சூரிய சக்தியைப் பயன்படுத்தி 22 ஜிகா வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்து, கடந்த வாரத்தில் சாதனைப் படைத்துள்ளது ஜெர்மனி. இது, வாரக் கடைசி நாட்களில் பாதி ஜெர்மனி பயன்படுத்தக்கூடிய மின்சார அளவாகும். ''20 அணு உலைகள் முழுநேரம் வேலை செய்தால் கிடைக்கக்கூடிய மின்சாரத்தின் அளவு இது'' என்று பெருமையோடு சொல்கிறது ஜெர்மனியின் புதுப்பிக்கவல்ல எரிசக்தி துறை!
உலக அளவில் சூரிய சக்தியை பயன்படுத்துவதில் அதிக ஆர்வத்தோடு இயங்கிவரும் நாடுகளில் ஜெர்மனி முக்கியமான நாடு. ஜப்பானின் புகோஷிமா அணுஉலை பாதிப்புக்குப் பிறகு, அணு உலைகளுக்கு எதிராக ஜெர்மனியில் வெடித்த மக்கள் போராட்டங்களையடுத்து, 8 அணு உலைகளை மூடி விட்டது ஜெர்மனி. மீதமுள்ள 9 அணு உலைகளையும் 2022-ம் ஆண்டுக்குள் மூடிடத் தீர்மானித்திருக்கும் அந்த நாடு, 'நாட்டுக்குத் தேவையான மொத்த மின்சாரத்தையும் கூடிய விரைவில் சூரிய ஓளி, காற்றாலை, இயற்கை எரிவாயு மூலமே தயாரிப்போம்' என்றும் அறிவித்திருக்கிறது!
No comments:
Post a Comment