| இன்றைய அறிவியல் உலகம் தகவல் தொடர்பு தொழில் நுட்பங்களின் மூலம் மிக உன்னதமான பிணைப்பை உலக மக்களிடையே எளிமையாக்கிவிட்டது. கண்ணிமைக்கும் நேரத்தில் கடல் கடந்து பறக்கும் குரல் ஒலிகளின் ஒப்புயவர்வற்ற செயல்பாடுகளுக்கு செல்பேசி முக்கிய பங்காகிவிட்டது. காடுகள் மேடுகள் எல்லாம் உழைத்து களைத்துப் போன ஏழைமக்கள் வாழும் குடிசைப்பகுதிகளின் சந்து பொந்துகளிலெல்லாம் சந்தடியில்லாமல் நுழைந்து சாகசம் படைத்து அவர்தம் வாழ்க்கைத் தொடர்பை வலுவாக்கி வருவதும் செல்பேசிகளே. செல்போன்களின் சேவைகள் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே செல்கின்றன. 2005 - ஆண்டு கணக்கெடுப்பின் படி உலகில் இதனை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 126 கோடியாக இருந்தது என்றும் அது, நாளொன்றுக்கு 46000 பேர் வீதம் புதிதாக அதிகரித்து வருவதாகவும் கணக்கிட்டுள்ளனர். இங்ஙனம் பரவிவரும் செல்பேசிகளின் பயன்பாடுகள் உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் கேடுகள் விளைவிக்கின்றன என்பதனை சமீபத்திய அறிவியல் ஆய்வுகள் தெளிவுபடுத்தி உள்ளன. இயற்கையின் இயற்கையான கதிர்வீச்சுகளிடையே அறிவியல் கண்டுபிடிப்புகளாகிய ஒயர்லெஸ், ரேடியோ, டிவி, ரேடார், செல்போன்கள் இவைகளின் இயக்கத்தால் வெளிவிடப்படும் ரேடியோ அலைகள், கதிரியக்க அதிர்வுகள், நுண்ணலை அதிர்வுகள், நுண்ணலை கதிர்வீச்சுகள் போன்றவை உயிர்களின் மீது பல்வேறு தீயவிளைவுகளை உருவாக்கி வருகின்றன. இதில் இன்றைய செல்பேசிகளே அபரிமிதமான விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்பதனை அறிய முடிகிறது. இது போலவே செல்பேசி "டவர்களும்" மிகவும் ஆபத்தானவை தான். அவற்றிலிருந்து வரும் பாதுகாப்பற்ற நுண்ணலை கதிர்வீச்சுகளில் சுமார் 60%, தலைப்பகுதிகளில் கிரகிக்கப்பட்டு, கொஞ்சம் மூளையினுள் ஊடுருவி செல்வதாக கண்டறிந்துள்ளனர். சிறுகுழந்தைகள் செல்பேசிகளை பயன்படுத்துவது மிகவும் பாதிப்பான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதனையும் பிரிட்டீஷ் தேசிய கதிரியக்க பாதுகாப்புக் கழகம் ஆய்வுகள் மூலம் கண்டறிந்துள்ளது. பெரியவர்களைவிட குழந்தைகளை 3.3 மடங்கு கதிர்வீச்சுகள் அதிகமாக பாதிக்கின்றன என்றும், குழந்தைகளின் மண்டைஓடுகள் மிகவும் மெல்லிய தன்மையுடையதாக இருப்பதால் அவை ஆபத்தான கதிர் வீச்சுகளினால் எளிதாக பாதிக்கப்படுவதால் 30 முதல் 40 வயதிற்குள் பெரும்பாலோருக்கு மூளைக்கட்டிகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன என்றும் உறுதிபடுத்தியுள்ளனர். செல்பேசிகளின் தீயவிளைவுகள் பற்றி பல்வேறு நாட்டைச் சேர்ந்த அறிவியல் அறிஞர்களின் தீவிர ஆய்வுகளில் பல உண்மைகள் வெளியாகி உள்ளன. இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த "ராப்பாபோல்ட் மருத்துவ அறிஞர்கள் அமைப்பு" செல்பேசி கதிர்வீச்சுகளை விலங்குகளில் பரிசோதனை செய்ததில் அவற்றின் கண்கள் வெகுவாக பாதிக்கப்படுவதாக கண்டறிந்துள்ளனர். கண்களுக்கு அருகில் செல்பேசி