Thursday, January 26, 2012

நாம் அனுப்பிய மெயில் படிக்கப்பட்டு விட்டதா என கண்டறிய


 

நாம் நண்பர்களுக்கோ அல்லது அலுவலக தேவைக்கோ ஏதாவது முக்கிய மெயில் ஒன்றை அனுப்புவோம். ஆனால் அந்த மெயிலுக்கு எந்த ரிப்ளையும் வராது ஏன் ரிப்ளை அனுப்பவில்லை என்று கேட்டால் நீங்கள் அனுப்பிய மெயில் எனக்கு வரவே இல்லை என்றும் நான் மெயிலை படிக்கவே இல்லை என்றும் ஒரு அபாண்டமான பொய்யை நமக்கு கூறுவார்கள். நாமும் என்ன செய்வதென்று தெரியாமல் அனுப்பிய மெயிலை திரும்பவும் அனுப்புவோம்.
இந்த பிரச்சினையை தீர்க்க ஒரு வழி உள்ளது. நாம் அனுப்பிய மெயிலை படித்தவுடன் நமக்கு ஒரு அறிவிப்பு செய்தி வந்தால் இந்த பிரச்சினையை தீர்க்கலாம். அதை எப்படி செய்வது என்று கீழே பார்ப்போம்.
  • முதலில் உங்கள் மெயிலில் நுழைந்து கொள்ளுங்கள். எப்பவும் மெயில் அனுப்புவது போல Compose பகுதிக்கு சென்று நீங்கள் அனுப்ப வேண்டிய செய்திகளை எப்பவும் போல டைப் செய்து கொள்ளுங்கள். 
  • இப்பொழுது உங்கள் மெயில் அனுப்ப தயாராக உள்ளதா இப்பொழுது இந்த லிங்கில் SpyPig செல்லுங்கள்.


  1. உங்கள் ஈமெயில் முகவரியை கொடுங்கள்.
  2. நீங்கள் அனுப்பும் மெயிலில் சப்ஜெக்ட்டில் கொடுத்துள்ளதை இங்கு கொடுங்கள்.
  3. இதில் உள்ள picture களில் உங்களுக்கு தேவையானதை தேர்வு செய்து கீழே உள்ள Create My SpyPig என்ற பட்டனை க்ளிக் செய்யவும்.
  4. பட்டனை க்ளிக் செய்த உடனே கீழே வந்திருக்கும் அந்த படத்தை காப்பி செய்து உங்கள் மெயில் பகுதியில் பேஸ்ட் செய்து விடுங்கள் இவற்றை 60 வினாடிகளுக்குள் செய்து முடிக்க வேண்டும். 
  • அவ்வளவு தான் இனி நீங்கள் உங்கள் மெயிலை வழக்கம் போல அனுப்பி விடுங்கள். 
  • இனி நீங்கள் அனுப்பிய மெயில் படிக்க பட்டவுடன் உங்களுக்கு கீழே இருப்பதை போல அறிவிப்பு செய்தி வரும்.
  • நீங்கள் நீங்கள் மெயில் அனுப்பிய நேரமும் நீங்கள் அனுப்பிய மெயில் படிக்கப்பட்ட நேரம்,இடம்,கணினியின் ஐ.பி. எண் ஆகிய அனைத்து விவரங்களும் வந்திருக்கும்.
  • மற்றும் எத்தனை முறை உங்கள் ஈமெயில் ஓபன் செய்யப்பட்டுள்ளது என்ற விவரமும் வரும்.
  • இனி அவர்கள் உங்கள் மெயிலை ஓபன் செய்யும் ஒவ்வொரு தடவையும் உங்களுக்கு ஒரு அறிவிப்பு செய்தி வரும்.
  • இதே முறையில் நீங்கள் மற்ற மெயில்களை அனுப்பினால் யாரும் நம்மிடம் மெயிலை படிக்கவில்லை என்று பொய் கூற முடியாது.

No comments:

Post a Comment

Blogger templates

Help this Blog Click the link

Like

Facebook likes