Sunday, November 6, 2011

மென்பொருளை தரவிறக்க சுட்டிஅதிக நாட்களாக பயன்படுத்தப்படும் வன்தட்டுகளில் பலவிதமான கோளாருச் செய்திகள் காணப்படும். விண்டோஸ் நிறுவப்பட்டுள்ள கணினியில் இதுபோன்ற கோளாருச் செய்திகள் அதிகமாக காணப்படும். வன்தட்டில் மென்பொருள்களை நிறுவி பயன்படுத்துவோம் தேவை இல்லையெனில் மென்பொருள்களை நம்முடைய கணினியில் இருந்து நீக்கி விடுவோம். கணினியில் இருந்து நீக்கப்படும் மென்பொருளானது முழுமையாக நம்முடைய கணினியை விட்டு நீங்காது. மேலும் ஒரு சில பைல்கள் நம்முடைய கணினியிலேயே தங்கிவிடும் அந்த பைல்களால் நம்முடைய கணினியில் அடிக்கடி ஏரர் செய்தி காட்டும். வன்தட்டில் மென்பொருள்களை நிறுவும் போது செக்டர் பகுதிகளாகவே சேமிக்கப்படும். மென்பொருள்களை நீக்கும் போது குறிப்பிட்ட பகுதி மட்டும் வெற்றிடமாக்கப்படும் இந்த பகுதிகளில் மீண்டும் தகவல் பதியப்படும் முழுமையாக இல்லை குறிப்பிட்ட பகுதியில் மட்டும், மற்றவைகள் வழக்கம் போல காலியாக உள்ள இடத்தில் பதியப்படும். இதனால் வன்தட்டில் எரர் செய்தி வருவதோடு கணினி தொடக்கமும் மந்தமாகும். இதுபோன்ற எரர் செய்திகளை சரிசெய்ய ஒரு மென்பொருள் உதவி செய்கிறது.

இந்த மென்பொருளை இணையத்தின் உதவியுடன் பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்து வேண்டிய ட்ரைவ் கோலனை தேர்வு செய்து, Read only பொதானை அழுத்தி சோதனை செய்து கொண்டு, எரர் செய்தி இருப்பின் Fix பொத்தானை அழுத்தவும். எரர் செய்திகளை நீக்கம் செய்ய வேண்டுமெனில் Fix and Recover பொத்தானை அழுத்தி இந்த எரர் செய்திகளை மீட்டுக்கொள்ள முடியும். பின் கணினியை மறுதொடக்கம் செய்து கொள்ள வேண்டும். இந்த மென்பொருளானது இலவச மென்பொருள் ஆகும். விண்டோஸ் 7 ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்திற்கு இந்த மென்பொருள் சிறந்தது ஆகும். வன்தட்டினை சீரமைக்க இந்த மென்பொருள் சிறந்தது ஆகும்.

Google new Laptop

குகிள் நிறுவனம் ஒரு புதிய வகையான லேப்டாப்பை அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த லேப்டாப்புக்குள் புரோக்ராம்கள் எனப்படும் மென்பொருள்கள் கிடையாது. அவை லேப்டாப்புக்குள் இல்லையே தவிர, அவை எங்கோ ஒரு கண்ணுக்கு புலப்படாத இடத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. அந்த இடத்தை கிளவுட் என்று கூறுகிறார்கள்.

இந்த லேப்டாப் கொண்டு நீங்கள் ஏதாவது செய்ய வேண்டும் என்றால், இந்த லேப்டாப்பில் இருந்து இண்டர்நெட் மூலமாக அந்த கண்ணுக்கு புலப்படாத இடத்தில் உங்கள் புகைப்படங்களை, ஆவணங்களை எல்லாவற்றையும் சேமித்து வைக்கலாம். தேவைப்படும் போது எடுத்து பயன்படுத்தலாம்.

இப்படி லேப்டாப்புக்குள் சேமித்து வைக்கும் மென்ப்பொருள் மூலமாக செய்யும் அனைத்து வேலைகளையும், லேப்டாப்பில் மென்பொருள் இல்லாமல் எங்கோ சேமித்து வைத்திருக்கும் மென்பொருளை இண்டர்நெட் மூலமாக பயன்படுத்துவதால் லேப்டாப்புகளின் விலை குறையும், அதிக செயல்திறன் தேவையில்லை, அடுத்ததாக விரைவாக லேப்டாப்பை உயிர்பித்து விடலாம், பேட்டரி எனப்படும் மின்சக்தி நேரமும் நீட்டிக்கலாம் என்பது போன்ற பலன்கள் கிடையாது என்று கூறுகின்றனர்.

இந்த கருத்தை பிரதிபலிப்பவர் தொழில்நுட்ப நிபுணரான ரூபர்ட் குட்வின்ஸ், இவர் ‘இசட் டி நெட்’என்னும் சஞ்சிகையின் ஆசிரியர். அத்தோடு இந்த புதிய நுட்பத்தால், மைக்ரோசாப்ட் நிறுவனம் தான் அதிகம் பாதிக்கப்படும் என்றும் அவர் கூறுகிறார். ஏனென்றால் தற்சமயம் உலகத்தில் இருக்கும் லேப்டாப்புகளில் 90 சதவீதம், இவர்களின் மென்பொருள் தயாரிப்புகளால் தான் இயங்கி வருகின்றன.

