பெர்முடா முக்கோணம் வட அட்லாண்டிக் கடலின் மேல்பகுதியில் உள்ளது இது பெர்முடா, ப்ளோரிடா, போர்டேரிகோ பகுதிகளுக்கு இடைப்பட்ட ஒரு முக்கோண வடிவ கடல் பகுதியாகும் . இந்தப் பகுதியில் பல விமானங்கள் மற்றும் கப்பல்க
கள் எந்த வித மனித தவறுகள் , இயந்திர கோளாறு, இயற்கை சீற்றம் இவை எதுவும் இல்லாமல் மர்மமான நிலைகளில் காணமல் போவதும், விபத்துகுள்ளவதும் புரிந்து கொள்ள இயலாத புதிராக இருக்கிறது.
இந்த மர்மம் முதன் முதலில் வெளிச்சத்துக்கு வந்தது 1945ம் ஆண்டுதான்,1945ம் ஆண்டு பயிற்சிக்காக புறப்பட்டு சென்ற அமெரிக்க கடற்படையை சேர்ந்த flight19 எனும் விமானம் அட்லாண்டிக் மீது பறக்கையில் மறைந்து போனது. போர்க்கப்பலில் இருந்து விமானப் பாதை, கிழக்கே 120 மைல்*, வடக்கே 73 மைல்கள்* பின் மீண்டும் இறுதியாக 120 மைல்* பயணத்தில் கடற்படை தளத்திற்கு திரும்புவது என்று திட்டமிடப்பட்டிருந்தது,
வானிலை காரணமாக விமானம் விபத்துக்குள்ளகி இருக்கலாம் என்று அனைவரும் கருதினர்.ஆனால் வானிலை ஆரய்ச்சியின் படி அன்று வானிலை மிக அமைதியாக இருந்ததாகவும், அந்த விமானத்தை ஒட்டிய விமானி மிக அனுபவசாலி என்றும் கூறப்பட்டது.
இதனை தொடர்ந்து காணாமல் போன விமானத்தை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது விமானத்தை தேடி 13 பேர் கொண்ட மீட்பு குழு ஒன்று இன்னொரு விமானத்தில் புறப்பட்டு சென்றது ஆனால் பயிற்ச்சி விமானத்தை போல மீட்பு விமானமும் மாயமாக கானாமல் போனது.இன்று வரை இரண்டு விமானங்ககளுகும் அதில் பயனித்தவர்களுகும் என்ன ஆனது என்பது யாருக்கும் தெரியாது.
அமெரிக்கா மற்றும் ரஷ்ய விஞ்ஞானிகள் கூட்டாக பெர்முடா முக்கோண மர்மம் பற்றி ஆராய, நவீன கருவிகளுடன் சென்றனர். இந்த ஆரய்ச்சி குழுவில் இருந்த 16 பேர் ஏதோ ஒரு விசையால் செலுத்தப்பட்டவர்கள் போல் திடீரென்று மூழ்கி போயினர். எப்படி மூழ்கினர் என்று மற்றவர்களால் கண்டுபிடிக்கவே முடியவில்லை.
பல ஆய்வுகளின் படி இதுவரை சுமார் 40 கப்பல்களும் , 20 விமானங்களும், சிறு சிறு மரக்கலகளும் இதுவரை பெர்முடா முக்கோணம் பகுதிகளில் கானாமல் போனதாக தெரியவருகிறது,
இந்த மாய மர்மங்களுக்கு பலர் பல வித விளக்கம் அளித்துள்ளனர்.
இதில் சிலரின் கருத்து
பூமியின் புவியீர்ப்பு விசை இந்த பகுதியில் அதிகமாக இருக்கலாம் என் கருதப்படுகிறது,
பல 100 -ஆண்டுகளுக்கு முன்பு இந்த பகுதியில் இருந்த தீவு பகுதி ஒன்று கடலில் மூழ்கி இருக்க வேண்டும். அளவுக்கதிகமான நீர்சுழற்சி காரணமாக இப்படி நடைபெறுகிறது என் கருதப்படுகிறது.
No comments:
Post a Comment