Tuesday, June 26, 2012

சேவல் சண்டை


நாம் சிறு வயதில் நம்ம ஊரு பக்கத்தில் சேவல் சண்டை பார்த்து இருப்போம் . நகர் புறங்களில் வசிக்கும் மக்கள் பார்த்திருக்க கொஞ்சம் வாய்ப்பு குறைவு தான் . சமிபத்தில் சேவல் சண்டேயே மையமாக வைத...்து ஆடுகளம் என்ற திரைப்படம் வெளியானது அதில் சேவல் சண்டையே பற்றிய நிறைய விசையங்கள் தத்துருபமாக படம் ஆக்க பட்டு இருந்தது . அதில் அனைவரும் சேவல் சண்டையே பற்றி அறிந்து இருப்பார்கள் . அரசு சேவல் சண்டை நடத்த கூடாது என்றாலும் கூட தமிழ் நாட்டில் ஒரு சில இடங்களில் சேவல் சண்டை மறமுகமாக நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது .

சேவல்! தமிழர்களின் வாழ்வில் இரண்டறக் கலந்த ஒன்று. நிலத்தில் பிரதான வளர்ப்புப் பறவையாக, செல்லப் பறவையாக, வீரத்தை வெளிக்காட்டும் பறவையாக தமிழர்களின் இதயத்தில் என்றென்றும் வீற்றிருக்கக் கூடிய ஒன்று.சில சேவல் எவளவு அடிவாங்கினாலும் நிர்னைத்த வட்டத்தை விட்டு வெளியேறாது . அதே இடத்தில இறந்தாலும் இருக்குமே தவிர அந்த வட்டத்தை விட்டு ஓடாது . அந்த மாதிரியான சேவலுக்கு மதிப்பு கூட

இப்படியான சிறப்புமிகு சேவலை, உருவத்தின் கண் கொண்டு இரண்டு வகையாகப் பிரிக்கின்றனர். பெருவடை, சிறுவடை(சித்துவடை) எனப் பகுத்தறிந்து அடையாளம் கொள்கின்றனர் கொங்கு நாட்டுப் பகுதியில். இது தவிர, காட்டுப் பகுதியில் தான்தோன்றித் தனமாகக் காட்டுப் பகுதியில் திரிவனவற்றைக் காட்டுக் கோழி என்றும் அழைக்கின்றனர்.

சேவற்சண்டையில் குறைந்தது ஐந்து அல்லது ஆறு முறை வென்ற சேவலுக்கு, அதிக முன்னுரிமை கொடுத்து வளர்க்கின்றனர், இச்சேவலைச் சுகாதாரமான கோழியுடன் புணர வைத்து, அவை இரண்டுக்குமான குஞ்சுகளைக் கண்ணுங் கருத்துமாக வளர்த்து அடுத்த தலைமுறையை உருவாக்குகிறார்கள்.

குஞ்சு பொறித்த பின், முதல் மூன்று மாதங்களுக்கு தாய்க் கோழியின் அரவணைப்பில் வளர்கிறது குஞ்சுகள். பின், தாயாலேயே அவை பிரித்து விடப் படுகின்றன. பெருவடைக் கோழிகள் பொதுவாக, பதினைந்து முட்டைகள் இட்டு பதின்மூன்று குஞ்சுகள் வரை பொறித்தெடுக்கும். சித்துவடைக் கோழிகள், இருபத்து ஐந்து முட்டைகள் வரை இட்டு, அனைத்தையும் பொறித்தெடுக்கும்

வல்லமை பெற்றவை.பிறந்தது முதல் மூன்று மாதங்கள் வரை தாயுடன் இருந்த சேவற் குஞ்சுகள், தனியாக வளரத் துவங்கி, ஆறு அல்லது ஏழு மாதங்கள் ஆனதும் கூவ ஆரம்பிக்கும். கூடவே, உடன் பிறந்த சக சேவல்களுடன் சண்டை இடவும் பழகிக் கொள்ளும். இதன் பொருட்டு, இவற்றைத் தனித் தனிக் கூடுகளில் அடைக்க முற்படுவர்.