அதே சமயம், இண்டர்நெட் இணைப்பு இருந்தால் மட்டுமே பெரும்பாலான செயல்களை இந்த லேப்டாப்பில் செய்ய முடியும் என்பதையும் கவனிக்க வேண்டும். ஏனென்றால் இன்னமும் உலகத்தின் பல பகுதிகளில் இண்டர்நெட் சேவை என்பது முழுதாக கிடைக்கவில்லை, அல்லது தங்கு தடையின்றி கிடைக்கவில்லை. இது போன்ற காரணங்களால் குகிளின் குரோம்நோட்புக் விற்பனை எப்படி இருக்கும் என்பது சரியாக கூற முடியவில்லை.

இதற்கிடையே, ஒரு சில நிபுணர்கள் குகிளின் இந்த லேப்டாப் புரட்சி ஒன்றும் கிடையாது, இது ஒரு பரிணாம வளர்ச்சி தான், ஏனென்றால் இன்றுள்ள நவீன செல்போன்கள், டேப்ளட் கம்ப்யூட்டர்கள் எனப்படும் சின்னஞ்சிறு கம்ப்யூட்டர்கள் எல்லாம் இந்த முறையிலேயே இயங்கி வருகின்றன என்பதை குறிப்பிடுகின்றனர்.

நன்றி பிபிசி

கணணியில் சிக்கிக்கொண்ட சீடியை வெளியே எடுப்பதற்கு

நீங்கள் அடிக்கடி சீடி பயன்படுத்துபவராக இருந்தால் இந்த சூழ்நிலையில் நீங்கள் என்றாவது சிக்கி இருப்பீர்கள்.
ஆம் உங்கள் சீடி கணணியின் சீடி டிரைவில் இருந்து வெளியே வராமல் உங்களை மோசமான நிலையில் சிக்க வைக்கும்.
எத்தனை முறை சீடி டிரைவின் எஜெக்ட் பட்டனை அழுத்தினாலும் அப்படியே டிரைவ் வெளியே வராமல் இருக்கும். இந்த சூழ்நிலையில் என்ன செய்தால் சீடி டிரைவ் திறக்கப்பட்டு சீடி வெளியே எடுக்கும்படி கிடைக்கும் என்பதனைப் பார்க்கலாம்.

முதலில் சீடி டிரைவ் திறக்கப்பட்டு சிடி இருக்கும் அந்த பிளாஸ்டிக் ட்ரே வெளியே நீண்டு வரவில்லை என்றால் கவலைப்படாதீர்கள். இந்த சூழ்நிலையை சமாளித்து சீடியை கீழ்க்காணும் வழிகளைக் கையாண்டு வெளியே எடுக்கலாம்.

வழி 1: மை கம்ப்யூட்டர் ஐகானில் கிளிக் செய்திடுங்கள். உங்கள் டெஸ்க்டொப்பில் இந்த ஐகான் இல்லை என்றால் நிச்சயம் ஸ்டார்ட் மெனுவில் இருக்கும். இதனைத் திறந்தவுடன் உங்கள் கணணியின் டிரைவ்கள் அனைத்தும் காட்டப்படும்.

இதில் Devices with removable stroage என்ற பிரிவில் சீடியின் படத்துடன் ஒரு ஐகான் இருக்கும். அல்லது சிக்கிக் கொண்ட சீடி ஏதேனும் ஒரு நிறுவனம் தந்துள்ள பேக்கேஜ் என்றால் நிறுவனம் தந்துள்ள ஐகானுடன் அந்த டிரைவ் காட்டப்படும்.

இதன் மீது ரைட் கிளிக் செய்திடுங்கள். கிடைக்கும் மெனுவில் Eject என்ற பிரிவில் கிளிக் செய்திடுங்கள். உங்கள் சீடி டிரைவில் உள்ள எஜெக்ட் பட்டன் தேய்ந்து போய் நீங்கள் அழுத்துகையில் அதன் செயல்பாடு மேற்கொள்ளப்படாத சூழ்நிலையில் இந்த வழி செயல்படும். இதற்கும் சீடி டிரைவ் திறக்கவில்லை என்றால் அடுத்த வழியைப் பார்க்கலாம்.

வழி 2: பேப்பர் கிளிப் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். (ஜெம் கிளிப் என்றும் சிலர் இதனை அழைக்கின்றனர்) அதன் ஒரு முனையை பிரித்து நீட்டுங்கள். சீடி டிரைவின் எஜெக்ட் பட்டன் அருகே சிறிய துளை இருப்பதைக் காணுங்கள். நிச்சயம் இதுவரை நீங்கள் இதனைக் கண்டு கொள்ளாமல் இருந்திருப்பீர்கள்.

இப்போது நிச்சயம் இதன் உதவி வேண்டியதிருக்கிறது. இந்த துளையில் மெதுவாக பிரித்த பேப்பர் கிளிப்பின் சிறிய கம்பியை உள்ளே செலுத்தவும். சிறிது உள்ளே செலுத்தியவுடன் அது ஒரு இடத்திற்கு மேல் செல்லாது.

