்பட்ட ஒரு நகராகும். அப்போது இப்பகுதியினை வளமையோடு ஆண்டு வந்த தனஞ்சய முத்தரையரின் பெயரையே இந் நகரம்

பெயராகப் பெற்றது. தனஞ்சய ஊர் என்பது மருவி தஞ்சாவூர் என்று நிலைப்பெற்றது என்றும் கூறப்படுகிறது.

உலகப் புகழ் பெற்ற சரசுவதி மகால் நூலகத்தைத் தன்னகத்தே கொண்டது. இந்நூலகத்தில் காணக்கிடைக்காத மிக அரிய ஓலைச் சுவடிகள் நூற்றுக் கணக்கில் திரட்டப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றன. உலகில் தமிழுக்கென்று அமைக்கப்பட்ட முதல் பல்கலைக் கழகம் தஞ்சாவூரில் உள்ளது. மெல்லிசைக் கருவிகளான வீணை, மிருதங்கம், தபேலா, தம்புரா போன்றவை இங்கு தான் செய்யப் படுகின்றன.

பெயர் வரக் காரணமாகச் சொல்லப்படும் புராணக்கதை. முற்காலத்தில் தஞ்சன் என்னும் அசுரன் இவ்விடத்தில் மக்களைத் துன்புறுத்திவந்தான். மக்களைக் காக்க அவனை சிவபெருமான் வதம் செய்த

இடமாதலால் தஞ்சாவூர் என்ற பெயரும், சிவபெருமான் இந்த ஊரில் தஞ்சபுரீசுவரர் என்ற திருப்பெயருடன் கோயில் கொண்டுள்ளார். இத்திருக்கோயில் தஞ்சாவூரிலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில், பள்ளியக்கிரகாரத்திற்கு அருகில் இருக்கிறது. வைணவச் சம்பிரதாயத்தில் இதே புராணம் சிறிது மாற்றப்பட்டு மகாவிஷ்ணுவே தஞ்சனை அழித்தார் என்றும், அதனால் தஞ்சை மாமணி

நீலமேகப்பெருமாளாய் கோயில் கொண்டு இருக்கிறார் என்றும் நம்பப்படுகிறது. இதில் குறிப்பிடத்தக்க செய்தி, மேற்கூறிய நீலமேகப்பெருமாள் கோயில் தஞ்சபுரீசுவரரின் கோயிலுக்கு நேரெதிரில் உள்ளது.

Wednesday, May 9, 2012

உலகின் பெரிய கோயில் நம் திருச்சி " ஸ்ரீ ரங்கம் " !

கம்போடியாவில் உள்ள " அன்க்கோவர் வாட் " கோயிலை விட சிறியதே என்றாலும், இன்றைக்கு அது இயங்கவில்லை , ஆனால் 156 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஸ்ரீரங்கம் கோயிலே இயங்கிக்கொண்டிருக்கும் உலகின் பெரிய கோயில் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளது ! 6,31,000 m². (6,790,000 sq ft) (156 Acres) with a perimeter of 4 km (10,710 ft). ஏழு பிரகாரங்களை கொண்ட இந்த கோயிலில், நான்கு உட்பு...றமும், மூன்று வெளிப்புறமும் அமைந்துள்ளது 236அடி உயரம் (72 m) கொண்ட இந்த கோயிலின் ராஜகோபுரம் ஆசியாவின் பெரிய கோபுரமாக விளங்குகின்றது , இந்த கோயிலில் மொத்தம் 21 கோபுரங்கள் உள்ளன !


Srirangam is famous for its Sri Ranganathaswamy Temple, a major pilgrimage destination for Hindus (especially Vaishnavites) and one of the largest temple complexes in India. According to the temple's website, Srirangam can be considered the biggest functioning Hindu temple in the world as it covers an area of about 6,31,000 m². (156 Acres) with a perimeter of 4 km (10,710 ft).[1] Srirangam claims to be the biggest functioning temple, because Angkor Wat is the biggest but non-functioning Hindu temple in the world.