ஏழு முதல் பனிரெண்டு மாதங்கள் வரைக்குமான காலம், சேவல்களின் வாலிபப் பருவம் ஆகும். இந்த வாலிபப் பருவத்தில், இவைகளின் வளர்ச்சி என்பது அதிவேகமாக உருவெடுக்கும். சேவல் விற்பன்னர்கள், இப்பருவத்தினைக் கூர்ந்து கவனித்து, சேவலின் வலிமையை எடை போட்டு, பயிற்சிக்கு உகந்ததா எனக் கணிப்பர்.பயிற்சிக்கு உகந்தது எனக் கருதப்பட்ட சேவல்கள், முகைச்சல் எனும் சண்டைக்கு அழைக்கும் பயிற்சிக்கு விடப்படும். பனிரெண்டு முதல் பதினைந்து மாதங்கள் வரை, முகைச்சல், நீச்சல், உயரந்தாண்டுதல், பறத்தல் முதலான பயிற்சிக்கு ஆளாகும். நீச்சல் பயிற்சி என்பது வெகுமுக்கியமானதாகக் கருதப்படுகிறது.


நீச்சல் ஒன்றின் மூலம்தான், நெஞ்சு விரியும், கால்கள் முன்பின்னாக வாங்கும் திறம் கொள்ளும், மூச்சடக்கிப் பாயும் வல்லமை பெருகும் என்கிறார் சேவல் வளர்ப்பில் கரை கண்ட சீரபாளையம் வசந்த் என்பவர்.சேவல் போட்டி நடைபெறும் இடங்களுக்கு, போட்டிக்காக நூறுக்கும் மேற்பட்ட சேவல்கள் தினசரி கொண்டு வரப்படுகிறது. சேவல்களின் வலது கால் பின் விரலில் சிறிய கூர்மையான கத்தியை கட்டி விடுகின்றனர்.எல்லோராலும் இப்படி கத்தியை கட்ட முடியாது.சிறப்பு பயிற்சி பெற்ற சிலரால் தான் இந்த கத்திகளை கட்ட முடியும். இவர்களுக்கு கட்டாலிகள் என்ற பட்டமும் உண்டு.

சண்டையில் வெற்றி பெறும் சேவலுக்கு வெற்றி என்றும், தோல்வி பெறும் சேவலுக்கு கோச்சை என்றும் பெயர். ஒரு சேவல் தனது சேவலுடன் சண்டையிட்டு வெற்றி பெற குறைந்த பட்சம் ஐந்து மணித்துளிகள் முதல் முப்பது மணித்துளிகள் வரை ஆகிறது.சேவல்கள் சோர்வு அடையும் போது எலுமிச்சை சாறு, குளுக்கோசு, கோவத்தலை போன்றவற்றை கொடுத்து வீரியம் ஊட்டுகின்றனர். சேவல் சண்டை நடத்தப்படும் இடத்தில் பெருமளவில் குருதி சிந்தி, அது யுத்த களம் போல் காட்சி தருகிறது.







கொண்டை அல்லது தலையில் இருக்கும் பூவைப் பொறுத்து, குருவிப்பூச் சேவல், மத்திப்பூச் சேவல், தவக்களைப் பூச் சேவல், கத்திப்பூச் சேவல், ஊசிப்பூச் சேவல் எனப் பல இரகம்.அதேபோலக் கால்களைப் பொறுத்தும், பல வகைகளாகச் சேவல்களை இனம் பிரிக்கின்றனர். வெள்ளைக்கால், பேய்க்கருப்பு, பொன்றம், பூதக்கால், பசுபுக்கால், காரவெள்ளை, முகைச்சக்கால், கருங்கால் எனப் பட்டியல் இடபடுகிறது

ஆப்ரிகாட் பழங்கள்

அதிசய சத்து நிறைந்த ஆப்ரிகாட் பழங்கள் !!!