கதிர்வீச்சு செல்லும்போது வெப்பநிலை சுமார் 3டிகிரி செல்சியஸ் அதிகரிப்பதால் கண்புரை நோய்கள் எளிதில் (Cataract) உருவாவதனை கண்டுபிடித்துள்ளனர். அமெரிக்க அறிவியலறிஞர்கள் மேற்கொண்ட பல்வேறு ஆய்வுகளின்படி செல்பேசி பயன்படுத்துபவர்கள் பெரும்பாலோர் ஆண்மைக்குறைவு, விந்தணுக்குறைவு, மகப்பேறின்மை போன்ற ஆபத்திற்குள்ளாவதை கண்டுபிடித்துள்ளனர். இந்தியாவில் மும்பையைச் சேர்ந்த மருத்துவ அறிஞர்களும் பல்வேறு ஆய்வுகள் மூலம் இதை தெளிவுபடுத்தியுள்ளனர். சாதாரணமான மனிதர்களைவிட நாள்தோறும் குறைந்தபட்சம் நான்கு மணிநேரம் செல்பேசிகளை பயன்படுத்துவோரின் விந்தணு எண்ணிக்கை 25% குறைவாகவே காணப்படுவதனை அறிவியல் ஆய்வுகள் தெளிவுபடுத்தி உள்ளன. அமெரிக்க ஓஹியோவின், கிளீவ்லேண்ட் இனப்பெருக்க மருத்துவ ஆய்வு மையத்தின் இயக்குநர் பேராசிரியர் அசோக் அகர்வால் விலங்கினங்களில் மேற்கொண்ட ஆய்வுகளின்படி விந்தணுக்களை உருவாக்கும் செல்கள் மின்காந்த கதிர்வீச்சுகளினால் அல்லது அதனால் ஏற்படுத்தப்படும் வெப்பத்தினால் பாதிக்கப்படுவதனை கண்டறிந்து வெளியிட்டார். செல்பேசிகளை இடுப்பு பகுதியில் வைத்திருப்பவர்களின் அடிவயிறு, தொடையிணைப்பு பகுதிகள் எளிதில் சூடாவதும் இத்தகைய பாதிப்புகளுக்கு காரணமாகும். அன்னாள் நரம்பியல் ஆய்வுகளும், டாக்டர் பாவ்லோ ரோஷினியின் ஆய்வுகளும் செல்பேசி கதிர்வீச்சுகள் மூளை செல்களை தூண்டுகின்றன என்பதனை வெளிப்படுத்தியுள்ளன. இத்தகைய தூண்டுதல்கள் காக்கைவலிப்பு போன்ற விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என தெரிவித்துள்ளார். சுவீடன் தேசிய உழைப்பாளர் வாழ்வு மையம் வெளியிட்டுள்ள ஆய்வாளர்களின் அறிக்கையின் படி 2000 மணி நேரத்துக்கு மேல் செல்பேசியை பயன்படுத்திய 905 முதியவர்கள் மூளைப்புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதனை வெளிப்படுத்தியுள்ளனர். சாதாரணமாக செல்பேசி பயன்படுத்தாதவர்களை விட 3.7 மடங்கு அதிகமாக செல்பேசி பயன்படுத்துவோர் பாதிக்கப்படுகின்றனர் என்பதையும் ஒப்பிட்டுள்ளனர். இலண்டன் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் - மூன்று பிரிட்டிஷ் பல்கலை கழகங்களுடன் சேர்ந்து நான்கு ஆண்டுகளாக மேற்கொண்ட ஆய்வு முடிவுகள் படி அதிக செல்பேசி பயன்பாடு உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பதை கண்டறிந்துள்ளனர். எனவே செல்பேசி பயன்படுத்துவோர் குழந்தைகளிடம் செல்பேசிகளை கொடுப்பதை தவிர்க்கவும். செல்பேசி வைத்திருப்போர் கவனத்திற்கு : பேசும்போது உடலுக்கு சற்று தொலைவில் வைத்து பேசுவதும், வாய்ப்புகள் உள்ளபோது சாதாரண தொலைபேசிகளை பயன் படுத்துவதும். வாகனங்களில் செல்லும்போது கண்டிப்பாக செல்பேசி தொடர்புகளை தவிர்ப்பதும், அதிகமாக சூடாகும் வரை பேசுவதை தவிர்ப்பதும். செல்பேசி பயன்படுத்துபவருக்கு மிகவும் பாதுகாப்பானதாகும். |
வலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்
Saturday, December 10, 2011
செல்பேசிகளில் இருந்து வரும் ஒரு ஆபத்து.