இந்த இடத்தில் சிறிய அளவில், மிகச் சிறிய அளவில் அழுத்தம் கொடுக்கவும். எஜெக்ட் செய்யும் போது இயங்கும் இன்டர்னல் லாக் உள்ள இடத்தில் இந்த அழுத்தம் கிடைப்பதால் டிரைவின் கதவு திறக்கும்.

உடனே சீடியை எடுத்துவிட்டு மீண்டும் டிரைவின் கதவினை மூடவும். மறக்காமல் பேப்பர் கிளிப் பின்னை எடுத்துவிடவும். ஏனென்றால் பலர் சீடி வெளியே வந்த சந்தோஷத்தில் பேப்பர் கிளிப்பைச் செருகியபடியே வைத்துவிடுவார்கள்.

Computer tips

எந்த ஒரு மென்பொருளின் துணையும் இல்லாமலேயே உங்கள் ரகசிய கோப்புகள் அடங்கிய கோப்பறைகளை மறைக்கலாம்.

இதற்கான எளிய வழி ஒன்று உள்ளது.
முதல் வழி: Start==>RUN==>cmd
அதாவது Start பட்டனை அழுத்தி அதில் ரன் என்பதை தேர்ந்தெடுக்கவும். தோன்றும் ரன் விண்டோவில் cmd என்று தட்டச்சிடுங்கள்.

Command Prompt விண்டோ ஓப்பன் ஆகும். அதில் D: என தட்டச்சிடுங்கள். மறைக்க வேண்டிய கோப்பறை உள்ள டிரைவின்(D,E,F) பெயரை உள்ளிடவும்.

E டிரைவில் வைத்திருந்தால் E: என உள்ளிட்டு என்டர் தட்டுங்கள். D என்றால் D: என தட்டச்சிட்டு என்டர் பட்டன் தட்டுங்கள்.

இப்போது D:/> இவ்வாறு தோன்றும். அதனருகில் இடைவெளி இல்லாமல் attrib +h +s foldername என தட்டச்சு செய்யுங்கள்.

உதாரணத்திற்கு D:/>attrib +h +s foldername.

இங்கு folder name என்பதற்கு பதில் நீங்கள் மறைக்க விரும்பும் கோப்பறையின் பெயரைக் கொடுக்கவும். உதாரணத்திற்கு கோப்பறையின் பெயர் songs என இருந்தால் songs என டைப் செய்யுங்கள். D:/>attrib +h +s songs இவ்வாறு உள்ளிட்டு என்டர் தட்டுங்கள். இப்போது நீங்கள் மறைக்க விரும்பும் கோப்பறை காணாமல் போய் இருக்கும்.

மீண்டும் பெற விரும்பினால் முன்னது போலவே செய்து + குறிக்கு பதில் – குறி இட்டால் போதும்.

அதாவது D:/>attrib -h -s songs என்பதை டைப் செய்து என்டர் தட்டினால் மறைந்திருந்த கோப்பறை உடனே கண்ணுக்குத் தெரியும்.

Thiruppanandal web video


Friday, November 4, 2011

Amolet Cellphones Can not broken




மிகமிக ஸ்லிம்மான செல்போனை சாம்சங் அடுத்த ஆண்டில் அறிமுகப்படுத்த உள்ளது. ‘அமோலெட்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த செல்போனை பேப்பர் போல முறுக்க, வளைக்க முடியும். சுத்தியலால் அடித்தாலும் வளைந்து கொடுக்குமே தவிர, உடையாது என்பது இதன் சிறப்பம்சம்.
தென்கொரியாவை சேர்ந்த சாம்சங் நிறுவனம் புதுப்புது வசதிகளுடன் கூடிய செல்போன்களை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது. வளைத்தாலும் ஒன்றும் ஆகாத செல்போனை 2012-ம் ஆண்டு மே மாதம் அறிமுகப்படுத்த உள்ளது.
வளைத்தாலும் பாதிக்கப்படாத ‘பிளெக்சிபிள்’ செல்போனை உருவாக்க வேண்டும் என்பது சாம்சங் நிறுவனத்தின் நீண்ட கால கனவு திட்டம். அதன் வடிமைப்பு பணிகள் தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. ‘அமோலெட்’ என்று இதற்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஸ்கிரீன் நாலரை இஞ்ச் நீளம் இருக்கும்.
செல்போனின் தடிமன் வெறும் 0.3 மி.மீ. மட்டுமே இருக்கும். 1 ஜிபி ராம், 1.2 ஜிகாஹெர்ட்ஸ் பிராசசர் திறன் கொண்டது. 8 மெகாபிக்சல் கேமரா வசதியும் உள்ளது.
கிராபீன் கார்பன் பயன்படுத்தி ஸ்கிரீன் தயாரிக்கப்பட்டுள்ளது. சுத்தியலால் அடித்தாலும் உடையாது.

Blogger templates

Help this Blog Click the link

Like

Facebook likes