பொன்னிறமான மேல்தோலையும், ஒருவிதமான புளிப்பு சுவையும் உடைய ஆப்ரிகாட் பழங்கள் எண்ணற்ற சத்துக்களை கொண்டுள்ளன. இது புருனஸ் ஆர்மெனியேகா என்ற தாவரவியல் பெயர் கொண்ட ரோசேசியே குடும்பத்தைச் சார்ந்த இந்த சிற...ிய மரங்களின்
நன்கு பழுத்த ஆரஞ்சு நிற பழங்களே மருத்துவத்தில் பயன்படுகின்றன. பித்தப்பையில் உள்ள கற்களைப் போக்குவதிலும், குடல் புழுக்களை அழிப்பதிலும் ஆப்ரிகாட் பழங்களின் பணி மகத்தானது.

தோல்நோய்களை நீக்கும்

இதில் அடங்கியுள்ள ஏராளமான தாதுப்பொருட்கள் ஆஸ்துமா, மார்புச்சளி, காசநோய் மற்றும் இரத்த சோகையைக் குணப்படுத்த வல்லவை. இதில் அடங்கியுள்ள நார்ச்சத்தானது மலச்சிக்கலை நீக்குகிறது. இதில் உள்ள விட்டமின் ஏ முகப்பருவினை நீக்குவதிலும், தோல் தொடர்பான தொற்றுநோய்களைக் கட்டுப்படுத்துவதிலும் பெரும் பங்கு வகிக்கின்றன. வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டுகிறது.

நரம்புகளை வலுப்படுத்தும்

பழங்களிலுள்ள வானிலிக் அமிலங்கள் மற்றும் ரூப்பின் என்ற நறுமண எண்ணெய் கை, கால் வலியை நீக்குகிறது. இதில் இரும்புச்சத்து மற்றும் பீட்டா கரோட்டின்கள் அதிகம் உள்ளதால் ரத்த உற்பத்திக்கு ஏற்றது. இதில் உள்ள கரோட்டினாய்டுகள்
எல்.டி.எல். என்னும் கெட்ட கொழுப்பை நீக்கி, இதய நோயை தடுக்கின்றது. பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை சீர்செய்கிறது. லைகோபின் என்னும் சத்தானது செல் முதிர்வை தடுக்கிறது. இதிலுள்ள டிரிப்டோபேன்கள் நரம்புகளை வலுப்படுத்துகின்றது.

நோய் எதிர்ப்பு சக்தி

மிகவும் சத்து நிறைந்த ஆப்ரிகாட் பழம் குழந்தைகளுக்கு ஏற்றது. இருதய நோய், சிலவகை புற்றுநோயை கூட எதிர்த்து போராடும் சத்துக்கள் அடங்கிய பழம் இது. ஆப்ரிகாட்டை நன்கு கழுவி இட்லி தட்டில் வேக வைத்து எடுக்கவோ அல்லது நறுக்கி தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து மசிக்கவோ செய்யலாம். பின்னர் பாலில் ஓட்ஸ், சர்க்கரை கலந்து 5 நிமிடம் கொதிக்க விடவும். கொதித்து கெட்டியானதும் தீயை அணைத்து ஆறவிடவும். ஆறியதும் ஆப்ரிகாட் மசித்ததையும் ஓட்ஸையும் கலந்து குழந்தைக்கு ஊட்டவும். குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

கண்பார்வை தெளிவாகும்

வைட்டமின் ஏ பார்வை திறனை அதிகப் படுத்துகிறது. தினமும் 1 அல்லது 2 ஆப்ரிகாட் என்ற துருக்கி ஆரஞ்சுப் பழங்களை இரவில் சாப்பிட்டு வர பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் உடலில் சேருவதுடன் செல் அழிவும் கட்டுப்படுத்தப்படும். மலைவாழைப்பழம்-1, ஆப்ரிகாட்-4 ஆகியவற்றை சிறு சிறு துண்டுகளாக வெட்டி, தயிர்-அரை கோப்பை கலந்து ஒரு மணி நேரம் ஊறவைத்து, இரவில் படுக்கும்பொழுது சாப்பிட்டுவர பார்வைதிறன் அதிகரிப்பதுடன் தோல் மினுமினுப்பு உண்டாகும்.