கணினி கலைச் சொற்கள்
| கணினி கலைச் சொற்கள் |
| absolute address—தனி முகவரி absolute cell address — தனித்த நுண்ணறை முகவரி access — அணுக்கம், அணுகல் accuracy — துல்லியம் action — செயல் active cell — இயங்கு கலன் address modification — முகவரி மாற்றம் address — முகவரி addressing — முகவரியிடல் album — தொகுப்பு algorithm — வழிமுறை algorithm — நெறி முறை algorithmic language - நெறிப்பாட்டு மொழி alignment — இசைவு allocation — ஒதுக்கீடு alphabetic string — எழுத்துச் சரம் alphanumeric — எண்ணெழுத்து alphanumeric sort — எண்ணெழுத்து வரிசையாக்கம் alphanumeric — எண்ணெழுத்து and gate — உம்மை வாயில் animation — அசைவூட்டம் anti virus — நச்சு நிரற் கொல்லி append — பின் தொடர், பின்சேர் apperarance — தோற்றம் application — செயலி application — பயன்பாடு applications oriented language - பயன்பாட்டு நோக்கு மொழி applications program — பயன்பாட்டு நிரல்கள் applications programmer — பயன்பாட்டு நிரலர் applications programming - பயன்பாட்டு நிரலாக்கம் applications software — பயன்பாட்டு மென்பொருள் architecture — கட்டமைப்பு archive — பெட்டகம் archive — ஆவணக்காப்பகம் area search — பரப்பில் தேடல் arithmetic expression — எண்கணிதக் கோவை arithmetic operation - எண்கணித வினை arithmetic operator — எண்கணித வினைக்குறி array — வரிசை, அணி arrow key(direction key) — திசைப் பொத்தான் artificial intelligence — செயற்கை நுண்ணறிவு assembler — பொறிமொழியாக்கி assembly language — பொறி மொழி audio — ஒலி audio — ஒலியுணர் automated data processing — தன்னியக்கத் தரவுச் செயலாக்கம் automatic — தன்னியக்க autopilot — தன்னியக்க வலவன் auxiliary function — துணைச் செயல் கூறு axes — அச்சுகள் background — பின்னணி backspace — பின்னழிக்க, பின்வெளி backspace — பின்நகர்வு bad sector — கெட்ட துண்டம் bar chart — பட்டை வரைபடம் bar code - பட்டைக் குறிமுறை bar printer — பட்டை அச்சுப்பொறி bar-code scanner — பட்டைக் குறிமுறை வருடி batch processing — தொகுதிச் செயலாக்கம் bebugging — பிழைவிதைத்தல் bill — விலைப்பட்டியல் binary device — இரும நிலைக் கருவி binary digit — இரும இலக்கம் binary number — இரும எண் binary operation — இருமச்செயற்பாடு binary system — இரும எண்முறை binary — இரும bit map — பிட்டுப்படம் bit mapped screen — பிட்டுப் படத்திரை bit — நுண்மி, துணு, பிட்டு blank character — வெற்றுரு block diagram — கட்ட வரைபடம் block — கட்டம், தொகுதி blog — வலைப்பதிவு boot — தொடக்கு Brennen — எரிக்க browser — உலாவி browsing - மேலோடல் button(key) — பொத்தான் byte — எண்பிட்டு, எண்ணுண்மி cache memory — பதுக்கு நினைவகம் caculations — கணக்கீடுகள் caculator — கணிப்பான் calculating— கணக்கிடல் calculator mode— கணிப்பான் நிலை cancel — நீக்கு capacity — கொள்திறன் caps lock — மேலெழுத்துப் பூட்டு carriage return(CR) — ஏந்தி மீளல் catalog — அடைவு CD player — குறுவட்டு இயக்கி cell pointer — நுண்ணறைச்சுட்டி cell — சிற்றறை, நுண்ணறை center — மையம், மையப்படுத்து central processing unit(CPU) — மைய செயலகம் central processor — மையச் செயலி channel — தடம் character code — உருக்குறிமுறை character generator — உரு ஆக்கி character map — உரு விவரப்படம் character recognition — உரு அறிதல் character set — உருக்கணம் character string — உருச்சரம் character — வரியுரு character — உரு characteristic — படி chart — வரைபடம் clear —துடை click சொடுக்கு click— ‘கிளிக்’, அழுத்து client — சேவைக்கான பயன்பாடு client —வாங்கி clone — நகலி, போலிகை close - மூடு closed file — மூடிய கோப்பு coaxial cable — அச்சு ஒன்றிய வடம் code — நிரற்தொடர் code — குறிமுறை collection — திரட்டல் color coding — வண்ணக் குறிமுறை color graphics - வண்ண வரைவியல் column split — நெடுவரிசைப் பிரிப்பு column - நிரல், நெடுவரிசை column — நெடுவரிசை command key — கட்டளைத்திறவு command — கட்டளை, ஆணை comment — குறிப்புரை common storage — பொதுத் தேக்கம் communication — தொடர்பு communications link — தொடர்பு இணைப்பு communications processor — தொடர்பு செயலகம் communications satellite — தொடர்பு செயற்கைக்கோள் communications software — தொடர்பு மென்பொருள் compact disc (CD) — இறுவட்டு compaction — நெருக்கம் comparative operator — ஒப்பீட்டு இயக்கி compare — ஒப்பிடு comparison — ஒப்பீடு compilation — தொகுத்தல் compiler language — தொகுப்பு மொழி compiler — தொகுப்பி component — உறுப்புக்கூறு compuserve — கணிச்சேவை computation — கணிப்பு computer code — கணிப்பொறி நிரல் computer game — கணிப்பொறி விளையாட்டு computer graphics — கணிப்பொறி வரைவியல் computer network — கணிப்பொறி வலையமைப்பு computer operations — கணிப்பொறி சார் செயல்பாடுகள் computer user — கணிப்பொறி பயனர் computer utility — கணிப்பொறிப் பயனமைப்பு computer — கணிப்பொறி computer-aided manufacturing - கணிப்பொறிவலய உற்பத்தி computerised data processing — கணிப்பொறி வழித்தரவுசெயலாக்கம் computerization — கணிப்பொறிமயமாக்கல் computerized database — கணிப்பொறித் தரவுத் தளம் computing — கணிப்பு condition — நிபந்தனை, நிலை configuration — அமைவடிவம் console — முனையம் continuous scrolling — தொடர் உருளல் control key — கட்டுப்பாட்டுத்திறவுகோல் control program — கட்டுப்பாட்டு நிரல் control statement— கட்டுப்பாட்டுக் கூற்று control system—கட்டுப்பாட்டு அமைப்பு conversion— மாற்றம் convert — மாற்று cookie — நினைவி coordinates — ஆயத்தொலைவுகள் copy holder — நகல் தாங்கி copy protection — நகல் காப்பு copy — நகல் cordless — தொடுப்பில்லா core storage — வளையத் தேக்கம் cost analysis — விலை பகுப்பாய்வு cost benefit analysis — விலை பயன் பகுப்பாய்வு cost effectiveness — விலை பயன் திறன் costing — விலையிடல் counter — எண்ணி create — படை (படைப்பு) cursor control — சுட்டிக் கட்டுப்பாடு cursor key — சுட்டிப்பொத்தான் cursor tracking — சுட்டி பின் தொடரல் cursor — சுட்டி curve fitting — வளைகோட்டுப் பொருத்தம் custom software — தனிப்பயன் மென்பொருள் customize — தனிப்பயனாக்கு cut — வெட்டுக cut — வெட்டு cyber — மின்வெளி data — தரவு delete —அழிக்க design —வடிவமைப்பு digital — எண்முறை discovery — கண்டறிதல் driver — இயக்கி DRM: — காப்புரிமை edit — தொகுக்க firewall — அரண் floppy — நெகிழ்வட்டு folder — உறை format — வடிவூட்டம், வடிவூட்டு function — செயற்பாடு gallery — காட்சியகம் graphics — வரைகலை guest — வருனர் home — முகப்பு, அகம் homepage — வலையகம், வலைமனை icon — படவுரு information — தகவல் interface — இடைமுகப்பு interpreter — வரிமொழிமாற்றி invention — கண்டுபிடிப்பு IRC- இணையத் தொடர் அரட்டை LAN — உள்ளகப் பிணையம் license — உரிமம் link — இணைப்பு, தொடுப்பு, சுட்டி