The Srirangam temple complex is composed of 7 concentric walled sections and 21 gopurams . The gopuram of the temple is called the Rajagopuram and is 236 feet (72 m) tall, the tallest in Asia. Myth has it that the coast of Sri Lanka can be seen from the top of the gopuram
See more

Tuesday, May 8, 2012

தமிழ் கண்டம்

நம் வரலாற்றை தெரிந்து கொள்ள இந்த முறை உங்களை 20,000 வருடங்களுக்கு முந்தைய கடலில் மூழ்கிய ஒரு உலகிற்கு அழைத்துக்செல்லவிருக்கிறேன்,


இங்கு தான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள், இங்கு தான் நம் மூதாதையர் வா...ழ்ந்தனர்.இங்கு தான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தமிழ் பிறந்தது.இங்கு தான் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளது,ஆம் இது தான் " நாவலன் தீவு " என்று அழைக்கப்பட்ட " குமரிக்கண்டம். கடலுக்கடியில் இன்று அமைதியாக உறங்கிக்கிகொண்டிருக்கும் இது,ஒரு காலத்தில் பிரம்மாண்டமாக இயங்கிக்கொண்டிருந்த ஒரு தமிழ் கண்டம் !!. இன்று தனித்தனி நாடுகளாக உள்ள ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்க, இலங்கை,மற்றும் இன்றுள்ள சில சிறு, சிறு தீவுகளை இணைத்தவாறு இருந்த ஒரு பிரம்மாண்டமான இடம் தான் " குமரிக்கண்டம் ".ஏழுதெங்க நாடு,ஏழுமதுரை நாடு,ஏழுமுன்பலை நாடு,ஏழுபின்பலை நாடு,ஏழுகுன்ற நாடு,ஏழுகுனக்கரை நாடு,ஏழுகுரும்பனை நாடு என இங்கு நாற்பது ஒன்பது நாடுகள் இருந்துள்ளது !! பறுளி, குமரி என்ற இரண்டு ஆறுகள் ஓடியுள்ளது !!.குமரிக்கொடு,மணிமலை என இரண்டு மலைகள் இருந்துள்ளது !!. தென்மதுரை,கபாடபுரம்,முத்தூர் என பிரம்மாண்டமான மூன்று நகரங்கள் இருந்தன.உலகின் தொன்மையான நாகரீகம் என்று அழைக்கப்படும் சுமரியன் நாகரீகம் வெறும் நான்காயிரம் வருடங்கள் முந்தையது தான். நக்கீரர் " இறையனார் அகப்பொருள் " என்ற நூலில் மூன்று தமிழ்ச் சங்கங்கள் 9990 வருடங்கள் தொடர்து நடைபெற்றதாக கூறியுள்ளார். தமிழின் முதல் சங்கம் இந்த கடலடியில் உள்ள " தென் மதுரையில் " கி.மு 4440இல் 4449புலவர்கள்களுடன் , சிவன், முருகர், அகஸ்தியருடன் 39மன்னர்களும் இணைந்து, " பரிபாடல், முதுநாரை,முடுகுருக்கு,கலரியவிரை, பேரதிகாரம் " ஆகிய நூல்களை இயற்றப்பட்டது .இதில் அனைத்துமே அழிந்து விட்டது .இரண்டாம் தமிழ்ச் சங்கம் " கபாடபுரம் " நகரத்தில் கி.மு 3700இல் 3700புலவர்கள்களுடன் " அகத்தியம்,தொல்காப்பியம்,பூதபுராணம்,மாபுராணம் " ஆகிய நூல்களை இயற்றப்பட்டது . இதில் " தொல்காப்பியம் மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது.மூன்றாம் தமிழ்ச் சங்கம் இன்றைய " மதுரையில் " கி.மு 1850 இல் 449 புலவர்கள்களுடன் " அகநானூறு, புறநானூறு,நாலடியார், திருக்குறள் " ஆகிய நூல்கள் இயற்றப்பட்டது.இவ்வளவு பழமையான தமிழனின் வரலாற்றை பெருமையுடன் உலகிற்கு தெரியப்படுத்த வேண்டிய இந்திய அரசு . ,இனிமேல் நாம் 2000 வருடம் பழமையானவர்கள் என்ற பழங்கதையை விட்டு விட்டு 20,000 வருட உலகின் முதல் இனம் ,நம் தமிழ் இனம் என்று பெருமையுடன் கூறுவோம்.வரலாற்று தேடல் தொடரும்.....