மேட்டூர் அணை @ ஸ்டான்லி நீர்த்தேக்கம்

மேட்டூர் அணை சேலம் மாவட்டத்திலுள்ள மேட்டூர் என்னும் ஊரில் காவிரி ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள ஒரு அணையாகும். இது அணையைக் கட்டிய ஸ்டேன்லி என்பவரின் பெயரால் ஸ்டேன்லி நீ...ர்த்தேக்கம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த அணை 1934-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. இது தமிழகத்தின் மிகப்பெரிய அணையாகும். மேட்டூர் நீர்த்தேக்கம் கட்டி முடிக்கப்பட்ட போது, இது தான் ஆசியாவிலேயே மிக உயரமானதும் உலகிலேயே மிகப்பெரியதுமான ஏரியாக விளங்கியது.

1801 ஆம் ஆண்டு பிரிட்டிஸ் கிழக்கிந்திய சபை மேட்டூரில் அணைகட்டுவதற்கு முயன்றது அப்பொழுது மைசூர் சமஸ்தானம் ஆட்சேபணைகள் எழுப்பியபடியால் அத்திட்டம் கைவிடப்பட்டது. பின்பு 1835 ஆம் ஆண்டு சர் ஆர்தர் காட்டன் என்ற பொறியாளரைத் திரும்பவும் அணை கட்டுவதற்கு சம்மதம் பெற மைசூருக்கு ஆங்கிலஅரசு அனுப்பிவைத்தது. மைசூர் சமஸ்தானம் எதிர்த்ததால் முயற்சி கைவிடப்பட்டது.

1923ல் திருவாங்கூர் சமஸ்த்தானத்தில் உள்ள திவான் பகதூர் சர் சி.பி.ராமசாமி அய்யரிடம் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட விவசாயிகள் எடுத்து விளக்கினர். அவர் மைசூர் சமஸ்தானத்தாரை அணுகி திவான்பகதூர் விஸ்வேஸ்வரய்யா என்பவரிடம் இது குறித்து எடுத்துரைத்தார். அம் முயற்சிக்குக் காரணமும் உண்டு சர்.சி.பி.ராமசாமி அய்யரின் முன்னோர்கள் தஞ்சையைச் சேர்ந்தவர்களே. மைசூர் சமஸ்தானத்தார் மீண்டும் ஆட்சேபணைத் தெரிவிக்கவே, தஞ்சை மாவட்ட விவசாயிகள் ஒன்று சேர்ந்து புயல் மற்றும் வெள்ள சேதத்தினால் ஏற்படும் இழப்புகளுக்கு ஆண்டு தோறும் ரூ.30,00,000/- நஷ்டஈடாக மைசூர் சமஸ்தானத்தார்
கொடுக்கவேண்டும் என தஞ்சை மாவட்ட ஆட்சிதலைவர் மூலம் மைசூர் சமஸ்தானத்திற்கு நோட்டீஸ் கொடுத்தனர்.

(அன்றைய தேதிக்கு ஒரு பவுன் விலை ரூ.30/-மட்டுமே, அதன் படி கணக்கிட்டால் ரூ.30,00,000/-க்கு 1 லட்சம் பவுனாகிறது ) வருடாவருடம் ரூ.30,00,000/-கொடுப்பதைக் காட்டிலும் , மேட்டூரில் அணைகட்டுவதற்கு சம்மதம் கொடுப்பதே சிறந்தது என திருவாங்கூர் சமஸ்தான திவான் பகதூர் சர்.சி.பி.ராமசாமி அய்யர் எடுத்துக்கூறி மைசூர் சமஸ்தானத்தை சம்மதிக்கவைத்து சம்மதக்கடிதம் பெற்று தஞ்சை மாவட்ட ஆட்சித்தலைவருக்கு அனுப்பிவைக்க வைத்தார்.