live cd — நிகழ் வட்டு log in — புகுபதிகை, புகுபதி log off — விடுபதிகை, விடுபதி media player — ஊடக இயக்கி menu — பட்டியல் microphone — ஒலிவாங்கி network — பிணையம், வலையம் object — பொருள் offline — இணைப்பறு online — இணைப்பில் package — பொதி password — கடவுச்சொல் paste — ஒட்டுக patch — பொருத்து plugin — சொருகு, சொருகி pointer — சுட்டி portal — வலை வாசல் preferences — விருப்பத்தேர்வுகள் preview — முன்தோற்றம் processor — முறைவழியாக்கி program — நிரல் proprietary — தனியுரிம RAM — நினைவகம் redo — திரும்பச்செய்க refresh — மீளேற்று release — வெளியீடு repository — களஞ்சியம் row — நிரை, குறுக்குவரிசை screensaver — திரைக்காப்பு server — வழங்கி settings — அமைப்பு shortcut — குறுக்குவழி shutdown — அணை sign in — புகுபதிகை, புகுபதி sign off — விடுபதிகை, விடுபதி skin — ஆடை space — வெளி, இடைவெளி speaker — ஒலிபெருக்கி spreadsheet — விரி தாள் subtitle — உரைத்துணை, துணையுரை system — கணினி tab — தத்தல் table — அட்டவணை terminal — முனையம் theme — கருத்தோற்றம், தோற்றக்கரு thumbnail — சிறுபடம் undo — திரும்பப்பெறுக update — இற்றைப்படுத்தல், இற்றைப்படுத்து upgrade - மேம்படுத்து, மேம்படுத்தல் URL — முகவரி version — பதிப்பு video — நிகழ் படம் view — பார்க்க virus — நச்சு நிரல் volume — ஒலியளவு wallpaper — மேசைப்பின்னணி window — சாளரம் wireless — கம்பியில்லா wizard — வழிகாட்டி worksheet — பணித் தாள் அகலப்பட்டை — இணைப்பு (Breitband) அலுவலகப் பயன்பாடு - Office Application அழித்தல் — Deletion, Removal அழிப்பான், எரேசர் — Eraser அனுமதி — Permission ஆவணங்கள் — Documents இண்டெர்நெட் எக்ஸ்ப்ளோரர் — IE – Internet Explorer இணைய இயங்குதளம் — Web Operating System இயக்கிகளை — (drivers) இயங்குதளம் — Operating System உலவி — Browser உலவி — Web Browser எண்முறை (டிஜிடல்) உரிமைகள் முகாமைத்துவம் — Digital Rights Management ஐகான் — Icon ஒலிப்பான்+ஒலிவாங்கி - Head phone with Mic ஒலிவட்டுகள் — (Compact Disk) ஒளியிழைகளைக்கான — (Lichtleiter) கடவுச்சொல் — Password கடனட்டை — Credit Card காணொளி — Video குறுக்கு தட்டாச்சு — Shortcut கையடக்கக் கணினி, கருவிகள் — PDA – Personal Digital Assistant கோப்பு — File கோப்புகள் — Files கோப்புப்பகிர்வான் — File Sharing சிடியில் எரித்தல் — CD Burning சுட்டிகளில் — (links) செயலியை — program செல்பேசி — Mobile / cell phone சொடுக்கி — klick டீம்வியூவர் — Team viewer தகவல் — Information, Data தரவிறக்கம் — Download தரவுத்தளமாக — (Database) நிறுவுதல் — Installation நினைவகம் — memory (RAM) நீட்சிகள் — (Firefox add-ons) பகிரப்பட்ட கோப்புகள் - Shared Files பணிச்சூழல் — Working Environment பயன்பாடுகள் — Software Applications பயனர் கணக்கு — User Account பார்க்க — Read மடிக்கணினி — Laptop மாய — Virtual மாற்றியமைக்க — Edit மீட்பான் — Recovery tool முரண்பாடு — incompatible மூலவரைவு — Source Code மென்நூல் — E-book மென்பொருள் — Software / Application மைக்ரோசாப்ட் ஆபீஸ் — Microsoft Office வருடச் சந்தா — Yearly fee வரைகலை — Graphics வன்பொருள் — Hardware வன்வட்டு — Hard disk விண்டோஸ் விஸ்டா — Windows Vista வீட்டுக்கணினி — Home PC வீட்டுத் தொலைபேசி - Home based Fixed Wired / Wireless phone வேகமான இணைய இணைப்பு — Fast Internet Connection |
Subscribe to:
Posts (Atom)