Sunday, May 6, 2012

அறுபத்திநாலு. ஆயக்கலைகள்

ஆயக்கலைகள் அறுபத்திநாலு.
    1.அட்சரங்கள்.
    2.விகிதம்.
    3.கணிதம்.
    4.வேதம்.
    5.புராணம்.
    6.வியாகரணம்.
    7.ஜோதிடம்.
    8.தர்ம சாஸ்த்திரம்.
    9.யோக சாஸ்த்திரம்.
    10.நீதி சாஸ்த்திரம்.
    11.மந்திர சாஸ்த்திரம்.
    12.நிமித்த சாஸ்த்திரம்.
    13.சிற்ப சாஸ்த்திரம்.
    14.வைத்திய சாஸ்த்திரம்.
    15.சாமுத்ரிகா லட்சணம்.
    16.சப்தப்பிரம்மம்.
    17.காவியம்.
    18.அலங்காரம்.
    19.வாக்கு வன்மை
    20.கூத்து.
    21.நடனம்.
    22.வீணை இசை.
    23.புல்லாங்குழல் வாசிப்பு.
    24.மிருதங்க இசை.
    25.தாளம்.
    26.ஆயுதப் பயிற்சி.
    27.ரத்னப்பரீட்சை.
    28.கனகப்பரீட்சை(தங்கம் பற்றி அறிதல்)
    29.யானை ஏற்றம் மற்றும் சாதி அறிதல்.
    30. குதிரை ஏற்றம் மற்றும் சாதி அறிதல்.
    31.ரத சாஸ்த்திரம்.
    32பூமியறிதல்.
    33.போர்முறை சாஸ்த்திரம் மற்றும் தந்திரம்.
    34.மற்போர் சாஸ்த்திரம்.
    35.வசீகரித்தல்.
    36.உச்சாடனம்.
    37.பகைமூட்டுதல்.
    38.காம சாஸ்த்திரம்.
    39.மோகனம்.
    40.ஆகரஷனம்.
    41.ரசவாதம்.
    42.கந்தரவ ரகசியம்.
    43.மிருக பாஷை அறிதல்.
    44.துயரம் மாற்றுதல்.
    45.நாடி சாஸ்த்திரம்.
    46.விஷம் நீக்கும் சாஸ்த்திரம்.
    47.களவு.
    48.மறைத்துரைத்தல்.
    49.ஆகாயப் பிரவேசம்.
    50.விண் நடமாட்டம்.
    51.கூடுவிட்டு கூடுபாய்தல்.
    52.அரூபமாதல்.
    53.இந்திர ஜாலம்.
    54.மகேந்திர ஜாலம்.
    55.அக்னி ஸ்ம்பனம்.
    56.ஜலஸ்தம்பனம்.
    57. வாயு ஸ்தம்பனம்.
    58.கண்கட்டு வித்தை.
    59.வாய்கட்டு வித்தை.
    60.சுக்கில ஸ்தம்பனம்.
    61.சுன்ன ஸ்தம்பனம்.
    62.வாள்வித்தை.
    63.ஆன்மாவை கட்டுப்படுத்துதல்.
    64.இசை.
இவைதான் அந்த ஆயக்கலைகள் அறுபத்திநாலும்.


Blogger templates

Help this Blog Click the link

Like

Facebook likes