அணை குறித்த திட்ட ஆய்வு பணி 1905ல் துவங்கி 1910 வரை நடந்தது. இறுதியில் மேட்டூரில் அணை கட்ட முடிவு செய்து, 1924 மார்ச் 31ம் தேதி இந்திய அரசின் ஒப்புதலுக்கு திட்ட அறிக்கை அனுப்பப்பட்டு, டிச.11ம் தேதி அரசு அனுமதி வழங்கியது. அதன்படி, 1925 ஜூலை 20ம் தேதி மேட்டூர் அணை கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

தலைமை வடிவமைப்பு மற்றும் கண்காணிப்பு என்ஜினியர் எல்லீஸ், நிர்வாக என்ஜினியர் வெங்கட்ராமையர், முதன்மை தலைமை இன்ஜினியர் முல்லிங்க்ஸ் தலைமையில் 24 என்ஜினியர்கள் அடங்கிய குழு அணை கட்டும் பணியை தொடங்கியது.

மேட்டூர் அணை கட்டும் பணியில் ஒன்பது ஆண்டுகாலம் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர். 1934ம் ஆண்டு ஜூலை 14ம் தேதி கடைசி கல் வைக்கப்பட்டு கட்டுமானப் பணி நிறைவு பெற்றது. அணையைக் கட்டி முடிக்க அப்போது ஆன செலவு ரூ.4.80 கோடியாகும். அப்போதைய சென்னை மாகாண கவர்னர் ஜான் பெடரிக் ஸ்டான்லி, 1934ம் ஆண்டு ஆகஸ்ட் 21ம் தேதி பாசனத்திற்கு நீரை திறந்து வைத்து, அணையை நாட்டிற்கு அர்ப்பணித்தார். ஆளுநர் ஸ்டான்லியின் பெயரையே அணைக்கும் சூட்டி, ஸ்டான்லி நீர்த்தேக்கம் என வைத்தனர்.

Monday, June 4, 2012

அணு உலையை மூடு... சூரியனுக்கு ஜே போடு!


சூரிய சக்தியைப் பயன்படுத்தி 22 ஜிகா வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்து, கடந்த வாரத்தில் சாதனைப் படைத்துள்ளது ஜெர்மனி. இது, வாரக் கடைசி நாட்களில் பாதி ஜெர்மனி பயன்படுத்தக்கூடிய மின்சார அளவாகும். ''20 அணு உலைகள் முழுநேரம் வேலை செய்தால் கிடைக்கக்கூடிய மின்சாரத்தின் அளவு இது'' என்று பெருமையோடு சொல்கிறது ஜெர்மனியின் புதுப்பிக்கவல்ல எரிசக்தி துறை!

உலக அளவில் சூரிய சக்தியை பயன்படுத்துவதில் அதிக ஆர்வத்தோடு இயங்கிவரும் நாடுகளில் ஜெர்மனி முக்கியமான நாடு. ஜப்பானின் புகோஷிமா அணுஉலை பாதிப்புக்குப் பிறகு, அணு உலைகளுக்கு எதிராக ஜெர்மனியில் வெடித்த மக்கள் போராட்டங்களையடுத்து, 8 அணு உலைகளை மூடி விட்டது ஜெர்மனி. மீதமுள்ள 9 அணு உலைகளையும் 2022-ம் ஆண்டுக்குள் மூடிடத் தீர்மானித்திருக்கும் அந்த நாடு, 'நாட்டுக்குத் தேவையான மொத்த மின்சாரத்தையும் கூடிய விரைவில் சூரிய ஓளி, காற்றாலை, இயற்கை எரிவாயு மூலமே தயாரிப்போம்' என்றும் அறிவித்திருக்கிறது!

Blogger templates

Help this Blog Click the link

Like

Facebook likes